இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், பிப்ரவரி 23, 2017

ஷீரடி தரிசனம்....


எங்கள் குழுவில் அனைவரும் ஏற்கெனவே பலமுறை விமானப் பயணம்  செய்தவர்கள் 

ஆகையால்  எல்லோருக்கும்  அதன் பார்மாலிட்டீஸ்   அத்துப் படி . எல்லாம் முடிந்து விமானத்தில் ஏறினோம்.

காலை சரியாக 5.35 க்கு விமானம் மேலே பறந்ததது. கீழே வேடிக்கை பார்ப்பது எல்லாம் விமானம் மேலே 

செல்லும் வரை தான் .அதன் பிறகு ஒரே போர் ..விமானம் பறப்பது போலவே இருக்காது.எதோ மேலே ஒரு 

இடத்தில் நாம் நின்று கொண்டு இருப்பது போலத்தான் இருக்கும்.


எல்லோரும் பணிப்பெண்களை பார்த்து ஜொள்ளு விட்டபடி பயணித்தோம்.ஏராளமான உதட்டுச் 

சாயத்துடன் சிகப்பான உதடு, சுமாரான அழகுடன் இருந்தார்கள். காலை நேரம் ஆதலால் சிறிய 

சிற்றுண்டி   பேக் தந்தார்கள்.சைவம் அசைவம் இரண்டும் இருந்தது.கோவிலுக்குச் செல்வதால் எங்கள் 

குழுவில் அனைவரும் சைவமே வாங்கினோம்.. மிகவும் மோசமான ஒரு உணவாக அது இருந்தது.

பாவம்,கடமைக்காக  ஒரு சிற்றுண்டியை தருகிறார்கள்.( ஜெட் ஏர் வேஸ் )


எங்கள் குழுவுடன் பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு குடும்பமும் பயணித்தது. அதில் வந்த ஒரு வயதான பாட்டி 

தனது முந்தய விமான பயணங்களின் அனுபவங்களை கூறிய படி வந்தார்.சிங்கப்பூர் ,மலேசியா உள்பட பல 

நாடுகளுக்கு சென்றவாரம்...!  இந்த முறை இரண்டு மருமகள் களைக்  கூட்டி வரவில்லை என்றும் அடுத்த 

முறைக்கு கூட்டி வர வேண்டும் என்றும்  கூறினார்.
  .

சிற்றுண்டியோடு காபி அல்லது டீக்கு என சிறிது சர்க்கரை மற்றும் பால் பவுடர் பாக்கெட் ட்டும் கொடுத்தனர். 

ஆனால் கடைசி வரை  டிகாக்ஷனைக் கண்ணில் காட்டாததால் அது வீணானது.நான் அப்படியும் விடாமல் 

டிகாக்ஷனைக் கேட்டேன்.. விமானம் இறங்கப்  போகிறது சாரி என்றாள்  அந்த பணிப் பெண்...!













செவ்வாய், பிப்ரவரி 21, 2017

ஷிரிடி ஒரு இனிய பயணம் - தரிசனம் 

நீண்ட நாட்களுக்கு -இல்லை, இல்லை நீண்ட வருடங்களுக்குப்பிறகு  எனது பிளாக்கில் எழுதுகிறேன்.
அது ஷிரிடி சாய் பாபாவின் அருளால் .


பல நாட்களாக ஒரு எண்ணம் ஷிரிடிக்குப் போய்  வர வேண்டும் என்று.அது அவ்வளவு சுலபம் அல்ல .எப்போது பாபா அழைக்கிறாரோ அப்போது தான் முடியும் என்பது வரலாறு.அப்படித்தான் எங்களுக்கும்.எனது நண்பன் அடிக்கடி ஷீரடி செல்லும் பாக்கேஜ் டூர் பற்றிய விவரங்களை பார்த்து பார்த்து சொல்வான்.ஒவ்வொரு முறையும் ஒருவர் செல்லலாம் என்பார் மற்றவர்களால் முடியாது.இவ்வாறு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தள்ளிப் போய் இப்போது தான் அது கனிந்தது.

பிரவரி 18 ஆம் நாளில் புறப்பட விமான சீட்டு எடுக்கப் பட்டது.18 மற்றும் 19 இரண்டு நாட்கள் ஷீரடி மற்றும் மும்பாய் பயணம் என திட்டம்.

எனது நண்பர்கள் ஸ்ரீரங்கத்திலிருந்து 17 ம் தேதி கிளம்ப நான் மட்டும் ஒரு வாரம் முன்பே சென்னை வந்து விட்டேன்.

18 ம் தேதி அன்று காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து 5 மணிக்கு நான் சென்னை விமான நிலையம் சென்றேன்.அங்கு எனக்கு முன்பே பல்லாவரம் வந்து தங்கி இருந்த நண்பர்கள் அங்கிருந்து விமான நிலையம் வந்து காத்திருந்தார்கள்.

5.35 க்கு விமானம் .நாங்கள் எண்கள் செக் இன்  பார்மாலிட்டிகளை முடித்து விட்டு விமானம் ஏறினோம்.விமானம் கிளம்பத்  தயாரானது.






ஆகாயத்தில் பூகம்பம் அற்புதங்கள் ஆரம்பம் ...என்ற நினைத்தாலே இனிக்கும் பாடல் எங்கோ ஒலித்தது....!