சமீபத்தில் ஒரு செய்தி.ஒரு பெண்ணின் தந்தை நல்ல வேலையில் இருப்பவர்.தனது மகள் தனது ஜாதி அல்லாத வேறு ஜாதியைச் சேர்ந்த பையனை திருமணம் செய்ததால் ஆட்களை வைத்து அவரே தனது மருமகனை கொலை செய்து விட்டார். ஏன் என்றால் உலகம் அவரை கேலி செய்யுமாம்.அவரது மானம் மரியாதை எல்லாம் போய் விட்டதாம்.இத்தனைக்கும் பையனும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, நல்ல வேலையில் உள்ள பையன் தான்.ஆனால் ஊர் உலகம் என பயந்து மனம் பேதலித்து விட்டார். இப்போது அவர் மகள் கைம்பெண்,அவர் சிறையில் கொலை காரன் என்ற பட்டத்துடன்,அவர் மனைவி துணை இல்லாமல் தனியாக,பையனின் உறவுகளோ பையனை இழந்த சோகத்தில்.இவ்வளவும் ஏன்?ஊர் உலகத்திற்கு பயந்து தான்.!இப்போது ஊர் உலகத்திற்கு என்ன? அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள்.யாருக்கு நஷ்டம்?
ஒரு உண்மையான தந்தை எப்படி இருக்க வேண்டும்? மகளுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்து தரவேண்டும்.தவறான முடிவுகளை எடுத்துச் சொல்லி புரியவைக்கவேண்டும். நல்லமுடிவுகளை ஆதரிக்க வேண்டும்.இம்மாதிரி காதல் விஷயங்கள் கொஞ்சம் sensitive ஆன பிரச்சினைகள். அதனை நன்கு ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வரவேண்டும். நல்ல பையன் நல்ல இடம் என்றிருந்தால் ஜாதி மதம் பார்க்காமல் முன்னின்று எடுத்து செயல் படுத்த வேண்டும். மகளுக்கோ மகனுக்கோ மிகவும் பிடித்துப் போய் விட்டது என்றால் ,அவன்/அவள் கிடைக்கவில்லை என்றால் தான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று சொல்லும் அளவிற்குப் போய் விட்டால்,மகன்/மகள் வாழ்க்கையையே முதலாவதாகக் கொள்ளவேண்டும்.ஊர் உலகம் மானம் மரியாதை போன்ற தேவை இல்லாத வாதங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு மகன்/மகளின் மகிழ்ச்சியே குறிக்கோளாகக் கொண்டு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அது மட்டுமல்லாமல் பின்னாட்களில் பிரச்சினைகள் வந்தால் நீதானே ஆசைப்பட்டா ய் என்னிடம் ஏன் வருகிறாய் என்று கூறாமல் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.அதுதான் உண்மையான அன்பு, பாசம்!இது மாதிரியான சமயங்களில் மற்றவர் சொல்லுக்கு மனதை அலையவிடாமல் நாம் நமது மகிழ்ச்சி ஒன்றையே பார்க்க வேண்டும். நமக்கு நமது மகிழ்ச்சிதானே முக்கியம்? உலகில் யாரும் கவலையுடனோ துக்கத்துடனோ வாழ விரும்புவதில்லை.ஆக,வெளிஉலகம் சொல்வதைக் கேட்கக் கூடாது-துன்பமும் சோகமும் வரும் என்றால்..வெளிஉலகம் சொல்வதைக் கேளுங்கள் உங்களுக்கு சந்தோஷமும், நிம்மதியும்,இன்பமும் கிடைக்குமென்றால்....!
இன்னும் அலசுவோம்....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக