ஸ்ரீ ரகவேந்திரரர் தரிசனம் கிடைத்ததும் மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது.எப்படியும் நாளை இடத்தைக் கண்டு பிடித்து வேலையில் சேர ஒரு உதவி கிடைக்கும் என என் உள் மனது சொல்லியது. அறைக்குச் சென்று ஒரு குளியல் போட்டு விட்டு கீழே உள்ள ரெஸ்டாரென்ட் டில் சாப்பிட்டேன். மீண்டும் மாடி ஏறி வரும்போது ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கி விட்டு ரூம் வந்து படுத்தேன்.நாளைய கவலைகளை ஸ்ரீ ராகவேந்திரரின் பாதத்தில் சமர்ப் பித்து விட்டு நிம்மதியாக உறங்கினேன்.
மறுநாள் காலை 6 மணிக்கு எனது செல்போன் மணியடித்து என்னை எழுப்பியது.
பெயரை பார்த்தேன்.குப்தா...!
எடுத்து பேசினேன்.மறுமுனையில் குப்தாதான்." சார்,பெங்களூர் வந்தாச்சா சார்?எங்க தங்கி இருக்கீங்க?" என்றார்
"என்ன குப்தா என்ன விஷயம்?".என்றேன்.
"இல்ல சார்,எனக்கு இன்னைக்கு இருந்த மீட்டிங் கான்ஸல் ஆயிடிச்சு.அதனால நான் நேற்று இரவே புறப் பட்டு பெங்களுர் வந்து விட்டேன். நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க,நான் வந்து உங்களை எங்கு போகவேண்டுமோ கூட்டிச் செல்கிறேன்."என்றார்.
எனக்கு பெங்களூரிலும் ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் பார்வை கிடைத்து விட்டது என்பதை புரிந்து கொண்டேன். குப்தாவிடம் மஜெஸ்டிக்கில் உள்ள கிருஷ்ணா lodge & ரெஸ்டாரென்ட் வரச் சொல்லி விட்டு நானும் குளித்து விட்டு ரெடி ஆனேன்.
எனக்கு சிறிது கூட சிரமம் இல்லாமல் காலை 10 மணிக்கெல்லாம் பன்னீர் கட்டா ரோட்டில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் கொண்டு சென்று விட்டார் குப்தா.
" ரொம்ப நன்றி குப்தா...நான் நினைக்கவே இல்லை நீங்கள் இப்படி முன் பின் தெரியாத ஊரில் சரியான நேரத்தில் வந்து உதவு வீர்கள் என்று. "
"அதனால என்ன சார்,எனக்கு இன்னைக்கு மீட்டிங் இருந்துதுன்னா என்னால வந்திருக்க முடியாது. எதோ உங்கள் அதிர்ஷ்டம் மீட்டிங் கேன்சல் ஆகி நான் இங்கு வந்தேன்..நீங்கள் அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் "என்றார்.
"ஆமாம் குப்தா, உங்கள் முழு பெயரே குப்தா தானா ?"
"என்னை எல்லோரும் கூப்பிடுவது குப்தா என்று தான் ஆனால் எனது நிஜப் பெயர் ராகவேந்திர குப்தா " என்றார்.........!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக