ஒரு நாள் எங்களது சைட் டிற்கும் பக்கத்தில் உள்ள தொழிற்ச்சாலைக்கும் இடையில் காம்பவுண்ட் சுவர் எழுப்புவது தொடர்பான பேச்சு வந்தது.அந்த வேலையினையும் எனது பொறுப்பில் விட முடிவு செய்தனர்.அது முழுவதும் concrete கொண்டு செய்ய வேண்டும்.முதல் பாதியில் பிரச்சினை இல்லை எனவே அது சுலபமாக முடிந்து விடும்.ஆனால் இரண்டாவது பாதி பெரும் ரிஸ்க் எடுக்கும் படியாக இருந்தது. (மொத்தம் கிட்டத் தட்ட 200 மீட்டர் நீளம் , 4 மீட்டர் உயரம் இருக்கும்)
இதை நான் விவாதத்தின் பொது கூறி அந்த பகுதியில் foundation னுக்கு பள்ளம் தோண்டுவதை விடுத்து வேறு வழியில் (pile அடித்து ) செய்யலாம் என்று கூறினேன்.ஏனென்றால் பக்கத்து factory யின் காம்பவுண்ட் சுவர் எங்களது சைட் ஐ விட உயரமாக இருந்தது.அங்குள்ள நில அமைப்புகள் அப்படி இருக்கும்.மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும். எங்களது நிலம் தாழ் வாகவும் அவர்கள் நிலம் உயரமாகவும் இருந்தது..எனவே எங்கள் பக்கம் foundation னுக்கு குழி பறிக்கும் பொது அது அவர்கள் சுவற்றின் foundation னுக்கும் சுமார் இரண்டு மீட்டர் கீழே செல்ல வேண்டி இருக்கும்.அவ்வாறு செல்லும் போது அவர்களது foundation எங்களது சுவர் கட்டி முடிக்கும் வரை அந்த இரண்டு மீட்டர் உயரத்திற்கு மண் மீது அமர்ந்து இருப்பது நன்கு expose ஆகும்.இதன் காரணமாக மழை திடீரென பெய்தால் மன்கரைந்து ஓடி காம்பவுண்ட் சுவர் கீழே உட்கார்ந்து விடக் கூடிய அபாயம் மிக மிக அதிகம் இருந்தது.அந்த சுவற்றினை ஒட்டியே பக்கத்து factory யின் scrap room மற்றும் genset ரூம் இரண்டும் அமைந்திருந்தது.சுவர் விழுந்தால் அந்த இரண்டு ரூம் களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயமுமிருந்தது
இது பற்றி நான் கூறிய போது எங்களது client திட்ட மேலாளர் நான் கூறியதை நிராகரித்தார். எனவே முதல் பாதியை முடித்த நான் இரண்டாவது பாதியை செய்ய மறுத்தேன்.என்றாலும் எனக்கும் பல வழிகளில் பிரஷர் தந்து நான் தான் செய்ய வேண்டும் என்று கூறி விட்டனர். மிக மிக ரிஸ்க்கான வேலை என்று நான் கூறியபோதும் வேறு alternate பற்றி விவாதிக்காமல் பள்ளம் வெட்டச் சொன்னார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக