நமது எண்ணங்களில் இரண்டு சாத்தியக் கூறுகள் உள்ளன.ஒன்று நாம் நினைத்ததுபோல எதிர் மறையாக நடந்து விடுவது.இல்லை எனில் நாம்
எண்ணியபடி எதிர்மறையாக எதுவும் நடக்காமலே இருப்பது. எப்படியாயினும் நாம் நடப்பவற்றைக் கடந்து வந்து தான் ஆகவேண்டும்.எதிமரையாக நடக்கும் என இருப்பது எதிர்மறையாக நடந்தே தீரும் .இதை தடுக்கும் சக்தி நமக்கு கிடையாது. அவ்வாறு நடக்கும் போது நாம் வருந்தி தான் ஆகவேண்டும்.அதை அப்படியே ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். இந்த உண்மையை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது தான் தற்கொலை எண்ணங்கள் தலை தூக்குகின்றன.இந்த நிலையில் பாரதி எழுதியதைப் போல
"மோனத்திருக்குதடி இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே - நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோ நரகத்துழளுவதோ..."
என்று ஆகிவிடுகிறோம். இந்த உலகம் முழுவதும் தூக்கத்தில் ஆழ்ந்து இருக்கையில் நான் ஒருவன் மட்டும் தனியாக விழித்துக் கொண்டு நரகத்தில் இருப்பது போல இருக்கிறது என்கிறான் பாரதி.இது ஒரு கொடுமையான சூழ் நிலை தான்.
இதை அந்தந்த நிலையில் இருப்பவர்கள் தான் உணர முடியும்.எதிலும் மனம்
லயிக்காது.நடந்த துன்பமான நிகழ்வினைச்சுற்றியே மனம் சென்று
கொண்டிருக்கும்.நிகழ் காலசூழ்நிலைகளில்மனம் ஒன்றாது.இதுவே இனிநாம் வாழ்ந்து என்ன?என்ற தற்கொலை எண்ணத்தை உண்டாக்குகிறது.
இந்த நிலையிலிருந்து மீண்டுவரவேண்டும்.மனதை அடக்கி, அலசி நிகழ் காலத்தில்
ஒன்றச் செய்ய வேண்டும்.சுருங்கச்சொன்னால் மனதின் இறுக்கத்தைப் போக்கி அதை
இலகுவாக்க வேண்டும்.
ஓஷோகூறுவார்-
"கதவை மூடிக் கொள்ளுங்கள்.உங்கள் மனதிற்குள் தோன்றுவதை எந்த வித
கட்டுப் பாடுகளும் இன்றி செய்யுங்கள்.அழத்தோன்று கிறதா நன்றாக அழுங்கள்.சிரிக்கத்தோன்று கிறதா?வாய்விட்டு சிரியுங்கள்.யாரையாவதுதிட்ட வேண்டுமாநன்றாகத்திட்டுங்கள். என்ன வேண்டுமோ கூச்சமின்றி ,தடையின்றி செய்யுங்கள்."என்கிறார். ஆம் இதுஒரு வகை தியானமே.இதனால் ஓரளவு மனம் இலேசாகும்.ஆனால் முழுவதுமாக உங்கள் மனம் கவலைகளில் இருந்து வெளி வரஅதன் தன்மைகளுக்கு ஏற்ப கால அவகாசமும்,பயிற்சியும் தேவைப் படும்.
இன்னும் வரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக