சில விஷயங்கள் அமானுஷ்யமாக நடக்கும் போது நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். நான் எப்போதெல்லாம் ஸ்ரீ ராகவேந்திரரை மனமுருக நினைக்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு அமானுஷ்யமாக , எதிர் பாராமல் ஏதாவது நடக்கும். இதை மற்றவர்களிடம் கூறினால் அவர்களுக்கு அதில் ஒன்றும் ஆச்சர்யமாக இருக்காது. போகிற போக்கில் கேட்டுக் கொண்டு போய்விடுவார்கள்! இது எல்லாம் ஒரு விஷயமா என்பது போல!
2004 மற்றும் 2005 ஆண்டுகளில் நான் வேலை செய்த நிறுவனம் அரசாங்க சம்மந்தமான வேலைகளை ஒப்பந்தம் செய்து , முடித்து கொடுக்கும் நிறுவனம். ஸ்ரீபெரும் புதூரில் நான்கைந்து சக பொறியாளர்களுடன் வேலை செய்த என்னை பதவி உயர்வு என்ற பெயரில், ஆர்க்காடு - வேலூரில் வேலைக்கு அனுப்ப முடிவு செய்தது.
அங்கு எனக்கு துணையாக , உதவியாக வேறு ஒரு பொறியாளரை வேலையில் அமர்த்த எனது தலைமை மறுத்து விட்டது.அப்படியானால் நான் ஒருவனே அனைத்து வேலைகளையும் செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் .
அதுவும் அது அரசாங்க சம்மந்தமான ஒப்பந்த வேலை என்பதால் அரசாங்கத்தின் பொறியாளர்களின் கீழ் ,அவர்களது ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி வேலை செய்ய வேண்டும்.அதனால் நான் அடிக்கடி அந்த பொறியாளர்களின் அலுவலகம் சென்று அவர்களுடன் ஆலோசனை செய்யவேண்டும். அவர்கள் தான் எங்களது வேலைகளை மேற்பார்வை இட்டு ஒப்புதல் தரவேண்டும்.மேலும் அவர்கள் எங்களது வேலைக்கான பில் களை பாஸ் செய்தால் தான் எங்களுக்கு செய்த வேலைகளுக்கான பணம் வரும்.
எனவே வேலை நடைபெறும் இடத்தில் வேலைகளை கவனித்து செய்ய வேண்டியதுடன் அரசாங்க பொறியாளர்களையும் சந்தித்து வரவேண்டிய பெரும் பொறுப்பும் என் ஒருவன் மீதே விழும்! மேலும் செய்த வேலைகளுக்கான பில்களை எழுதி பாஸ் செய்ய வைத்து பணம் வாங்கும் வேலையையும் நான் ஒருவனே செய்ய வேண்டும்!
நான் எவ்வளவு கேட்டபோதும் இன்னொரு பொறியாளரை தர மறுத்துவிட்டது நிர்வாகம்.
இந்தநிலையில் நான் வேலூர் சென்று அந்த அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்வதற்கான ஆர்டர் ஐப் பெற்று வேலையை ஆரம்பிக்க என்னை வேலூருக்கு மாற்றியது நிர்வாகம்.
மிகவும் படபடப்புடனும் டெண்ஷனுடனும் வேலூருக்கு பஸ் ஏறிய நான் மனமுருக ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கினேன். நீதான் என்னுடனே இருந்து இந்த ப்ராஜெக்ட் ஐ நல்லவித மாக முடித்துத் தரவேண்டும் என வேண்டினேன்.
நான் வேலூரில் உள்ள அந்த அரசாங்க அலுவலகம் செல்ல காந்திநகரில் இறங்கியபோது என்னை வரவேற்றது ஸ்ரீ ராகவேந்திரா பேக்கரி & டீ ஸ்டால் ! பெரிய போர்டில் ஸ்ரீராகவேந்திரர் காட்சி அளித்துக் கொண்டு புன்னகையுடன் முதன் முதலாக வேலூரில் அடி எடுத்து வைக்கும் என்னை வரவேற்றார்!!
2 கருத்துகள்:
இன்றுதான் முதன் முதலாக உங்கள் வலைப்பதிவிற்கு வந்தேன்!தங்களின் அனுபவம்..!
தொடருங்கள் ராகவ்முரளி. மேலும் தெரிந்து கொள்ள ஆவல் மிக..
நன்றி மீனா அவர்களே ! தொடர்ந்து என் வலைப் பூவினை படித்து உங்களின் எண்ணங்களையும் எனக்கு எழுதுங்கள்.
கருத்துரையிடுக