நான் சென்னை எக்மோரில் இருந்த அந்த நிறுவனத்தின் தலைமை காரியாலயம் சென்றேன்.நேர் காணல் நல்லவிதமாக முடிந்து,நேர்முகத்தேர்வில் தேர்வானேன். நான் அப்போது வாங்கிக் கொண்டிருந்ததை விட அதிகமாக எனக்கு சம்பளவிகிதம் நிர்ணயிக்கப் பட்டது. மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனக்கு பெங்களூரில் வேலை தரப் பட்டிருப்பதாகவும், வேலையில் எப்போது சேர முடியும் என்றும் கேட்டார்கள். எனக்கு ஒருமாத அவகாசம் தேவை என்றும் பழைய நிறுவனத்தின் மீதி வேலைகளை முடித்து விட்டு ஒரு மாதத்திற்குள் சேருகிறேன் என்றும் கூறினேன்.
சரி என்றும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் appointment ஆர்டர் அனுப்புவதாகவும் கூறினார்கள்.
நான் ஆர்க்காடு வந்து நண்பர் ஹிமாச்சல் இடம் அதைக் கூறியதும் மிகவும் சந்தோஷமும் ஆச்சரியமும் அடைந்தார்!" உங்களுக்கு மகான் ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் நிச்சயம் இருக்கிறது இல்லை என்றால் இப்படி ஒரு அதிசயம் நீங்கள் ராகவேந்திரரிடம் பிரார்த்தனை செய்த ஒரே வாரத்திற்குள் நடக்குமா?" என்று கூறி வாழ்த்தினார்.
நான் ஒரு மாதம் அவகாசம் கேட்டிருப்பதையும் அதற்குள் மந்த்ராலயம் சென்று வரலாம் என்று நினைப்பதையும் கூறினேன். அப்படி என்றால் அவரும் மந்த்ராலயம் வருவதாக கூறினார்.
அதன் பிறகு எனது நிறுவனத்தின் உயர் அதிகாரியிடமிருந்து எனக்கு போன் வந்தது .விரைவில் பில் ஐப் போட்டு முடித்து விட்டு பொள்ளாச்சி வருமாறு கூறினார்.அல்லது பொள்ளாச்சி வேலையில் சேர்ந்துவிட்டு பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வேலூர் சென்று பில்லை முடித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.அதற்கு நான், எனது வேலையை ராஜினாமா செய்வதாகவும் எனக்கு வேறு நிறுவனத்தில் வேலை
கிடைத்து விட்டது அதனால் இங்கிருந்தே பில்லை முடித்து விடுகிறேன் என்றும் , நான் பொள்ளாச்சி வரவில்லை என்றும் கூறி விட்டேன்.
பிறகு கடைசி பில் முழுவதையும் முடித்துவிட்டு ஒரு நாள் நண்பர் ஹிமாச்சல் உடன் மந்த்ராலயம் சென்று வந்தேன். வந்தவுடன் எனது appointment order ம் வந்து சேர்ந்தது.!
பெங்களூர் சென்று வேலையில் சேர வேண்டும்.நான் முன் பின் பெங்களூர் பக்கமே சென்றதில்லை.எனக்கு பெங்களூரில் உறவுகள் யாரும் இல்லை.அங்கு எப்படி சென்று எப்படி இடத்தை கண்டுபிடித்து எப்படி வேலையில் சேருவது?எனக்கு கன்னடமும் தெரியாது.மனதில் லேசானே கிலி பிடித்துக் கொண்டது.!நான் பெங்களூர் செல்ல வேண்டிய நாளும் நெருங்கியது.....
இன்னும் வரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக