நான் வேலூர் வேலைக்கான கடைசி பில்லையும் போட்டு முடிக்கும் நேரம் நெருங்கியது. சரியாக எனது உயர் அதிகாரி போன் செய்து அடுத்த ப்ராஜெக்ட் பொள்ளாச்சியில் தயாராக இருப்பதாகவும் அடுத்த வாரம் வந்து சேர்ந்து விடுமாறும் கூறினார். எனக்கு மீண்டும் அதே நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமில்லை. மனதிற்கு என்னவோ போலிருந்தது.
அன்று ஒரு வியாழக்கிழமை.ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் இரும்பேடு என்ற கிராமத்திலிருந்து உள்ள்ளே சுமார் 2 கிலோமீட்டர் சென்றால் ஒரு ராகவேந்திரர் கோவில் வரும். அந்தக் கோவிலுக்கு எனது ஆர்க்காட்டு நண்பர் ஹிமாச்சல் உடன் சென்றேன். எனது நண்பரிடம் எனது எண்ணங்களைக் கூறி எனக்கு வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்.
அந்த ராகவேந்திரர் சந்நிதியிலேயே ஒரு மணி நேரம் உட்கார்ந்து பிரார்த்தனை செய்தேன்.கோவில் நடை சாற்றப் போவதாக குருக்கள் கூறவும் நானும் எனது நண்பரும் கிளம்பினோம். அங்கிருந்து ஆற்காடு செல்லும் வழியில் திமிரி என்ற ஊரில் வண்டியை நிறுத்திவிட்டு ஒரு கடையில் டீ சாப்பிடப் போனோம்.
எனது நண்பரிடம் எனது ஆதங்கத்தை கூறிக் கொண்டே டீ சாப்பிட்டேன். அப்போது எனது போன் ஒலித்தது. எடுத்துப் பேசினேன். சென்னையில் ஒரு நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் எனது பயோ டேட்டா வைப் பார்த்தாதாகவும் அவர்கள் நிறுவனத்திற்கு ஏற்றதாக உள்ளதாகவும் interview விற்கு வரமுடியுமா என்றும் கேட்டார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எப்போதோ அனுப்பிய application !
சரி எனக் கூறி என்றைக்கு என்பதனையும் கேட்டுக் கொண்டேன்.என்னோடு எனது நண்பர் ஹிமாச்சல் அவர்களுக்கும் ஆச்சரியம் !இப்போதுதான் தான் ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டிவிட்டு வருகிறோம் இன்னும் டீ கூட சாப்பிடவில்லை ,அதற்குள் இப்படி ஒரு செய்தியா ?என்னால் நம்பவே முடியவில்லை என்றார்.என்னாலும் கூடத்தான் நம்பமுடியவில்லை.!
நான் interview விற்கு சென்னை செல்ல வேண்டிய அந்த நாளும் வந்தது..!
அற்புதங்கள் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக