அந்தக்கால பட்டினத்தார் முதல் இந்தக் காலத்தில் சோ வரை பெண்களை கொஞ்சம் ஜாக்கிரதையாகவே கையாள வேண்டும் என்றும், அவர்கள் நம்பிக்கைக்கு அப்பார்ப் பட்டவர்கள் என்றும் கூறியிருப்பதை பார்த்திருக்கிறேன். கொலையும் செய்வாள் பத்தினி என்று சொல்லியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஒரு பெண் துணிந்து விட்டால் என்னவேண்டுமானாலும் செய்வாள் என்பதையும் பார்த்திருக்கிறேன். எனக்கு தெரிந்து ஒரு பெண்ணும் அவளது குடும்பத்தில் உள்ள பெண்களும் சேர்ந்து ஒரு ஆணை படாத பாடு படுத்தியதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறேன்.
அந்த ஆண்மகன் செய்த ஒரே பாவம் அவர்கள் வீட்டில் மாப்பிள்ளையாய் ஆனது தான். அவனை எப்படியாவது தங்களின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக ( எல்லாம் அவன் சம்பாதிக்கும் பணம் முழுவதும் தங்கள் வீட்டுப் பக்கம் தந்து விட வேண்டும் என்பதற்காகவும் ஊதாரித்தனமாக அவர்கள் செய்துவிட்ட செலவுகளால் ஏற்ப்பட்ட கடன்களை அடைக்க வேண்டும் என்பதற்காகவும் தான் ) அவன் மீது இல்லாத பழிகளை எல்லாம் கூறி (இருக்கவே இருக்கிறது 498 A என்னும் பெண்களுக்கு ஆதரவான சட்டம்!) கோர்டிர்க்கும் போலீஸ் ஸ்டேஷ னுககுமாக அவர்களுக்கு உடன்படாத அவனை அலையவிட்டு வறுத்து எடுத்து விட்டார்கள். பாவம் அவன் இப்போது ஏன்டா திருமணம் செய்தோம் என்று நொந்து போய் இருக்கிறான்.
காரணம் அந்தப் பெண்கள் வீட்டில் அவர்களை அடக்கி ஆள சரியான ஆண் மகன் இல்லாதது தான்.
ஒருகாலத்தில் பரத்தையர் வீட்டிற்கே கணவனை கூடையில் சுமந்து சென்ற பெண்ணையும், ,கணவனின் சின்ன வீட்டிற்காக தனது நகைகளை எல்லாம் தந்த கண்ணகி போன்ற பெண்களும்,எமனிடம் போராடி கணவனின் உயிரை மீட்டிய பெண்ணும் வாழ்ந்த நாடு தான் இது இன்று இப்படி ஆகிவிட்டது!
இன்று "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்" என்று ஒரு வெப் சைட் டினையே வைத்துக்குக் கொள்ளும் அளவிற்கு பெண்களால் பாதிக்கப் பட்டவர்கள் அநேகம் பேர். ( உண்மையிலேயே பெண்களை வரதட்சினை கேட்டும் பிறவழியிலும் துன்புறுத்தும் ஆண்கள் இதில் சேர்த்தி இல்லை.)
ஆனால் இன்றும் கூட கணவனையே தெய்வமாக எண்ணி வாழும் பெண்களையும் பார்க்கின்றேன்.
பெண்களுக்கு ஆதரவான சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு பெண்ணீயம் பேசி ஆட்டம் போடும் பெண்களைப் பற்றியது தான் இந்தப் பதிவு.
அந்தக் கால அர்த்த சாஸ்திரமும் ,மனு நீதியும் ,காம சாஸ்திரமும்,விதுர நீதியிலும் ஒரு நல்ல பெண் ,நல்ல மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கூறியிருப்பதை இந்தக்காலத்துப் பெண்கள் அட்லீஸ்ட் படித்து தெரிந்து கொள்ளவாவது வேண்டும்.
முன்னோர் எல்லாம் மூடர்களல்ல,,,,!நமக்குண்டு பண்பாடு..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக