எனது முந்தய பதிவில் பெண்களைப் பற்றி நமது முன்னோர்கள் கூறிய வற்றை
அட்லீஸ்ட் இந்தக் கால பெண்கள் தெரிந்து கொள்ளவாவது வேண்டும் என
எழுதியிருந்தேன்.
இதோ முதலாவதாக
பெண்கள் பற்றி மனு நீதி சொல்வது என்ன?
பெண்கள் குறித்த மனுவின் கருத்துக்களைக் காண்போம்.
”எந்தப் பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச் செயலும் இயற்றலாகாது” (10 : 147)
”இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது” (10 : 148).
”இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக” (10 : 154).
”அன்றாட வேள்விகள் ஐந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும்
மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு
மறுமையின்பிற்குரிய நல்லாறு” (9 : 14).
”நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர்
தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள்
கணவரின் காவலை விரும்புவதில்லை” (9 : 15).
இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால்
மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க
வேண்டியது (9 : 17).
‘படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்’ (9 : 17).
/www.revivo.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக