எனக்கு எப்படி ஸ்ரீ ராகவேந்திரர் மீது அசைக்கமுடியாத பக்தி இருக்கிறதோ அதே போல டெலிவிஷன் நட்சத்திரம் லதா ராவிற்கும் இருக்கிறது என்பது தினகரன் இதழுக்கு அவர் அளித்த பேட்டியின் மூலம் தெரிகிறது.அவரின் அனுபவம் என்ன பார்ப்போமா?
என் (லதாராவ்) குல தெய்வம் தர்மபுரியில் உள்ள பென்னேஸ்வரர்; இஷ்ட தெய்வம்
ராகவேந்திரர். என்னோட மேக்-அப் பெட்டி, கைப்பை எல்லாம் அவருடைய
புகைப்படத்தையும் சுமந்திருக்கும். ஷூட்டிங் போகும் அவசரத்தில்,
பூஜையறையில் இருக்கும் அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் போனாலும், ஏறிப் போகும்
ஆட்டோவில் ராகவேந்திரர் படம் இருக்கும்! நானும் ராஜ்கமலும் ஒரு முறை
மந்த்ராலயம் சென்றிருந்த போது மூலக்கருவறைக்கு மிக அருகில் எங்களை
அமரவைத்து ஆலயம் சார்பில் எங்களுக்கு அளித்த சால்வையை, அந்த மகானின் திவ்ய
பிரசாதமாகவே கருதி பொக்கிஷமாகப் பாதுகாக்கிறோம். என் அக்காவின்
திருமணத்திற்கு ராகவேந்திரரிடம் வேண்டிக் கொள்ள, ஆச்சரியமான முறையில் ஒரு
முஸ்லிம் பெரியவர் தானே தேடிவந்து திருமணத்திற்கான உதவிகளைச் செய்ததை
என்னால் மறக்கவே முடியாது. கேரளாவில் விமானத்தைப் பிடிக்க விரைந்தபோது,
போக்குவரத்து சிக்கலில் மாட்டிக் கொண்டோம். எதிரே ‘ராகவேந்திரா
மெக்கானிக்கல் ஷாப்’ என்ற பெயர் பலகை என் கண்ணில் பட, உடல் சிலிர்த்தது.
ஆனாலும் நேரத்தைத் தவறவிட்டு விமான நிலையம் சென்றால், அந்த விமானம் ஒரு
மணிநேரம் கழித்துதான் புறப்படும் என்ற தகவல், ‘என்ன பயந்துட்டியா,
கவலைப்படாதே, நான் இருக்கேன்’ என்ற ராகவேந்திரர் வாக்காகவே பட்டது. என்
பெண் பிறந்ததும் ஒரு வியாழக் கிழமைதான். வாழ்க்கையில் மிகவும்
கஷ்டப்பட்டாலும் இன்று இந்த உயரத்தில் இருக்கிறேன் என்றால் அது
ராகவேந்திரரின் அருள்தான்.’’ பூஜையறையில் இதை ஆமோதிப்பதுபோல மகான்
ராகவேந்திரர் புன்முறுவலுடன் ஆசி வழங்குகிறார்.
இன்னும் வரும்...!
நன்றி: http://htwww.dinakaran.com/Aanmeegam_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக