இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, ஜூன் 01, 2012

பெண்கள்...!

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்.உண்மையிலேயே ஒரு நல்ல அன்பான குணவதியான அழகான பெண் மனைவியாக கிடைத்தால் அதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில்? ஒரு நல்ல பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கவியரசர் கண்ண தாசன் என்ன சொல்கிறார் ? பார்ப்போமா?

‘தாயைப் பார்த்துப்பெண்ணெடு
தரத்தைப்பார்த்து வரவிடு
நிலத்தைப் பார்த்து பயிரிடு
நேரம் பார்த்து முடிவெடு’
- என்பார்கள்.

“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால்,
மளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார்கள்.

“தாயைப் போலபிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.

தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.

அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதி விலக்கு.

ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால்,பெண்ணைப்பார்க்க வேண்டியதில்லை.

இளைஞரின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாலிப்பான அங்கங்களே அவன்நினைவை மயக்குகின்றன.

அதனால்தான் ‘பெற்றோர் பார்த்து மகனுக்குப்பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தபிறகுதான், பேசி முடிக்கிறார்கள்.

அத்தகைய திருமணங்ள் - நிதானமாக அறிந்து முடிக்கப்ட்ட திருமணங்கள். நூற்றுக்குத்தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல்
அவசரத்தில் கல்யாணம்
-என்று முடிந்த திருமணங்கள். நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.

ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டுமென்றால், பெணகள் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்.

காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை)

குடிப்பிறப்புப் பார்த்துதான பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை மழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.

‘குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.

எந்த ஜாதியிலும் நல்லபெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி- மதம் -பார்ப்பது பயன்ற்றது.

குடிப்பிறப்புத்தான் இன்றியமையாத்து.

இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அநுமன், இராமனிடம் இப்படிச் சொல்கிறான்.

“விற்பெரும் தடந்தோள் வீர
வீங்குநீர் இலங்கை வெற்பின்
நற்பெரும் தவத்த ளாய
நங்கையைக் கொண்டே னில்லை;
இற்பிறப் பென்ப தொன்றும்
இரும்பொறை என்ப தொன்றும்
கற்பெனும் பெயர தொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்!”

“ஆரியப் புத்ரா! நான் இலங்கையின் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.

“குடிப்பிறப்பு என்ற ஒற்றுமையும், சிறந்த பொறுமை எனும் ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.

“நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப்படும்”

என்றான் வள்ளுவன்.

“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.

ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக்கூர்ந்து அறிதல் இன்றியமையாத்து.

நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டு விட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால்போதும் மற்ற குணங்கள் தாய் வழியே வந்திருக்கும்.

பொறுப்பற்ற இளைஞன், குடும்ப몮பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.

நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்கார்ரைப் போல் உலவும் துர்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

“பத்தாவுக்கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் - சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளே யாமாயின்
கூறாமற் சந்தியாசம் கொள்!”

“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்போல்வடிவு
கொண்டாளைப்பெண்ணென்று கொண்டாயே தொண்டா
செருப்படித்தான் உந்தன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”

-என்றான் தமிழ் மூதாட்டி.

“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை
எடுத்(து)
அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)
அயல்வளைவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்வந்(து)
உறங்குவாளை
எப்படி நான் நம்புவேன், இறைவா
கச்சி ஏகம்பனே!”

என்று புலம்பினார் பட்டினத்தார்.

சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்ற அப்படி ஆனவர்கள் என்பதால்தான் ந்தி மூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்கிறார்கள்.

“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாறே ஆமாயின் -இல்லால்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்”

இதுவும் மூத்தோர் மொழி.

இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமிலாளாக பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோரு எச்சரிக்கை!

இந்துப் புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்,நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.

இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு ஏற்பட்டு விட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்

நன்றி: கவியரசர் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்."

இன்னும் பார்ப்போம்...

சனி, மே 26, 2012

பெண்கள்...!

 பெண்களைப் பற்றி தருமருக்கு பீஷ்மர் 

கூறுவதாக அமைந்தவைகளைப் பார்ப்போமா?  (பெண்களின் குணங்கள்) 

யுத்தம் முடிந்ததும் பீஷ்மர் தர்மருக்கு, யுத்த தர்மங்களைப் பற்றி ராஜநீதிகளைப் பற்றியும் இன்னும் சில தர்மங்களையெல்லாம் விளக்குகிறார். அப்போது தர்மர் "பெண்கள் எப்படிப்பட்டவர்கள்" என்ற கேள்வி எழுப்புகிறார். அதற்கு பீஷ்மர், பஞ்சசுவடி என்ற தேவகன்னிகை குறிப்பிட்டுள்ளதை அப்படியே கூறுகிறார். 'பெண்கள் சுயநலம், ஆசை, அஹங்காரம், ஆத்திரம், ஆசை, அசூயை, திருப்தியின்மை (இன்னும் என்னவெல்லாம் உண்டொ அவ்வளவும் போல?!) ஆகிய குண்ங்களைப் அதிகம் கொண்டிருப்பர். இப்படிப்பட்ட பெண்கள் அதிகரிக்க, யமனுக்கு மனித உயிர்களை கொண்டு செல்லும் போது திருப்தியின்மையே ஏற்படும்' என்கிறாள் என பீஷ்மர் கூறுகிறார்.

படைப்பின் ஆரம்ப காலகட்டத்தில் பெண்கள் மிகுந்த அறிவும், நற்குணமும், வேத அறிவும் மிக்கவர்களாக (வேதம் = knowledge about righteousness) இருந்தனர். மனித உலகம், பூவுலகம் தேவலோகம் போல் ஆகிவிட்டபடியால், தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசமின்றி மகிழ்ச்சியும், குதூகலமும் நிரம்பப்பெற்றிருந்தனர். பூவுலகிற்கும் தேவலோகத்திற்கும் வித்யாசம் இன்றி போய்விடும் என்று இந்திரன் (தேவேந்திரன்) கேட்டுக்கொண்டதன் பேரில், பெண்கள் ஆசையும் ஆத்திரமும் சேர்த்து படைக்கப்பட்டனர். அதன் பின் மனிதனின் வாழ்வும் பெரும் அல்லலுக்கு உட்பட்டது. ஆயிரம் நாக்கை கொண்டு ஒருவன் இருந்தாலும், அவனால் தன் ஆயுள் முழுவதும் ஒரு பெண்ணின் தீய குணங்களையும், அதனால் விளையும் விளைவுகளையும் அடுக்க நினைத்தால் முடியாது என்று பஞ்சசுவடி குறிப்பிடுகிறாள்.

மனுதர்மத்தில் (இதுவே தேவலை) பெண்கள் இரட்டை குணங்கள் மிகுந்தவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். அதாவது இயற்கையிலேயே, பெண் என்பவள் பொறுமை-ஆத்திரம், ஆசை-சாந்தம், தாராளம்-சுயநலம் எல்லாமே சரிசமமான அளவு இருக்கபெற்றவள். அதனாலேயே அவளால் சரியானதொரு பாதை தேர்ந்தெடுக்க தேரியாது, அல்லது சரியானதொரு முடிவை எடுக்க முடியாமல் திணறுவதால், ஆண் மகனின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டு இருக்கிறாள். இளமையில், தந்தையும், பின் மணாளனும், அதன் பின் மகனும் அவளை பாதுகாக்கின்றனர்.

பெண்கள் பலவீனமானவர்களா? என்ற கேள்விக்கு நம்மில் பலரும், "ஆம்" எனச் சொல்லக்கூடும். உடல்-பலம் மட்டு பட்டவர்கள் என்ற அர்த்தத்தில் அமையும் பதிலது. இன்னும் சிலரோ, பெண்களுக்குப் பொறுமை அதிகம், சோதனைகளை எளிதில் ஜீரணித்து மீண்டு எழும் மனவலிமை அதிகம் படைத்தவர்கள் என்றும் கூறுவர். அதனால் பெண்கள் உடலால் பலவீனமானவர்களாக இருப்பினும் உண்மையில் அதிகம் மனோபலம் உள்ளவர்கள் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இருப்பினும் பீஷ்மர் தர்மருக்கு உபதேசித்த மொழிகளில் பெண்களை எப்படி கையாள்வது என்று பேசும் போது, பெண்கள் பலவீனமானவர்கள் என்று கூறுகிறாராம். எப்படிப்பட்ட பலவீனம்? மனவலிமையில் மட்டுப்பட்டவர்கள். ஆசை அதிகம் அமையப்பெறுவதால் அடக்க ஆள முடியாதவர்கள். நன்றி உணர்வு இயல்பிலேயே அதிகம் இருக்கப்பெறாதவர்கள். எளிதில் உணர்ச்சிக்கு அடிமையாகக் கூடியவர்கள் அதனால் அவர்களை காப்பது அவசியம். அவர்கள் மனதை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். அவர்களை கோபித்தோ அடக்கியோ ஆளாமல் அன்பால் ஆளப்பட வேண்டியவர்கள். (here comes the grand idea of keeping one's spouse happy! and satisfying all her needs n fancies!)

எல்லா பெண்களும் அப்படியல்ல। பொதுப்படையாக முடிவு கட்டிவிட முடியாது. சத்துவ குணம் படைத்த பெண்டிர் இருக்கவும் செய்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களால் தான் இப்பூமி செழிப்புறுகிறது. அப்படிப்பட்ட பெண்களால் தான் நீதி நேர்மை, நல்லிணக்க சிந்தனை முதலியவை பாதுகாக்கப்பட்டு, உலகின் ஷாந்தி நிலவுகிறது. அதனால் அப்படிப்பட்ட பெண்கள் பூஜிக்கத்தக்கவர்கள். அப்படிப்பட்ட நற்குண மங்கை ஒருத்தி பூஜிக்கப்பட்டால், அவ்விடத்தில் தேவர்கள் வசிப்பதாக என்று புராணங்கள் கூறுகின்றன. இருப்பினும் பெண்கள் அதிக சதவிகிதம் மேற் சொன்ன வகையில் அடங்கியவர்கள்.

இதை விளக்கும் வகையில் தேவஷர்மா எனும் ரிஷியின் கதையை பீஷ்மர் கூறுகிறார்। தேவஷர்மாவின் மனைவி ருசி மிகவும் அழகானவள். அவள் அழகில் இந்திரன் மயங்கியிருப்பதால், தேவஷர்மா குடிலில் இல்லாத நேரம் பார்த்து இந்திரன் ருசியின் பலவீனத்தை பயன்படுத்தி ஆசையை கிளறி விடக்கூடும் என்று அபிப்ராயப்படுவதால், தம் சிஷ்யனான விபுலனை ருசியை பாதுகாக்கும் படி கூறுகிறார். விபுலன் ருசியின் உடலில் புகுந்து, இந்திரன் வரும் போது, ருசி விரட்டுவதைப் போல் விரட்டிவிடுகிறான். இந்திரனும், விபுலன் ருசியின் உடலில் புகுந்து விட்டதால் இனி தன் ஆசை நிறைவேறாது என்று புரிந்து கொண்டு சென்று விடுகிறானாம். ருசியின் உடலில் புகுந்ததை தேவஷர்மாவிடம் முதலில் விபுலன் மறைக்கிறான். பின் அவர் அதைக் கண்டுணர்ந்து, உன் எண்ணம் நல்லனவாக இருப்பதால், உன்னை நான் மன்னித்தேன், இனி உண்மையை மறைக்கும் பாவத்தை செய்யதே என்று எச்சரிக்கிறார். மேற்சொன்னக் கதையை தர்மருக்கு பீஷ்மர் பகிர்ந்து, பெண்கள் பலவீனங்கள் அதிகம் உள்ளவர்கள் என்பதை எடுத்துரைக்கிறாராம். 

                நன்றி: சோ-வின் எங்கே பிராமணன் part1

 மீண்டும் சந்திப்போம் ......

வெள்ளி, மே 25, 2012

பெண்கள்- அர்த்த சாஸ்த்திரத்தில்..!

பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் அவர்களுக்கான நியதிகள் என்ன
என்பது பற்றி சாணக்யர் சொல்வது என்ன? 




சாணக்கிய முனிவரின் அர்த்த சாஸ்திரம்  அவ்வப்போது சமூக ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் குற்றவியல் தண்டனை குறித்து தக்க அறிவுரைகளை மௌரிய சாம்ராஜ்யத்திடையே பகிர்ந்து வந்திருக்கிறது.

சந்திரகுப்த மௌரிய ரின் அருகில் நின்று கொண்டிருந்த ஒற்றர் படைத்தலைவர் மன்ன ரிடத்திலும் சாணக்கிய முனிவரிடத்திலும் மிகுந்த கவலை தோய்ந்த முகத்துடன், அன்றைய மகளிரின் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு தகவல்களைக் கூறியபடி, முனிவரின் சாஸ்திர அறிவுரைக்காக நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.


ஒரு பெண் தன் கணவன் நீசனாகிவிட் டாலோ, அயல் நாட்டுக்குப் போய்விட்டாலோ, ராஜ துரோகம் செய்தாலோ, தன் உயிருக்கு அவனால் தீங்கு ஏற்படும் என்றாலோ, பெரும்பாவங்கள் செய்து பாவியானவன் என்றாலோ அவனை விட்டுவிட வேண்டும்.


பெண்களுக்கான வாழ்க்கைப் பாதுகாப்பு மிகவும் முக்கியம். சந்திரகுப்த மௌரியரே! இது விஷயத்தில் தக்க ஆணைகளை அவ்வப் போது நீங்கள் இயற்ற வேண்டும்.


மனைவிக்கு ஜீவனாம்சம் தரும்போது தன் குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆகும் செலவைக் கணக்கெடுத்து அதற்குத் தக்கபடி கொடுக்க வேண்டும். அவள் தன்னுடைய ஸ்ரீதனம் முதலானவற்றை வாங்கிக் கொண்டிருந்தாலும் இதைத் தர வேண்டும்.


அந்தப் பெண் கணவனை விட்டுவிட்டு மாமனார் வீட்டில் இருந்தாலோ சொத்தைப் பிரித்துக் கொண்டு போய்விட்டாலோ அவள் ஜீவனாம்ச வழக்கு தொடுக்கக் கூடாது.


கணவன் வெளிநாடு போயிருந்தால்- சூத்திரன், வைசியன், க்ஷத்திரியன், பிராமணன் முதலானவர்களுடைய மனைவிமார்கள் குழந்தைகள் பெறாதவர்களாக இருந்து மறுமணம் செய்ய நினைத்தால் ஒரு வருட காலம் காத்திருக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றவர்களாக இருந்தால் அதற்கு மேல் காத்திருக்க வேண்டும். வெளிநாடு போவதற்கு முன்பு கணவன் அவர்கள் ஜீவனத்துக்கு ஏற்பாடு செய்து விட்டுச் சென்றிருப் பானேயாகில் இரு மடங்கு காலம் எதிர்நோக்கிக் காத் திருக்க வேண்டும்.


கல்வி கற்பதற்காக வெளிநாடு சென்ற அந்தணனுடைய பிள்ளை பெறாத மனைவி பத்து வருடங்களும், பிள்ளைகள் பெற்ற மனைவி பன்னிரண்டு வருடங்களும் காத்திருக்க வேண்டும்.


இந்த காலகட்டத்திற்குப் பிறகு பெண்கள் கணவனுக்காக எதிர்நோக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வாழ்நாள் முழுவ தும் தனித்து வாழலாம் அல்லது அதற்குப் பிறகு வேறு ஒருவனை மணக்கலாம். கணவனு டைய சகோதரர் அல்லது பங்காளிகளை மணக்க வேண்டும்.


இந்தப் பங்காளிகள் வேண்டாமென்று வேறு யாரையாவது மணந்து கொண்டாலோ விபச்சாரம் செய்தாலோ அந்த மனிதன், அந்தப் பெண், அவர்கள் இணையக் காரணமாக இருந்தவன், அவளை மணந்தவன் இவர்கள் அனைவருமே தண்டனை பெற வேண்டிய குற்றவாளிகள்.''


திருமணமாகி கணவனோடு கூடாத பெண் இன்னொருவனுடன் தொடர்பு வைத்துக் கொண்டால் அவளுக்கு 54 வெள்ளிகள் அபராதம்.


கணவன் வெளிநாடு போயிருக்கும்போது தவறான பாதையில் போகும் பெண்ணை கணவனின் உறவினனோ வேலையாளோ அடக்கி வைக்க வேண்டும். திரும்பி வந்த கணவன் அவர்களை மன்னித்துவிட்டால், அந்தப் பெண்ணையும் ஆணையும் தண்டிக் காமல் விட்டுவிடலாம். கணவன் மன்னிக்கா விட்டால் அந்தப் பெண்ணின் செவிகளையும் மூக்கையும் அறுக்க வேண்டும். அந்த ஆணுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!''

நன்றி :திரு.ஜெகாதா நக்கீரன்.காம் 

மேலும் .....




-














வியாழன், மே 03, 2012

ஆடும் வரை ஆட்டம்....!

உலகில்எத்தனைவகையானமனிதர்கள்!எத்தனை வகையான கேரக்டர்கள்! எல்லோரும் எப்போதும் நிலையாய் இருப்பது போல எவ்வளவு ஆட்டம் ஆடுகிறார்கள்? எத்னையோ  மகான்களும் ஞானிகளும் எவ்வளவோ சொல்லிவிட்டபோதும் அநேகம்  பேருக்கு இன்னும் ஞானம்  பிறக்கவில்லை.!      
நினைத்துப் பார்க்கிறேன்......சென்ற ஜனவரி மாதம் என்னுடன் நன்றாக  பேசியவர்கள் இன்று  இந்த உலகத்தில் இல்லை.இன்னும் நான்கே மாதத்தில் நாம் இந்த உலகத்தில்  இருக்க மாட்டோம் என்று நினைத்திருப் பார்களா?
நானும் கூட கனவிலும் நினைக்க வில்லை,இன்னும் நாலு மாதங்களுக்குப்  பிறகு இவர் நம்முடன் இருக்க மாட்டார் என்று! எண்ணிப் பாருங்கள் கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குள்  நம்மிடமிருந்து பிரிந்து  மேலே சென்றவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?யாராவது இன்னும் ஐந்து  அல்லது பத்து வருடங்களுக்குள் நாம் இறந்து விடுவோம் என்று எண்ணி இருப்பார்களா? 
நிலையில்லாத இந்த பிறப்பில் எத்தனை சூது ,வஞ்சகம்,  பொறாமை...
காலம் தான் எத்தனை வலியது?எல்லாவற்றையும் எப்படி மாற்றுகிறது?கடினமான துயரங்களுக்கு மருந்தும் அதுதான்.தலைகால் புரியாமல் ஆடுபவர்களுக்கு முடிவும் அதுதான்!
காலத்தின் வலிமை பற்றி பீஷ்மர் தர்மருக்கு கூறுவதாக அமைந்த கதையைப்  படித்துப் பாருங்கள்.என்னை ரொம்பவே பாதித்த இந்த மகாபாரதக் கதையை உங்களுக்கும் தருகிறேன்...

காலத்தின் வலிமை பற்றி விரோசன் மகனான பலிக்கும்,இந்திரனுக்கும் நடந்த உரையாடலைக் கேள் என பீஷ்மர் தருமருக்கு சொல்லத் தொடங்கினார்.

இந்திரன், பிரம்ம தேவனிடம்,'தானம் செய்வதில் தளராது இருந்த பலி எங்கே?பலி இருக்கும் இடத்தை அறிய விரும்புகிறேன்.அந்தப் பலி வாயுவாய் எங்கும் உலவினான்.வருணனாக இருந்து மழை பெய்தான்.சூரிய சந்திரனாக இருந்து உலகுக்கு ஒளி நல்கினான்.தீயாக இருந்து உலகைத் தகிக்கச் செய்தான்.தண்ணீராக இருந்து உயிர்களின் தாகத்தைப் போக்கினான்.திக்குகளை விளங்கச் செய்தான்.அவன் எங்கே இருக்கிறான்..சொல்வீராக..'என்றார்.

பிரம்ம தேவர், 'ஒருவர் கேட்கும் போது பொய் கூறக் கூடாது.ஆதலால் உண்மையைச் சொல்கிறேன்.அந்தப் பலி ஒட்டகமாகவோ,பசுவாகவோ,கழுதையாகவோ,குதிரையாகவோ ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கும் தேடிப் பார்' என்றார்.

இந்திரன் 'பலி உண்மையில் பாழடைந்த வீட்டில் இருந்தால்..அவனை நான் கொல்லலாமா?' என்றார்.

பிரம்ம தேவர்,' இந்திரா..அவனிடன் நியாயத்தைக் கேள்.கொல்லாதே.'என்றார்.

இந்திரன் ஐராவதத்தின் மீது ஏறி எங்கும் பலியைத் தேடினான்.பாழடைந்த வீட்டில் கழுதையாக இருந்த பலியைக் கண்டு,'நீ ஏன் இந்தப் பிறவியை எடுத்தாய்? செல்வம் அனைத்தையும் தொலைத்து விட்டுக் கழுதையாக பிறந்துள்ளாயே, உனக்கு இப்பிறவியில் துன்பம் ஏற்படவில்லையா?உலகெங்கும் சுற்றித் திரிந்து பெருஞ்செல்வத்தைச் சேர்த்தாயே..இப்போது எங்கே அந்தச் செல்வம்? உனது நிலை பரிதாபமாய் உள்ளதே.நீ பலியாக இருந்த போது இன்ப போகங்களை அனுபவித்துப் பொருளை எல்லோர்க்கும் வாரி வழங்கினாய்.உன் எதிரில் தேவமகளிர் நடனம் ஆடினர்.கந்தர்வர்கள் ஏழிசை பாடினர்.நீ, ரத்தினங்கள் பதிக்கப் பட்ட தங்கக் குடையின் கீழ் அமர்ந்திருந்தாய்.யாகத்தின் போது ஆயிரம் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்தாய்.இப்போது என்னவாயிற்று அந்த வைபவம் எல்லாம்' என்று எள்ளி நகையாடினார்.

இந்திரனின் பேச்சைக் கேட்ட பலி.."தேவனே..உனது அறியாமைக்கு வருந்துகிறேன்.பிறர் வருந்துமாறு பேசுவது..உன் தகுதிக்கு இழுக்காகும்.நீ குறித்த குடை மாலை ஆகியவை குகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.நல்ல காலம் வரும்போது அவை மீண்டும் என்னிடம் வரும்.ஆகுவது ஆகும் காலத்துக்கு ஆகும்: போகும் காலத்து அனைத்தும் போகும்.இது காலத்தின் விசித்திரம்.இப்போது உன்னிடம் மிகுந்த பொருள் உள்ளதால் உன்னை நீயே புகழ்ந்து கொள்கிறாய்.இந்தக் காலம் அப்படியே இருக்காது.மாறும்.சாதுக்கள் துன்பம் கண்டு வருந்த மாட்டார்கள்.இன்பத்தில் மூழ்கி திளைக்கவும் மாட்டார்கள்.இரண்டையும் சமமாகக் கருதி மன அமைதியுடன் இருப்பர்.செல்வச் செறுக்கால் இறுமாந்து பேசாதே..நான்கூட ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தேன்.காலம் மாறிவிட்டது.இது மாறிக் கொண்டே இருக்கும்.எல்லாம் அதன் கையில்தான் உள்ளது'என்றான்.

அது கேட்ட இந்திரன் 'இப்போது உன் நிலை உனக்கு வருத்தத்தைத் தருகிறதா? இல்லையா? என்றார்.

பலி சொன்னான் 'உனது செல்வச் செருக்கால் அறிவிழந்து பேசுகிறாய்.சில உண்மைகளைச் சொல்கிறேன் கேள்..பொருள்களின் உண்மைத் தன்மை எனக்குத் தெரியும்.செல்வம் நிலையில்லாதது.யாக்கையும் நிலையில்லாதது.உலகில் எல்லாமே அழியக் கூடியதுதான்.இதை உணர்ந்துக் கொண்டதால் நான் எதற்கும் வருந்தாமல் இருக்கிறேன்.இந்தக் கழுதைப் பிறவியும் நிலையில்லாததுதான்.இப்படி உலக நிலையாமை என்னும் உண்மைகளைத் தெரிந்துக் கொண்ட ஒருவன் இவற்றின் அழிவு குறித்தும் வருந்த மாட்டான்.இது உலக இயல்பு எனற தெளிவு ஏற்பட்டபின் ஏன் நிலையாமை குறித்து வருந்த வேண்டும்? ஆறுகள் எல்லாம் கடலை அடைகின்றன.அது போலப் பிறவிகள் எல்லாம் மரணத்தை அடைகின்றன.இந்த இயற்கை நியதிகள் காலத்தால் ஏற்படுபவை என்ற தெளிவு ஏற்பட்ட பிறகு எதற்காகத் துக்கப்பட வேண்டும்?

ஒருவனை ஒருவன் கொன்றுவிட்டதாகவோ, வென்றுவிட்டதாகவோ எண்ணிப் பெருமிதம் அடைகிறான்.உண்மையில் கொல்லுவதும், வெல்லுவதும் அவன் செயல் அன்று.அவனது கருமத்தின் செயல்.அவன் அதற்குக் கர்த்தா அல்லன்.வேறொருவன் கர்த்தாவாக இருக்கிறான்.அவன்தான் பரமாத்மா.அவன்தான் எல்லாவற்றையும் காலத்திற்கு ஏற்றபடி இயக்குகிறான்.அதன்படி அனைத்தும் இயங்குகின்றன.மாற்றமுடியாத சக்தி வாய்ந்தது காலம்.அறிஞனையும்-முட்டாளையும், பலம் உள்ளவனையும்-பலம் இல்லாதவனையும், நல்லவனையும் -கெட்டவனையும்,வள்ளலையும்-வறியவனையும் வேறுபாடில்லாமல் காலம் தன் வயப்படுத்திக் கொள்கிறது.உலகமே காலத்தின் பிடியில்தான் இருக்கிறது.குழந்தை பிறப்பதும்,வளர்வதும், வாலிபனாகத் திகழ்வதும், வயோதிகனாக மாறுவதும், மரணத்தைத் தழுவுவதும் காலத்தின் விளைவு என்பதை உணர்தல் வேண்டும்.இப்படி யுகம் யுகமாகக் காலம் அனைத்துப் பொருளையும் மாற்றி அழித்து வருகிறது.இதற்குக் கடலைப் போல் கரை இல்லை.ஆகவே காலத்தைக் கடக்க யாராலும் இயலாது.

இப்போது கழுதையாக இருக்கும் நான் மேலும் பல வடிவங்களை எடுக்க முடியும்.ஆனால் காலத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.இந்த உலகமே காலத்தின் ஆதிக்கத்தில் இருக்கின்றது.பஞ்ச பூதங்களின் வேற்றுமையும் காலத்தின் விளைவுதான்.காலத்தைக் காட்டிலும் ஆற்றல் மிக்க பொருள் உலகில் வேறொன்றும் இல்லை.அது கண்ணுக்கு புலனாகாது.ஆயினும் இதனைச் சிலர் ஆண்டு என்றும் மாதம் என்றும் நாள் என்றும் காலை என்றும் மாலை என்றும் நிமிடம் என்றும் விநாடி என்றும் கூறுகின்றனர்.

இந்திரா..இந்த உலகம் எதன் வசம் இருக்கிறதோ அதுதான் காலம் என உணர்வாயாக.நீ ஆற்றல் மிக்கவன் என எண்ணிக் கொண்டிருக்கிறாய்.உன்னைப் போல ஆற்றல் மிக்க பல இந்திரர்கள் கால வெள்ளத்தில் மறைந்தனர்.காலம் உன்னையும் கொண்டு செல்லும்.அந்தக் காலம் எப்போது வரும் என சொல்வதற்கில்லை.இதை உறுதியுடன் நம்புவாயாக.

அதிர்ஷ்ட லட்சுமி இப்போது உன்னிடம் உள்ளாள்.இது போல பல்லாயிரவரை இந்த லட்சுமி அடைந்திருக்கிறாள்.இப்போது உன்னிடம் லட்சுமி இருப்பதாலேயே செருக்கு அடையாதே.காலம் மாறும்.

நான் அசுரர்க்கு அதிபதியாக இருந்தேன்.தேவர்களை நடுங்கச் செய்தேன்.பிரம்ம லோகத்தையும் வெற்றி கொண்டேன்.அத்தகைய நான் இப்போது எப்படியிருக்கிறேன்..பார்..எல்லாருடைய கதியும் இதுதான்' எனவே தேவர்க்கு அரசனே..உண்மை உணர்ந்து அடக்கமாய் இரு" என்றான் பலி

நன்றி 
http://bagavathgeethai.blogspot.in/திருT.V. ராதாகிருஷ்ணன்.

புதன், மே 02, 2012

பெண்கள்...

எனது முந்தய பதிவில் பெண்களைப் பற்றி நமது முன்னோர்கள் கூறிய வற்றை 
 அட்லீஸ்ட் இந்தக் கால பெண்கள் தெரிந்து கொள்ளவாவது வேண்டும் என 
எழுதியிருந்தேன்.

 இதோ முதலாவதாக 
பெண்கள் பற்றி மனு நீதி சொல்வது என்ன?

  பெண்கள் குறித்த மனுவின் கருத்துக்களைக் காண்போம்.
 
”எந்தப் பருவத்தினவளாயினும், தனது இல்லத்திலே கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச் செயலும் இயற்றலாகாது” (10 : 147)

”இளமையில் தகப்பன், பருவத்தில் கணவன், விதவையான பின் மக்கள் இவர்கள் காவலிலன்றிப் பெண்கள் தன்னிச்சையாக இயங்கலாகாது” (10 : 148).

”இழி நடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக” (10 : 154).

”அன்றாட வேள்விகள் ஐந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது. கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு” (9 : 14).

”நிறை பிறழ்தலும், நிலையில் மனமும், நண்பின்மையும், மாதர் தம் இயல்பாவதால், கணவனால் நன்கு போற்றிப் புரக்கப்படும்போதும், அவர்கள் கணவரின் காவலை விரும்புவதில்லை” (9 : 15).

இவ்வித இயல்புகள் மாதர்க்குப் பிறப்புடன் வருவதாகையால் மாதர் ஒழுக்கம் கேடுறாமற் பேணும் முயற்சியில் ஆடவர் கவனமாக இருக்க வேண்டியது (9 : 17).

‘படுக்கை, ஆசனம், அழகு செய்தல், காமம், சினம், பொய், துரோக எண்ணம் இவற்றை மாதரின் பொருட்டே மனு படைத்தார்’ (9 : 17).
 

 நன்றி ..
/www.revivo.in/



சனி, ஏப்ரல் 28, 2012

( ஒரு சில !) பெண்கள்..!

அந்தக்கால பட்டினத்தார் முதல் இந்தக் காலத்தில் சோ வரை பெண்களை  கொஞ்சம் ஜாக்கிரதையாகவே கையாள வேண்டும் என்றும், அவர்கள் நம்பிக்கைக்கு அப்பார்ப் பட்டவர்கள் என்றும் கூறியிருப்பதை பார்த்திருக்கிறேன். கொலையும் செய்வாள் பத்தினி என்று சொல்லியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஒரு பெண் துணிந்து விட்டால் என்னவேண்டுமானாலும் செய்வாள் என்பதையும் பார்த்திருக்கிறேன். எனக்கு தெரிந்து ஒரு பெண்ணும் அவளது குடும்பத்தில் உள்ள பெண்களும் சேர்ந்து ஒரு ஆணை படாத பாடு படுத்தியதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறேன்.

அந்த ஆண்மகன் செய்த ஒரே பாவம் அவர்கள் வீட்டில் மாப்பிள்ளையாய் ஆனது தான். அவனை எப்படியாவது தங்களின் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்பதற்காக ( எல்லாம் அவன் சம்பாதிக்கும் பணம் முழுவதும் தங்கள் வீட்டுப் பக்கம் தந்து விட வேண்டும் என்பதற்காகவும் ஊதாரித்தனமாக அவர்கள் செய்துவிட்ட செலவுகளால் ஏற்ப்பட்ட கடன்களை அடைக்க வேண்டும் என்பதற்காகவும் தான் ) அவன் மீது இல்லாத பழிகளை எல்லாம் கூறி (இருக்கவே இருக்கிறது 498 A என்னும் பெண்களுக்கு ஆதரவான சட்டம்!) கோர்டிர்க்கும் போலீஸ் ஸ்டேஷ னுககுமாக அவர்களுக்கு உடன்படாத அவனை அலையவிட்டு  வறுத்து எடுத்து விட்டார்கள். பாவம் அவன் இப்போது ஏன்டா திருமணம் செய்தோம் என்று நொந்து போய் இருக்கிறான்.

 காரணம் அந்தப் பெண்கள் வீட்டில் அவர்களை அடக்கி ஆள சரியான ஆண் மகன் இல்லாதது தான்.

ஒருகாலத்தில் பரத்தையர் வீட்டிற்கே கணவனை கூடையில் சுமந்து சென்ற பெண்ணையும்,  ,கணவனின் சின்ன வீட்டிற்காக தனது நகைகளை எல்லாம்  தந்த கண்ணகி போன்ற பெண்களும்,எமனிடம் போராடி கணவனின் உயிரை மீட்டிய பெண்ணும்  வாழ்ந்த நாடு தான் இது இன்று இப்படி ஆகிவிட்டது! 

இன்று "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்" என்று ஒரு வெப் சைட் டினையே  வைத்துக்குக் கொள்ளும் அளவிற்கு பெண்களால் பாதிக்கப் பட்டவர்கள் அநேகம் பேர். ( உண்மையிலேயே பெண்களை வரதட்சினை கேட்டும் பிறவழியிலும் துன்புறுத்தும் ஆண்கள் இதில் சேர்த்தி இல்லை.)

ஆனால் இன்றும் கூட கணவனையே தெய்வமாக எண்ணி வாழும் பெண்களையும் பார்க்கின்றேன். 

பெண்களுக்கு ஆதரவான சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு பெண்ணீயம் பேசி ஆட்டம் போடும் பெண்களைப் பற்றியது தான் இந்தப் பதிவு. 

அந்தக் கால அர்த்த சாஸ்திரமும் ,மனு நீதியும் ,காம சாஸ்திரமும்,விதுர நீதியிலும் ஒரு நல்ல பெண் ,நல்ல மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று கூறியிருப்பதை  இந்தக்காலத்துப் பெண்கள் அட்லீஸ்ட் படித்து தெரிந்து கொள்ளவாவது வேண்டும்.

முன்னோர் எல்லாம் மூடர்களல்ல,,,,!நமக்குண்டு பண்பாடு..!

சனி, ஏப்ரல் 21, 2012

கடவுள் நம்பிக்கை.

இவ்வளவு காலமாக நான் எழுதிவரும் விஷயங்களை படிக்கும் எல்லோருக்கும் மனதில் ஒரு கேள்வி எழும்.எப்படி ஸ்ரீ ராகவேந்திரர் இந்த முரளி வேண்டியவுடன் ஏதாவது ஒரு உருவத்தில் அல்லது ஏதோ ஒரு வழியில் வந்து சரியாக உதவுகிறார்?.நானும் தான் கடவுள்களை வேண்டுகிறேன்,ஆனால் எனக்கு எந்தக் கடவுளும் உதவ வில்லையே என்று.

உண்மையில் பார்த்தால் கிட்டத்தட்ட எண்பதுகளில் ஆரம்பித்து இன்றுவரை சுமார் முப்பது ஆண்டுகால இடைவெளியில் நடந்தவைகளை தான் நான் எழுதியிருக்கிறேன்.அப்படியானால் இந்த நீண்ட கால இடைவெளியில் எனக்கும் பல துன்பியல் சம்பவங்கள் நடந்து இருக்கின்றன.  பல துன்பமான காலகட்டங்களில் நான் கடவுளை வேண்டியது போல எனக்கும் பல விஷயங்கள் நடக்காமல் போயிருக்கின்றன.

 இவை ஏன் என்று யோசிக்கும் போது எனக்கு இப்படித் தோன்றுகிறது. சில வகைத்துன்பங்களை நமக்கு கடவுள் இவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்று ஒரு தண்டனை போலவே தந்துவிடுகிறான்.அவைகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டி இருக்கிறது.ஏனென்றால் நமது கர்ம வினைகளின் காரணமாகவோ அல்லது இந்தப் பிறவியிலேயே நாம் செய்துவிட்ட பாவச் செயல்களினாலோ நமக்கு இந்த தண்டனைகள் கிடைக்கின்றது. நமது கர்ம வினைகளுக்கான தண்டனையும் இந்த பிறவிக்கான தண்டனைகளையும் நாம் இந்தப் பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்பதே இறைவனின் சித்தம்.அப்படி அனுபவித்து விட்டால் அடுத்த பிறவியில் நமக்கு முக்தியோ அல்லது  இதைவிட ஒரு நல்ல பிறப்போ நிச்சயம்.

அதனால் தான் கடவுளின் மீது தீவிர பற்று கொண்டவர்கள் ஏதாவது துன்பங்களை அனுபவித்தாலும் அவர்கள் அதிலிருந்து விரைவில் மீண்டு வந்து விடுவார்கள். எப்படி ஒரு குழந்தை நீச்சல்  கற்றுக்கொள்ளும் போது அதன்  தாயோ அல்லது தந்தையோ அந்தக் குழந்தை  எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் நீச்சல் கற்றுக் கொள்ளும் வரை அருகிலேயே இருக்கிறார்களோ அதே போல அந்த இறைவனும் நாம் துன்பங்களை அனுபவிக்கும் காலங்களில் நம் கூடவே இருந்து அதிலிருந்து வெற்றிகரமாக் மீண்டு வர நிச்சயம் உதவுவார்.

இதைத்தான் திரு ரஜினிகாந்த் அவர்கள் பாட்ஷா படத்தில் "நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான்,கெட்டவர்களுக்கு நிறைய தருவான் ஆனா கை விட்டுடுவான்"என்று கூறுவார். 

இதை நன்றாக உணர்ந்து பார்த்தால் அநேகமாக எல்லா ஆஸ்திகர்களும் மனம் நொந்து கேட்கும் " கெட்டவர்கள் எல்லாம் நன்றாக இருகிறார்கள் .நல்லவர்கள் மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் அனுபவிக்கிறார்கள்?" என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

அதாவது நல்லவர்களுக்கு துன்பங்கள் இந்தப் பிறவியிலேயே முடிந்து விடும்.கெட்டவர்களுக்கான தண்டனைகளுக்கு இந்தப் பிறவி போதாததால் அடுத்த பிறப்பில் அவரவர்க்கான பிறவிகளும் அதற்கான தண்டனைகளும் தொடரும்! இதுதான் இறைவனின் நியதி! 

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

அழகான கொலைகாரி...!

என்னுயிரே...என்னுயிரே....
பெண்ணாக  இங்கு வந்து   ஏன் பிறந்தாய்..?
பெண்ணாகப் பிறந்தாலும் பரவாயில்லை
அழகான ஓவியம் போல் 
அங்கமெல்லாம் ஏன் கொண்டாய்? .
அழகான ஓவியமாய் இருந்தாலும் பரவாயில்லை..
ஆசை கொண்டு அலையும்படி 
என் கண்ணில் ஏன் விழுந்தாய்?
கண்களிலே விழுந்தாலும் பரவாயில்லை..
காதல் என்னும் படுகுழியில் 
ஏன் என்னை விழ வைத்தாய்?
படுகுழியில் விழுந்தாலும் பரவாயில்லை
உயிரோடு உயிராக 
என்னுடன் ஏன் கலந்தாய்?
உயிரோடு உடலோடு உணர்வோடு
கலந்துவிட்டு - எனை 
ஒத்தையிலே வாடவிட்டு 
ஓடிவிட எண்ணுகிறாய்...
என்றாலும் பரவாயில்லை 
எனைக் கொன்று விட்டு நீ சென்றுவிடு..
உன் நினைவால்
 உருகி  உருகி இறப்பதை விட
ஒரே நாளில் உனக்காக 
என் உயிரைத் தருகிறேன்..
நீ எங்கு சென்றாலும் 
வாழ்க வாழ்க என 
என் இதயத்திலிருந்து வாழ்த்துகிறேன்....!
 

திங்கள், மார்ச் 12, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை .....13 !

ஸ்ரீ ரகவேந்திரரர் தரிசனம் கிடைத்ததும் மனம் கொஞ்சம் அமைதி அடைந்தது.எப்படியும் நாளை இடத்தைக் கண்டு பிடித்து வேலையில் சேர ஒரு உதவி கிடைக்கும் என என் உள் மனது சொல்லியது. அறைக்குச் சென்று ஒரு குளியல் போட்டு விட்டு கீழே உள்ள ரெஸ்டாரென்ட் டில் சாப்பிட்டேன். மீண்டும் மாடி ஏறி வரும்போது ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கி விட்டு ரூம் வந்து படுத்தேன்.நாளைய கவலைகளை ஸ்ரீ ராகவேந்திரரின் பாதத்தில் சமர்ப் பித்து விட்டு நிம்மதியாக உறங்கினேன்.

மறுநாள் காலை 6 மணிக்கு எனது செல்போன் மணியடித்து என்னை எழுப்பியது.
பெயரை பார்த்தேன்.குப்தா...! 

எடுத்து பேசினேன்.மறுமுனையில் குப்தாதான்." சார்,பெங்களூர் வந்தாச்சா சார்?எங்க தங்கி இருக்கீங்க?" என்றார்

"என்ன குப்தா என்ன விஷயம்?".என்றேன்.

"இல்ல சார்,எனக்கு இன்னைக்கு இருந்த மீட்டிங் கான்ஸல் ஆயிடிச்சு.அதனால நான் நேற்று இரவே புறப் பட்டு  பெங்களுர் வந்து விட்டேன். நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க,நான் வந்து உங்களை எங்கு போகவேண்டுமோ கூட்டிச் செல்கிறேன்."என்றார்.

எனக்கு பெங்களூரிலும் ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் பார்வை கிடைத்து விட்டது என்பதை புரிந்து கொண்டேன். குப்தாவிடம் மஜெஸ்டிக்கில் உள்ள கிருஷ்ணா lodge & ரெஸ்டாரென்ட் வரச் சொல்லி விட்டு நானும் குளித்து விட்டு ரெடி ஆனேன்.

எனக்கு சிறிது கூட சிரமம் இல்லாமல்  காலை 10 மணிக்கெல்லாம் பன்னீர் கட்டா ரோட்டில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் கொண்டு சென்று விட்டார் குப்தா.

" ரொம்ப நன்றி குப்தா...நான் நினைக்கவே இல்லை நீங்கள்  இப்படி முன் பின் தெரியாத ஊரில் சரியான நேரத்தில் வந்து உதவு வீர்கள் என்று. "

"அதனால என்ன சார்,எனக்கு இன்னைக்கு மீட்டிங் இருந்துதுன்னா என்னால வந்திருக்க முடியாது. எதோ உங்கள் அதிர்ஷ்டம் மீட்டிங் கேன்சல் ஆகி நான் இங்கு வந்தேன்..நீங்கள் அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும் "என்றார்.

"ஆமாம் குப்தா, உங்கள் முழு பெயரே குப்தா தானா ?"

"என்னை எல்லோரும் கூப்பிடுவது குப்தா என்று தான் ஆனால் எனது நிஜப் பெயர்  ராகவேந்திர குப்தா " என்றார்.........! 

இன்னும் வரும்...

வியாழன், பிப்ரவரி 09, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....12 !

 நான் பெங்களூர் செல்லும் முன் என் நினைவிற்கு வந்தது குப்தா வின் பெயர் தான்.வேலூர் ப்ரொஜெக்டில் எங்களது சப் contractor ஆகஇருந்த குப்தா தான் எனக்குத் தெரிந்த, பெங்களூரில் உள்ள ஒரே ஆள்!  நான் ஆகஸ்ட் 16 அன்று வேலையில் சேருவதாக சொல்லியிருந்தேன். ஆகஸ்ட் 15 அன்று வேலூர் காட்பாடியில் train பிடித்து இரவு பெங்களுர் சென்று தங்கி விட்டு மறு நாள் வேலையில் சேருவதாக திட்டம் .எனவே 15  ஆம் தேதி காலையில் குப்தா விற்குப் போன் செய்தேன். ஆனால் குப்தா, தான் இப்போது  சித்ரதுர்காவில் இருப்பதாகவும் மறுநாள் அங்கு நடைபெறும் வேலை சம்மந்தமாக ஒரு மீட்டிங் இருப்பதால் தன்னால் வர இயலாது என்றும் கூறிவிட்டார்.
வேறு வழியில்லாமல் தனியே பெங்களுர் கிளம்பினேன். மதியம் காட்பாடியில் வண்டியில் ஏறி இரவு ஒன்பது மணிக்கு பெங்களுர் மெஜஸ்டிக் கில் இறங்கினேன். முன்  பின் தெரியாத மொழி புரியாத ஊரில் இறங்கி வெளியில் வந்தேன். லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. சுற்றிலும் ஏகப்பட்ட ஹோட்டல் கள், lodge  கள் நியான் விளக்கில் மின்னிக் கொண்டிருந்தன. எதை தேர்ந்தெடுத்து  தங்குவது? நாளை காலை எப்படி பன்னீர் கட்டா ரோட்டில் உள்ள அந்த நிறுவனத்தைக் கண்டுபிடிப்பது? பன்னீர் கட்டா  ரோடிற்கு எப்படிச் செல்ல வேண்டும்?ஒன்றும் புரியவில்லை.

ஸ்ரீ ராகவேந்திரரை நினைத்துக் கொண்டேன். ராகவேந்திரா எப்படியாவது இன்றிரவு  தங்குவதற்கும் நாளை இடத்தைக் கண்டு பிடிப்பதற்கும் உதவி செய். வேலையில் சேர்ந்து விட்டால் பிறகு சுதாரித்துக் கொள்வேன் .நீதான் உதவவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்

மனதில் ஸ்ரீ ராகவேந்திரரை தியானித்துக் கொண்டே ஒவ்வொரு lodge ஆக பார்த்துக் கொண்டு, சிலவற்றை நானே நிராகரித்துக் கொண்டு ஒவ்வொரு lodge ஆக தாண்டி வந்தேன். ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து வலப்புறமாக உள்ள ரோடில் திரும்பி நேரே நான்கு ரோடுகள் சந்திக்கும் இடம் வரை வந்துவிட்டேன். எல்லா ஹோட்டல் களை விடவும் ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல் &lodge என்று ஒரு கார்னரில் இருந்த அந்த lodge ஐக் கண்டதும் எனக்குள் எதோ  ஒரு உள்ளுணர்வு இந்த ஹோடேலிலேயே தங்கலாம்  என்று கூறியது. அந்த ஹோட்டல் ஐ நோக்கி நடந்தேன் . இடப் புறமாக உள்ள படிக் கட்டு வழியாக lodge  க்கு செல்ல ஏறினேன். படி கட்டின் லேண்டிங்கில்  மிகப் பெரிய மரத்தினால் செய்யப் பட்ட ஸ்ரீ ராகவேந்திரர் !விளக்குகள்  ஏற்றப்பட்டு ஊதுவத்தி வாசனையுடன் மங்களகரமாக என்னை வரவேற்றார்!

இன்னும் வரும்....!


புதன், ஜனவரி 11, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை ......11 !

நான் சென்னை எக்மோரில் இருந்த அந்த நிறுவனத்தின் தலைமை காரியாலயம் சென்றேன்.நேர் காணல் நல்லவிதமாக முடிந்து,நேர்முகத்தேர்வில்  தேர்வானேன். நான் அப்போது வாங்கிக் கொண்டிருந்ததை விட அதிகமாக எனக்கு சம்பளவிகிதம் நிர்ணயிக்கப் பட்டது. மிகவும்  சந்தோஷமாக இருந்தது. எனக்கு பெங்களூரில் வேலை தரப் பட்டிருப்பதாகவும், வேலையில் எப்போது சேர முடியும் என்றும் கேட்டார்கள். எனக்கு ஒருமாத அவகாசம் தேவை என்றும் பழைய நிறுவனத்தின் மீதி வேலைகளை முடித்து விட்டு ஒரு மாதத்திற்குள் சேருகிறேன் என்றும் கூறினேன்.

சரி என்றும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் appointment ஆர்டர் அனுப்புவதாகவும் கூறினார்கள்.
நான் ஆர்க்காடு வந்து நண்பர் ஹிமாச்சல் இடம் அதைக்  கூறியதும் மிகவும் சந்தோஷமும் ஆச்சரியமும் அடைந்தார்!" உங்களுக்கு மகான்  ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் நிச்சயம் இருக்கிறது இல்லை என்றால் இப்படி ஒரு அதிசயம் நீங்கள் ராகவேந்திரரிடம் பிரார்த்தனை செய்த ஒரே வாரத்திற்குள் நடக்குமா?" என்று கூறி வாழ்த்தினார்.

நான் ஒரு மாதம் அவகாசம் கேட்டிருப்பதையும்  அதற்குள் மந்த்ராலயம் சென்று வரலாம் என்று நினைப்பதையும் கூறினேன். அப்படி என்றால் அவரும் மந்த்ராலயம் வருவதாக  கூறினார். 

அதன் பிறகு எனது நிறுவனத்தின் உயர் அதிகாரியிடமிருந்து எனக்கு போன் வந்தது .விரைவில் பில் ஐப் போட்டு முடித்து விட்டு பொள்ளாச்சி வருமாறு கூறினார்.அல்லது பொள்ளாச்சி வேலையில் சேர்ந்துவிட்டு  பிறகு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வேலூர் சென்று பில்லை முடித்துக் கொள்ளலாம் என்று கூறினார்.அதற்கு நான், எனது வேலையை ராஜினாமா செய்வதாகவும் எனக்கு வேறு நிறுவனத்தில்  வேலை  
கிடைத்து விட்டது அதனால் இங்கிருந்தே  பில்லை முடித்து விடுகிறேன் என்றும் , நான் பொள்ளாச்சி வரவில்லை என்றும் கூறி விட்டேன்

பிறகு கடைசி பில் முழுவதையும் முடித்துவிட்டு ஒரு நாள் நண்பர் ஹிமாச்சல் உடன் மந்த்ராலயம் சென்று வந்தேன். வந்தவுடன் எனது appointment order ம் வந்து சேர்ந்தது.!

பெங்களூர் சென்று வேலையில் சேர வேண்டும்.நான் முன் பின் பெங்களூர் பக்கமே சென்றதில்லை.எனக்கு பெங்களூரில் உறவுகள் யாரும் இல்லை.அங்கு எப்படி சென்று எப்படி இடத்தை கண்டுபிடித்து எப்படி வேலையில் சேருவது?எனக்கு கன்னடமும் தெரியாது.மனதில் லேசானே கிலி பிடித்துக் கொண்டது.!நான் பெங்களூர் செல்ல வேண்டிய நாளும் நெருங்கியது.....

இன்னும் வரும்.....

செவ்வாய், டிசம்பர் 20, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை ....10 !

            நான் வேலூர்  வேலைக்கான கடைசி பில்லையும் போட்டு முடிக்கும்  நேரம் நெருங்கியது. சரியாக எனது உயர் அதிகாரி போன் செய்து அடுத்த ப்ராஜெக்ட் பொள்ளாச்சியில் தயாராக  இருப்பதாகவும் அடுத்த வாரம் வந்து சேர்ந்து விடுமாறும் கூறினார். எனக்கு மீண்டும் அதே நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமில்லை. மனதிற்கு என்னவோ போலிருந்தது. 
       அன்று ஒரு வியாழக்கிழமை.ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் இரும்பேடு என்ற கிராமத்திலிருந்து உள்ள்ளே சுமார் 2 கிலோமீட்டர் சென்றால் ஒரு ராகவேந்திரர் கோவில் வரும். அந்தக் கோவிலுக்கு எனது ஆர்க்காட்டு நண்பர் ஹிமாச்சல் உடன் சென்றேன். எனது நண்பரிடம் எனது எண்ணங்களைக்  கூறி எனக்கு வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். 

       அந்த ராகவேந்திரர் சந்நிதியிலேயே ஒரு மணி நேரம் உட்கார்ந்து பிரார்த்தனை செய்தேன்.கோவில் நடை சாற்றப் போவதாக குருக்கள் கூறவும் நானும் எனது நண்பரும் கிளம்பினோம். அங்கிருந்து ஆற்காடு செல்லும் வழியில் திமிரி என்ற ஊரில் வண்டியை நிறுத்திவிட்டு  ஒரு கடையில் டீ சாப்பிடப் போனோம். 

    எனது நண்பரிடம் எனது ஆதங்கத்தை கூறிக் கொண்டே டீ சாப்பிட்டேன். அப்போது எனது போன் ஒலித்தது. எடுத்துப் பேசினேன். சென்னையில் ஒரு நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் எனது பயோ டேட்டா வைப் பார்த்தாதாகவும் அவர்கள் நிறுவனத்திற்கு ஏற்றதாக உள்ளதாகவும் interview  விற்கு வரமுடியுமா என்றும் கேட்டார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. எப்போதோ அனுப்பிய application !

      சரி எனக் கூறி என்றைக்கு என்பதனையும் கேட்டுக் கொண்டேன்.என்னோடு எனது நண்பர் ஹிமாச்சல் அவர்களுக்கும் ஆச்சரியம் !இப்போதுதான்  தான் ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டிவிட்டு வருகிறோம்  இன்னும் டீ கூட சாப்பிடவில்லை ,அதற்குள் இப்படி ஒரு செய்தியா ?என்னால் நம்பவே முடியவில்லை என்றார்.என்னாலும் கூடத்தான் நம்பமுடியவில்லை.! 

                   நான் interview விற்கு சென்னை செல்ல வேண்டிய அந்த நாளும் வந்தது..!

  அற்புதங்கள் தொடரும்....

வெள்ளி, டிசம்பர் 16, 2011

மனம்.....9 !

           நமது மனம் தானே நம்மை எண்ணி எண்ணி ஏங்கச் செய்கிறது? தரையில் படுத்தால் கட்டில் - மெத்தை இல்லையே என்ற ஏக்கம். நடந்து சென்றால் ஒரு டூ வீலர் கூட இல்லையே என்ற ஏக்கம். நம்மை நிம்மதி இன்றி அலையச் செய்கிறது நமது மனம் ! 

           எனது நண்பர் ஒருவர் என்னிடம் "நான்   மிகவும் நேசித்த ஒரு பெண் ,அவளும் என்னை நேசிப்பதாகக் கூறி கடைசியில் என்னை ஏமாற்றி விட்டாள்.இப்போது வேறு ஒரு பையனை மணந்து கொள்ளப் போகிறாளாம். எனக்கு மனசே சரியில்லை. அவளை மறக்க முடிய வில்லை  தற்கொலை செய்து கொள்ளலாம் போல  இருக்கிறது "என்று என்னிடம் கூறி வருத்தப் பட்டார்..  எனக்கும் நன்றாகத் தெரியும்  அவர்கள் இருவரும் சேர்ந்து பழகியது,சுற்றியது  எல்லாம். அவள் ஈசி யாக மறந்துவிடு என்று சொல்லிவிட்டாள்,ஆனால் இவரால்  மறக்க முடியவில்லை.பாவம்.  
       
    அவரிடம்  நான் கேட்டேன்,"  நீங்கள்  அவளை மிகவும் நேசிக்கிறீர்கள்  அல்லவா? "

"ஆமாம் ."  

"அவள் மீது உயிரையே வைத்திருக்கிறீர்கள்  அல்லவா?"

"ஆமாம்"

 " அப்படியானால் அவள் அல்லவா வருந்த வேண்டும்? நீங்கள் ஏன்    தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? உன் போல தன மீது உயிரையே வைத்திருக்கும் ஒருவரை  வேண்டாம் என்றால் அது அவளுக்கு அல்லவா நஷ்டம்? நீங்கள்  ஏன் வருத்தப் படுகிறீர்கள் ?இது போல மனநிலை கொண்ட ஒருத்தியை நீங்கள்  மணந்து  கொண்டாலும் உங்களால்  நல்ல வாழ்க்கையை வாழ முடியாது.அவள் உங்களை  மணந்து கொள்ளாததைப் பற்றி பின்னாளில் நிச்சயம் வருந்துவாள்.நீங்கள் உங்கள்  மனதை மாற்றிக் கொள்ளுங்கள் .கொஞ்சம் கஷ்டம்தான்  என்றாலும் இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும் " என்று கூறி அனுப்பினேன்.
    
   காலத்தின் போக்கில் மனதை மாற்றிக் கொண்ட அவர்,  இன்று வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்.

    மனிதர்கள் பலரும் இது போலத்தான் மற்றவர்களின் நடத்தைகளை  எண்ணி  மனம் வருந்திக் கொண்டிருப்பார்கள்.அல்லது தங்களையும் அதே போன்ற-நேர்மைக்கு மாறான - நடத்தைக்கு மாற்றிக் கொள்வார்கள்!

         நான் மிகவும் மதிக்கும்  நண்பர் ஒருவர் தனக்காக ஒரு கட்டிடம்  எனது மேற்பார்வையில் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார்.அவருக்கு கட்டிடத்  துறையில் அவ்வளவாக யாரையும் பழக்கம் இல்லாத தால் என்னிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். நான் அப்போது வேறு ஊரில் வேலை செய்து கொண்டிருந்ததால் சனி மற்றும் ஞாயிறு மட்டுமே என்னால்  வந்து பார்க்க முடியும்.எனவே  எனது  நம்பிக்கைக்கு  உரிய, நேர்மையான   கட்டிடப் பொறியாளர் ஒருவரிடம் அந்தப் பொறுப்பைத் தந்தேன்.அவர் எனது கல்லூரி கால நண்பரும் கூட. அவர் அங்கிருந்தே அந்தக் கட்டுமான பணிகளை பார்த்துக் கொள்ள நான் விடுமுறை நாட்களில் அவருடன் சேர்ந்து ஆலோசனைகளை செய்து அந்தக் கட்டிடத்தை கட்டிமுடித்தோம்.
          
            மிகவும் நல்லமுறையில் அந்தக் கட்டிடம் முடிந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.  

               ஆனால் பிறகு  எனது நண்பர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் போக்கு முற்றிலும் மாறியது! அவர்களும் எனது பொறியாளர்  நண்பரும் சேர்ந்து தான் அந்தக் கட்டிடத்தைக்  கட்டியது போலவும் எனக்கு அதில் எந்த விதமான தொடர்பும் இல்லாதது போலவும் காட்ட ஆரம்பித்தனர். பின்னாளில் என்னைப் பற்றி யாரோ சிலர் அவர்களிடம் தவறாகக் கூற என்னிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்!

           ஒரு சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டில் ஒரு விசேஷம் நடந்தபோது  என்னை அழைக்காமல் மற்ற அனைவரையும் ,-அந்தப் பொறியாளர் நண்பர் உட்பட- அழைத்து விருந்து வைத்தனர். இதைப் பார்த்த எனது பிற நண்பர்கள் "உன்னைக் கூப்பிடவில்லையா ?அவர்களுக்கு நீ அறிமுகம் செய்து வைத்த  அந்தப் பொறியாளர் கூட  வந்திருந்தாரே, உனக்கு அழைப்பு இல்லையா? .உனக்கு அதில் வருத்தமாக இல்லையா? என்று கேட்டனர்.    

       நான் கூறினேன்."நான் எதற்கு வருத்தப் பட வேண்டும்?என்னைப்  பொறுத்த வரையில் நான் அவர்களுக்கு எந்தத் தீங்கினையும் செய்யவில்லை.அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் இன்று வரை நினைக்கிறேன் .இன்றும் அவர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடாத செயலால் அவர்கள் தான் வருத்தப்  பட வேண்டும்.நான் நானாகவே இருக்கிறேன்.அவர்கள்  தான் மாறிவிட்டனர். எனவே கவலைப் பட வேண்டியது அவர்கள் தான்- நான் அல்ல !" என்றேன்.
        
            நிறைய பேர்  இப்படித்தான். அவர் அப்படிச் சொன்னார்.இவர் இப்படிச் சொன்னார் .அவன் மட்டும் அப்படி இருக்கலாமா ?இவன் மட்டும் இப்படிச் செய்யலாமா?நான் மட்டும்  எதற்கு அப்படிச் செய்ய வேண்டும்? எனக்கென்ன தலை எழுத்து?என்று மற்றவர்களின் நடத்தையினைப் பற்றிக் கூறி, நேர்மையிலிருந்து தடம்  மாறி மனசாட்சிப் படி செய்யவேண்டியதைக் கூட செய்யாமால் இருந்து விடுகின்றனர்.

              மற்றவர்களுக்காக நீங்கள் ஏன்  மாற வேண்டும்?உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதன் படி நடந்து கொள்ளுங்கள்.யாருக்காகவும் உங்கள் மனது சொல்லும் நல்லவைகளை செய்யாமால் இருந்து விடாதீர்கள்.

                ரோஜா என்றும் மென்மையாகவே தான் இருக்கிறது.முள் அருகினில்  இருப்பதைப் பார்த்து ரோஜாவும் முள்ளாக மாறி விடுவதில்லை. 

          நீங்களும் நீங்களாகவே இருங்கள். மற்றவர்களைப் பார்த்து நீங்களும்  முள்ளாக மாறவேண்டாம்.!

       மனதை  மாற்றுங்கள் ...... மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்....!    

   இன்னும் அலசுவேன்....!      

திங்கள், டிசம்பர் 12, 2011

மனம்....8 !

                                     நமது வாழ்க்கையில் நடை பெரும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நமது மனம் தானே தீர்மானிக்கிறது.?எப்பொழுதோ நடந்ததை அல்லது யாரோ சொன்னவற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் தீர்மானிக்கப் படுகின்றன. அவை சரியாகவும்   போகலாம்.தவறாகவும் ஆகலாம்! இந்த விளாயாட்டு தான் வேண்டாம் என்கிறது ஜென். 

                                                     ஜென் மேலும் சொல்கிறது.நீங்கள் எதையும் தீர்மானிக்க வேண்டாம் நிகழ்வுகளை அதன் போக்கில் விட்டு விடுங்கள்.நடப்பவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில் முன்பே தீர்மானிக்கப் பட்டு விட்டவைகளை உங்களால் மாற்ற முடியாது.

                                                     மனதினை லேசாக்கிக் கொள்ளுங்கள்.உங்களால் தீர்மாக்னிக்க முடியாது. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யாதீர்கள். ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடித்தவைகளுக்கு முன்னுரிமை தர முடியும்.  இது எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படி நடந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று  . இப்படி நினைக்கும் போது முடிவு எதிராக அமைந்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்.    
                                                     
                                    முன்னுரிமை தராமல் நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள்  என்றால்  முடிவு எதிராக அமையும் போது நீங்கள் மிகுந்த  ஏமாற்றம் அடைவீர்கள். அந்த ஏமாற்றம் உங்களை விரக்தி  அடையச் செய்யும். அதனால் கோபம் வரும்.கோபத்தின் விளைவுகள் விரும்பத்தகாதவையாக இருக்கும்!
                                   
                                    ஜென் துறவிகளைப் பற்றிக் கூறும் போது இப்படிச் சொல்வார்கள். அவர்கள் படுக்கையில் தான் உறங்குகிறார்கள். முட்களின் மீது படுப்பது இல்லை.ஆனால் படுக்கை கிடைக்காத போது அவர்கள் தரையில் படுத்து உறங்கவும் தயங்குவதில்லை.! 

                                                ஓஷோ அமரிக்காவில் இருந்த போது தினமும் விலைஉயர்ந்த  காரான ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் செல்வாராம்.ஆனால் அவர் நாடு கடத்தப் பட்டு இந்தியாவிற்கு வந்தபோது புனேயில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர்  வெளியில் செல்லும் போது நடந்தே  செல்வாராம். இதை கண்ட வெளிநாட்டு நண்பர் ஒருவர் நீங்கள் அமெரிக்காவில் இருந்த போது விலைஉயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் செல்வீர்கள்.இப்போது நடந்து செல்கிறீர்களே எப்படி உங்களால் முடிகிறது?என்று கேட்டாராம்.அதற்கு ஓஷோ,"அப்போது என்னிடம் கார் இருந்தது அதில் சென்றேன்.இப்போது கார் இல்லை.எனவே நடந்து செல்கிறேன்" என்றாராம்.  
  
                                                            இம்மாதிரியான பக்குவத்தைத் தான் நாம் பெற வேண்டும். இது இப்படி அமைந்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை என ஏற்றுக் கொள்ளும் வகையில் மனதினை இலகுவாக்கிக் கொள்ளுங்கள்.

                                           அப்போது மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்....!

   இன்னும் அலசுவேன்......
                                                         

சனி, டிசம்பர் 10, 2011

மனம்...7 !

           மனம்... எப்போதும் எண்ணி எண்ணி ஏங்குவது அதன் இயல்பு. இங்கிருந்து பார்த்தால் அந்தப் பக்கம் உள்ளது நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது. அங்கிருந்து பார்ப்பவர்களுக்கு இங்கிருப்பது நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது.ஆனால் எதிலுமே நிலையாக இருப்பதில்லை.
     

                     ஆசையில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்து எடுத்து விடுகிறோம்.இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம். ஆனால் அதன் முடிவு தவறாகிப் போனால் கலங்கிப் போய் விடுகிறோம். எல்லாம் நாமாக உண்டாக்கிக் கொண்டது அல்லவா?.கடைசியில் எல்லாம் விதி என்று அதன் தலையில் போட்டு  விடுகிறோம். இந்த விளையாட்டு எல்லாம் வீண்.ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?இதுவா அல்லது அதுவா? முடிவை விதியின் கையிலேயே தந்து விடுங்கள். நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்க வேண்டாம். நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நடக்கட்டும். நல்லதாக இருந்தாலும் சரி.அல்லாததாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லை. 


                இவ்வாறு நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்காத போது நடப்பது தான் விதி. எல்லாம் தானாகவே நடக்கட்டும்.எல்லாம் ஏற்கெனவே எழுதப் பட்ட விதி அதை மாற்ற முடியாது. ஒரு சினிமா அல்லது ஒரு டிராமாவைப்  போல.ஏற்கெனவே கதையை எழுதி முடித்தாகி விட்டது ! எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டு விட்டது.முடிவு இப்படித்தான் என்று அதனை எழுதியவருக்குத்தான் தெரியும்.  கதை இப்படிச் செல்ல வேண்டும் என்று நீங்கள் தீர்மானம் செய்வது வீண். எல்லாம் முன்பே எழுதி  முடிக்கப் பட்டு விட்டது. நாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.

              நீங்கள் இப்போதுதான் முதன் முதலாக ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். ஆனால் அதற்கான பாதை ஏற்கெனவே போட்டாகிவிட்டது. நீங்கள் அந்தப் பாதையிலேயே செல்லவேண்டியது தான்.அடுத்தடுத்து எந்த ஊர் வரும்?மேடுவருமா,பள்ளம்வருமா? ஆற்றைத் தாண்ட வேண்டுமா? ட்ராபிக் ஜாம் ஆகுமா?எதுவும் தெரியாது.ஆனால் குறிக்கோள் நல்லபடி ஊர் சென்று சேர வேண்டும் என்பது தான். வகுக்கப் பட்ட பாதையை விட்டு வேறு பாதையை தேர்ந்தெடுப்பீர்களா? அப்படித் தேர்ந்தெடுத்தால் அது சரியாகவும் இருக்கலாம்.அல்லது தவறாகியும் போகலாம்.ஆனால் நீங்கள் அந்த ரிஸ்க் ஐ எடுக்க மாட்டீர்கள். ஏற்கெனவே போட்ட பாதை யில் தான் செல்வீர்கள்.

                                     நமது வாழ்க்கையும் அதே போலத்தான்.பிறப்பிலிருந்து இறக்கும் வரைக்கான  ஒவ்வொருவரது பாதையும் போட்டாகி விட்டது. நமது வேலை என்ன? அதில் பயணிப்பது தான்.நடுவில் தடத்தினை மாற்றிக் கொண்டு பிறகு துன்பம் வரும் போது ஏன் விதியின் மீது பழி போட வேண்டும்? இன்பமா வரட்டும்.துன்பமா அதையும் சந்திப்போம்.சண்டையா நடக்கட்டும்.சமாதானமா வந்துவிட்டுப் போகட்டும். நாம் எதையும் தேர்ந்தெடுக்க வேண்டாம். வாழ்க்கையை  அதன்போக்கில் விட்டு விடுவோம். ஒரு நதியைப் போல. நதி எதைப்  பற்றியும் கவலைப் படுவதில்லை. அதன் போக்கில் ஓடுகிறது.பள்ளமாக இருந்தாலும் சரி மேடாக இருந்தாலும் சரி.வளைந்து நெளிந்து சென்றாலும் சரி.அதற்கென  வகுக்கப் பட்ட பாதையிலேயே செல்கிறது.கடைசியில் கடலில் கலந்து விடுகிறது.  

            நாமும் அதைப் போல இருப்போம்.வாழ்கையை அதன் போக்கில் விட்டு விடுவோம். இன்பமென்று எதுவும் இல்லை.துன்பம் என்றும் எதுவும் இல்லை.மனம் என்னும் கோப்பையை காலி செய்து விடுவோம்..மனதை வெறுமையாக விட்டு விடுவோம் . எந்த எண்ணங்களும் வேண்டாம்.

                  மனதை மாற்றுங்கள். மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்.!

 இன்னும் அலசுவேன்.....
                     

புதன், டிசம்பர் 07, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை....9 !

             வேலூர் அருகில் உள்ள குடியாத்தம் பகுதியை சேர்ந்த இரண்டு நண்பர்கள் .தீவிர ராகவேந்திர சுவாமி பக்தர்கள். அவர்கள் அவ்வப்போது மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திரரை வழி பட்டு வருவார்கள்.

             அவர்கள் எப்போதும்  மந்த்ராலயத்தில்  ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கிவிட்டு சன்னதியின் முன்பு அமர்ந்து  தியானம் செய்வது  வழக்கம்.(நானும் கூட  மந்த்ராலயம் செல்லும் போது  ஸ்ரீராகவேந்திரர் முன்பு அமர்ந்து ராகவேந்திரரை நினைத்து தியானம் செய்வது உண்டு.) அவ்வாறு அவர்கள் ஒருமுறை தியானம் முடித்து எழும் போது இருவருக்குள்ளும் ஒரே எண்ணம் தோன்றியது. அதாவது ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகளை எல்லோருக்கும் தெரியப் படுத்தும் வண்ணம் ஏதாவது செய்ய வேண்டும்  என்று.இருவரும் ஊரில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள்  அவ்வளவு தான்.  
            
                   மந்த்ராலயத்திலிருந்து வந்த அவர்கள் ஸ்ரீராகவேந்திரரின் மகிமைகளை television சீரியலாக எடுத்து வெளியிட வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.   அவர்களே வியக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடந்தன. சீரியல், சினிமா,ஸ்கிரிப்ட்  என முன் பின் அனுபவங்கள் எதுவும் அவர்களுக்கு  இல்லாமலே ஸ்ரீ ராகவேந்திரரின்  மகிமைகளை உலகிற்குத் தெரியப்  படுத்தும்  வண்ணம் ஒரு நல்ல தொலைக்காட்சித் தொடர் உருவானது.

                ஜெயா தொலைகாட்சி யின் ஜெயா பிளஸ் சானலில்  கிட்டத் தட்ட  50 வாரங்களைக் கடந்து அந்த சீரியல் இன்னமும்   வந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை  7.30  மணிக்கு அந்த நிகழ்ச்சியை நீங்களும் காணலாம்.
                        சீரியல், சினிமா, ஸ்கிரிப்ட்,T V ஸ்லாட் என முன் அனுபவம் எதுவும் இல்லாத அவர்களுக்கு இப்படி ஒரு எண்ணத்தை உண்டாக்கி அதை செயல் படுத்துமாறும் செய்தது ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் அன்றி வேறு என்ன?                             
                                                          ------------xx -----------

               வேலூர்-ஆற்காட்டில்  நான் எனது நிறுவனத்திற்காக  அரசாங்க ஒப்பந்த வேலை ஒன்றினை வெற்றிகரமாக செய்து முடித்ததைப் பற்றி எழுதியிருந்தேன். அந்த வேலையினை எங்களது நிறுவனத்திற்காக செய்து கொடுத்தவர்  எங்கள் நிறுவனத்தின்  sub -contrctor ஒருவர். வழக்கமாக எங்கள் நிறுவனம் எடுக்கும் வேலைகளை அவர் தான் ஆட்களை வைத்து முடித்துத் தருவார்.அவரின் பெயர் குப்தா.! பெங்களூரைச் சேர்ந்த அவர்  பின்னாளில் மீண்டும் எனக்கு உதவப் போகிறார் என்று எனக்கு அப்போது தெரியாது......... ! 

அற்புதங்கள் தொடரும்......
                 

திங்கள், டிசம்பர் 05, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....8 !

எனது அனுபவங்களைத் தொடரும் முன் கொஞ்சம் பிறர் அனுபவங்கள்....

""எனது கனவில் கடவுள் வருகிறார். சில சமயங்களில் அவர் என்னோடு பேசுகிற மாதிரி இருக்கிறது. இதெல்லாம் சாத்தியமா?'' -இப்படியொரு கேள்வியை ஆன்மிகப் பெரியவர் ஒருவரிடம் ஒரு பக்தர் கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர், ""கடவுள் கனவில் எல்லாம் வரமாட்டார். உங்களோடு பேசுகிறார் என்பது வெறும் மனப்பிரமை. இப்படி எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு திரியாதீர்கள். பிறகு உங்களை மனநோயாளி என்று சொல்லி, ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுவார்கள்'' என்று பதிலளித்தார். அவருடைய பதில் எனக்கு வருத்தத்தை அளித்தது. ஏனெனில், வேத- சாஸ்திரங்கள், புராண- இதிகாசங்கள், தர்ம சாஸ்திரம், நீதி சாஸ்திரம் அனைத்தையும் அறிந்தவர் அவர்.

"உங்கள் ஊருக்கு வெளியிலிருக்கும் அரச மரத்தின்கீழ் நான் இருக்கிறேன். என்னை வெளியே எடுத்துக் கோவில் கட்டு' என்று சாதாரண மனிதனின் கனவில் இறைவன் சொல்ல, அப்படியே ஒரு முருகன் சிலையோ, காளி சிலையோ, சிவலிங்கமோ கிடைக்க, அதைப் பிரதிஷ்டை செய்து பல சக்தி வாய்ந்த கோவில்கள் பல ஊர்களில் பல நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டிருக்கும் போது, கடவுள் கனவில் வரமாட்டார் என்று சொல்லுவதில் என்ன நியாயம் இருக்கிறது? இறைவன் திருவருளின்றி எதுவுமே நடப்பதில்லை. இது யுகயுகாந்தர மாய் நடந்து வரும் ஒரு விளையாட்டு.


 
அருண் என்று ஒரு பக்தர். இவர் சென்னையை அடுத்த வேளச்சேரியில் வசிக்கிறார். இவர் மந்திராலயம் ஸ்ரீ ராக வேந்திர சுவாமிகளின் தீவிர பக்தர். நேரமும் விடுமுறையும் கிடைக்கும்போதெல்லாம் மந்திராலயம் சென்றுவிடுவார். தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக இருக்கும் இவரது கனவில் சுவாமிகள் தோன்றி, தனக்கு ஒரு பிருந்தாவனம் கட்டுமாறு பணித்தார். கனவிலிருந்து விழித்த அருண் திடுக்கிட்டார். சுவாமிகளே நேரில் வந்து சொன்னது மாதிரி இருந்தது அந்தக் கனவு. கனவை நம்பாமலும் இருக்க முடியவில்லை. மிக மிக எளியோனா கிய என்னால் அந்த மகானுக்கு கோவில் கட்ட முடியுமா என்று திகைத்தார். தன் வீட்டி லுள்ளவர்களிடமும் நண்பர்களி டமும் கனவைப் பற்றிச் சொன்னார். பின்னர் அவரே ஒரு முடிவெடுத்தார்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேனுபுரீஸ்வரர் என்கிற சிவாலயமும், அதையொட்டி சித்தர்கள் கோவிலும் இருக்கும் ஊர் சித்தர்பாக்கம். இப்போது அதை சித்தாலப்பாக்கம் என்றழைக்கிறார்கள். வேளச்சேரியிலிருந்து மேடவாக் கம் சென்று, அங்கிருந்து மாம்பாக்கம் சாலை வழியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றால் பழம் பெரும் கிராமமான சித்தர்பாக்கம் எனும் சித்தாலப்பாக்கத்தை அடையலாம். அந்த சித்தாலப்பாக்கத்தில் சிறிதளவு நிலம் வாங்கி, தன் நண்பர்களுடனும் பக்தர்களுடனும் கோவில் பணிகளைத் தொடங்கி விட்டார் அருண். அவரே எதிர்பாராத விதமாகப் பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் நிதி கொடுக்க, பிருந்தாவன வேலைகள் அனைவரும் வியக்கும்படி விரைவாக நடைபெற ஆரம்பித்தது.

மந்திராலயத்திலுள்ள மூல பிருந்தாவனத்திலிருந்து மிருத்திகை (மண்) எடுத்து வந்து, அதற்கு 48 நாட்கள் சிறப்புப் பூஜை செய்து, 24-1-2007 அன்று சித்தாலப் பாக்கத்தில் பிருந்தாவனப் பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடந்தேறியது. அப்போது கோவில் கோபுர கலசத்தை கருடன் ஒன்று மூன்று முறை வட்டமிட்டுப் பறந்ததை அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மெய்சிலிர்த்தனர். "ஓம் நமோ நாராயணா, ஓம் ஸ்ரீ ராகவேந்திரா' என்று விண்ணதிர முழங்கினர். எல்லா நலன்களையும் ஸ்ரீ ராகவேந்திரர் அனைவருக்கும் காமதேனுவாக இருந்து வழங்குவார் என்பதற்காக இதனை "நல பிருந்தாவனம்' என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

பிருந்தாவனத்தையொட்டி ஸ்ரீ ராகவேந்திரர் ஏழடி உயரத்தில் பவ்ய ஸ்வரூபமாகக் காட்சியளிக்கிறார். சிரசில் பிரஹலாதராக இருந்து வணங்கிய ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும், மார்பில் ஸ்ரீ ராமரையும் தாங்கி கண்கொள்ளா அழகுடன் காட்சியளிக்கிறார் மகான் ராகவேந்திரர். உடுப்பி பாலிமார் மட சுவாமிகள்

ஸ்ரீ விஞ்ஞானிதி தீர்த்தர் இந்தக் கோவிலுக்கு விஜயம் செய்து பூஜைகளை நடத்தி, சித்தாலப்பாக்கத்தை விட்டுப் பிரியவே மனமில்லை என்று வர்ணித்திருக் கிறார். திருவுருவச் சிலையை 48 நாட்கள் ஜலதான்ய வாசம் செய்கையில், ஆறாவது நாளிலிருந்து ஒரு சர்ப்பம் சிலையின்மீது இரவு முழுவதும் இருந்து, பொழுது புலர்ந்ததும் சென்று விடுவது வழக்கமாக இருந்தது என்றும்; 48-ஆவது நாளன்று காணாமல் போன ஆஞ்சனேயர் சிலையைத் தன் உடலில் சுற்றிக் கொண்டு மேலே வந்து அந்த சர்ப்பமே கொடுத்தது என்றும் சொல்லப்படுகிறது.

மந்திராலயத்தில் உள்ளதுபோல் மாஞ்சாலி அம்மனுக்கும் சிலை வைத்து பூஜை நடைபெறுகிறது. ஸ்ரீ ராகவேந்திரர் சில ஆண்டுகள் மதுரையில் இருந்து கல்வி கற்றார். பின்னர் கும்பகோணம் புறப்படும்போது மதுரை மீனாட் சியை விட்டுப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். அப்போது மீனாட்சியம்மனே அவரிடம், "நீ இருக்கும் இடத்திலெல்லாம் நான் இருப்பேன்' என்று சொன்னதால், மாஞ்சாலியம்மனே மீனாட்சி என்று ஓர் ஐதீகமும் உண்டு. அதனால் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு மடமோ, கோவிலோ அமைக்கும்போது எல்லா ஊர்களிலும்

ஸ்ரீ மீனாட்சியம்மனின் சொரூபமாக மாஞ்சாலியம்மனையும் பிரதிஷ்டை செய்வது வழக்கம். அது சித்தாலப்பாக்கத்தி லும் நடைபெற்றுள்ளது.

2007-ஆம் ஆண்டுவரை வெறும் பொட்டல் காடாகக் காட்சியளித்த சித்தா லப்பாக்கத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் அமைந்த பிறகு எங்கெங்கு காணினும் சிறிய, பெரிய குடியிருப்புகள், அடுக்கு மாடி வீடுகள்! இரண்டு மூன்று வருடங்களில் ஸ்ரீ சுவாமிகள் தன்னருகே அனைவரையும் அழைத்துக் கொண்டு விட்டார் போலும்!

2007-ஆம் ஆண்டு கும்பாபிஷேகத் திற்கும், பிருந்தாவனப் பிரதிஷ்டைக்கும் நாள் குறித்துவிட்ட நிலையில், நிதி நெருக் கடி ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் மீண்டும் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஆதம்பாக்கத்தில் மாதவாச்சார் என்னும் அன்பர் மந்திராலய உண்டியில் போடுவதற்காக பத்தாயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். ஆனால் உடனடியாக அவரால் மந்திராலயம் செல்ல முடியவில்லை. ஸ்ரீ ராகவேந்திரர் அவர் கனவில் தோன்றி, "நீ மந்திராலயம் வரவேண்டாம். இங்கேயே சித்தாலப்பாக்கத்திற்கு நான் வந்திருக்கிறேன். அதனால் பத்தாயிரம் ரூபாயை அந்தக் கோவிலுக்கு நீ நன்கொடையாக வழங்கு' என்று சொல்ல, மகிழ்ந்து போன மாதவாச்சார் சித்தாலப்பாக்கம் எங்கிருக்கிறது என்று தேடி வந்து, பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாராம்.

ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் சித்தாலப் பாக்கம் வந்து தியானம் செய்வதுண்டு. ஒரு நாள் அவர் தியானம் செய்து கொண்டிருக்கும்போது, அருகிலிருந்த ஏரியில் ஸ்ரீ சுவாமிகள் ஸ்நானம் செய்துவிட்டு பிருந்தாவனத்துள் நுழைந்ததைப் பார்த்து அதிசயப்பட்டாராம். அனைவரிடமும் ஸ்ரீ ராயரின் அருள் தனக்குக் கிடைத்துவிட்ட தாகச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்.

அதேபோல சென்னை துறைமுகப் பொறுப் புக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ரமணன் என்பவர் சிறந்த ராகவேந்திர பக்தர். பல ஆண்டுகளாக வியாழக் கிழமைகளில் உணவு ஏதும் அருந்தாமல் ஸ்ரீ ராகவேந்திரரே கதி என்று கிடப்பவர். தாம்பரத்தில் வசிக்கும் இவர் ஒவ்வொரு வியாழனன்றும் திருவல்லிக் கேணி, மாம்பலம் என்று ஏதாவது ஓரிடத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ ராயரை நேரில் சென்று தரிசிப்பது வழக்கம். திடீரென்று அவருக்கு இதய நோய் வந்து அவதிப்பட்டார். அந்த வார வியாழக் கிழமையில் தான் வசிக்கும் தாம்பரத்திற்கு அருகில் ஏதும் கோவிலோ மடமோ இல்லையே என்று வருந்தினார். புதனன்று இரவில் ஸ்ரீ ராயர் அவர் கனவில் தோன்றி, சித்தாலப்பாக்கத்தில் தன்னைக் காண வருமாறு அழைத்தாராம். அப்படிப்பட்ட மகான்தான் ஸ்ரீ ராகவேந்திரர்.

2007-ஆம் ஆண்டு கட்டப்பட்ட சித்தாலப் பாக்கம் ஸ்ரீ ராகவேந்திரர்  கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய ஆராதனை வெகு சிறப்பாக நடைபெறுவதோடு, ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானமும் தன் நண்பர்களின் துணையோடு செய்து வருகிறார் அருண். அதுவும் ஐந்து நாட்கள். அந்த ஐந்து நாட்களிலும் இசைக் கச்சேரிகள், சொற்பொழிவுகள் என்று கோலாகலம். 2008-ஆம் ஆண்டு

ஸ்ரீ ராகவேந்திர சரித்திரமும், 2009-ஆம் ஆண்டு சுந்தர காண்டமும் சொல்லும் வாய்ப்பினையும் புண்ணியத்தையும் எனக்களித்தார் அருண்.

பக்தர்கள் இவ்வாலயம் சென்று ராகவேந்தி ரரின் அருளைப் பெற்றிடுங்கள்.


                                                                                             --  பா.சி. ராமச்சந்திரன்


Name : Santha Kumari Sitharthan Date & Time : 1/5/2011 1:30:34 PM
-----------------------------------------------------------------------------------------------------
நீங்கள் அனுப்பிய இந்த செய்தி மிகவும் அருமை மெய் சிலிர்த்தது ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு ஜெய். ப்ளீஸ் சிதலபக்கம் முகவரி & லன்மார்க் கூறவும். நங்கள் 1 முறையாவது சுவாமி தரிசனம் பெற வேண்டும் .எங்களது குறைகளை அவரிடம் கூறி ஆசி பெற வேண்டும்.மிக்க நன்றி .
-----------------------------------------------------------------------------------------------------
Name : gururajan, chengalpet Date & Time : 9/6/2010 9:47:18 AM
-----------------------------------------------------------------------------------------------------
vanakam
-----------------------------------------------------------------------------------------------------
Name : நாகராஜன் பாப்பாரப்பட்டி Date & Time : 8/4/2010 5:23:23 PM
-----------------------------------------------------------------------------------------------------
வணக்கம் அடியேன் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சார்ந்தவன்.1935ம் ஆண்டு ராயரின் ப்ருந்தாவன ப்ரதிஷ்டை இவ்வூரில் நடைபெற்றது.அப்போதைய மிட்டாதார் திரு அச்சுத அய்யரின் தம்பி கிருஸ்ணமூர்த்தி ராவ் அவர்கள் தனக்கு ஆண் வாரிசு வேண்டி மந்திராலயத்தில் சேவை புரிந்தபோது "உங்கள் ஊருக்கு நானே வருகிறேன் என்று கனவில் சொன்னதாக உண்மை வரலாறு உள்ளது. மகானின் அருளால் ஆண் குழந்தை பிறந்து கே.குருராவ் என்ற பெயரில் இன்றும் அவர் இங்கு வாழ்ந்து வருகிறார் ராயரின் அருள் பெற்றிட அனைவரையும் பாப்பாரப்பட்டிக்கு வரவேற்கிறேன்
-----------------------------------------------------------------------------------------------------
Name : k.k.gopalswamy Date & Time : 7/25/2010 10:44:24 AM
-----------------------------------------------------------------------------------------------------
என் கனவில் வியாசர் வந்து நல் ஆசி அருளினார், அன்றிலிருந்து நான் வியாசர் பக்தன் ஆகி நாளை (ஜூலை இருபத்தைந்து ) அவருடைய ஜெயந்தி -ஐ ஒரு ஆஸ்ரமத்தில் கொண்டாடபோகிறேன். நான் அவருக்காக ஒரு தியானமண்டபம் கட்டுவதற்கு முழு முயற்சி எடுத்துள்ளேன்.இதைப் பற்றி வுங்கள் மேலான ஆலோசனை தேவை, நன்றி
-----------------------------------------------------------------------------------------------------
Name : Saravanaraju Date & Time : 7/19/2010 1:58:19 PM
-----------------------------------------------------------------------------------------------------
உண்மை, கடவுள் என் கனவில் வந்திருக்கிறார். என் இரண்டவது பையன் பிறந்தது தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி முதுமாலயம்மன் என் கனவில் வந்து உனக்கு இரண்டவது பையன் என்று சொன்னது. சொன்னபடியே எனக்கு இரண்டவது பையன்தான்.
-----------------------------------------------------------------------------------------------------
 ஆதாரம்  : www . nakkheeran .in  01 .07 .10 

 அற்புதங்கள்    தொடரும்.....

வெள்ளி, டிசம்பர் 02, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை....7 !

  நான் ராகவேந்திரரை நினைத்து வேண்டிக்கொண்டே வந்தேன். இறங்கியதுமே ஸ்ரீ ராகவேந்திரரைக் கண்டதும் பரவசம் ஆனேன். அந்தக் கடையிலேயே டீ சாப்பிட்டுவிட்டு அந்த அரசாங்க அலுவலகத்திற்கு வழிகேட்டேன். வலதுபுறம் திரும்பினால் முதல் வீடு தான் அந்த அலுவலகம் என்று கூறினார்கள். தேட வேண்டிய வேலை இல்லாமல் சுலபமாக முடிந்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அந்த அலுவலகம் சென்று நான் வந்த காரணத்தைக் கூறினேன். எங்கள் நிறுவனத்தின் ஒப்பந்த  வேலைக்கான பணிகளை செய்யும் பிரிவு மேல் மாடியில் இருப்பதாகக் கூறினார்கள். நான் மேலே சென்று அந்த  வேலைக்கான பொறுப்பு வகிக்கும் பொறியாளரின் அறையின் முன் சென்று நின்றேன்.  அந்த அறையின் முன் வைக்கப்  பட்டிருந்த பெயர்ப் பலகையில்  அந்தப் பொறியாளரின் பெயர் எழுதப் பட்டிருந்தது...

 அவரின் பெயர்....ராகவன்.!..அப்போதே எனக்கு விளங்கிவிட்டது.இந்த ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடியும் என்பது. அதே போல அந்தப் பொறியாளர் எனக்கு சக துணை இல்லாத குறையைப் போக்கி கடைசி வரையில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து அந்த ப்ராஜெக்ட் ஐ  குறித்த  காலத்தில் முடிக்க மிகவும் உதவினார் .    

நான் வேலை செய்த அந்த நிறுவனம் குறித்த காலத்தில் வேலையை திறம்பட முடித்து நிலுவையில் ஒரு ருபாய் கூட இல்லாமல் முழு ஒப்பந்தத் தொகையையும் பெற்ற மிகச்சில வேலைகளுள் அதுவும் ஒன்றாக அமைந்தது!

இவ்வாறாக நான் ஒரே ஆளாக தனியாக நின்று அந்த ப்ராஜெக்ட் ஐ வெற்றிகரமாக முடித்தாலும் எனக்கு எனது தலைமை எந்தவிதமான பதவி உயர்வோ அல்லது சம்பள உயர்வோ தரவில்லை! அந்த நிறுவனத்தின் தலைமை காரியாலயம் மும்பையில் இருந்தாலும் இங்கே தலைமை ஏற்பவர் தான் இங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை எடுப்பார். எனவே எனது பதவி உயர்வும் சம்பள உயர்வும் அவர்கைகளில் இருந்தும் ஏனோ எனக்கு எதுவும் அவர் செய்யவில்லை. ஆனால் எனக்கு பொள்ளாச்சியில் வேறு ப்ராஜெக்ட் தயாராக இருப்பதாகவும் ,கடைசி பில் ஐ முடித்து விட்டு அங்கு செல்ல  தயாராகும் படியும் எனக்கு தகவல் தரப் பட்டது.

இன்னும் வரும்....

வியாழன், நவம்பர் 24, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை....6 !

சில விஷயங்கள் அமானுஷ்யமாக நடக்கும் போது நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். நான் எப்போதெல்லாம்  ஸ்ரீ ராகவேந்திரரை மனமுருக  நினைக்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு அமானுஷ்யமாக , எதிர் பாராமல் ஏதாவது நடக்கும். இதை மற்றவர்களிடம் கூறினால் அவர்களுக்கு அதில் ஒன்றும் ஆச்சர்யமாக இருக்காது. போகிற போக்கில் கேட்டுக் கொண்டு போய்விடுவார்கள்! இது எல்லாம் ஒரு விஷயமா என்பது போல!

2004  மற்றும்  2005 ஆண்டுகளில் நான் வேலை செய்த நிறுவனம் அரசாங்க சம்மந்தமான வேலைகளை ஒப்பந்தம் செய்து , முடித்து  கொடுக்கும் நிறுவனம். ஸ்ரீபெரும் புதூரில் நான்கைந்து சக பொறியாளர்களுடன் வேலை செய்த என்னை பதவி உயர்வு என்ற பெயரில்,  ஆர்க்காடு - வேலூரில் வேலைக்கு  அனுப்ப முடிவு செய்தது.

அங்கு எனக்கு துணையாக , உதவியாக வேறு ஒரு பொறியாளரை  வேலையில்  அமர்த்த எனது தலைமை மறுத்து விட்டது.அப்படியானால் நான் ஒருவனே அனைத்து வேலைகளையும் செய்யவேண்டிய  நிர்பந்தம் ஏற்படும் . 

அதுவும் அது அரசாங்க சம்மந்தமான ஒப்பந்த வேலை என்பதால் அரசாங்கத்தின் பொறியாளர்களின் கீழ் ,அவர்களது ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி வேலை செய்ய வேண்டும்.அதனால் நான் அடிக்கடி அந்த பொறியாளர்களின் அலுவலகம் சென்று அவர்களுடன் ஆலோசனை செய்யவேண்டும். அவர்கள் தான் எங்களது வேலைகளை மேற்பார்வை இட்டு ஒப்புதல் தரவேண்டும்.மேலும் அவர்கள் எங்களது வேலைக்கான பில் களை பாஸ் செய்தால் தான் எங்களுக்கு செய்த வேலைகளுக்கான பணம் வரும்.

எனவே  வேலை நடைபெறும்  இடத்தில் வேலைகளை கவனித்து செய்ய வேண்டியதுடன்  அரசாங்க பொறியாளர்களையும்  சந்தித்து வரவேண்டிய பெரும் பொறுப்பும் என் ஒருவன் மீதே விழும்! மேலும் செய்த  வேலைகளுக்கான பில்களை எழுதி பாஸ் செய்ய வைத்து பணம் வாங்கும் வேலையையும் நான் ஒருவனே செய்ய வேண்டும்!

நான் எவ்வளவு கேட்டபோதும்  இன்னொரு பொறியாளரை தர மறுத்துவிட்டது நிர்வாகம்.  

இந்தநிலையில் நான் வேலூர் சென்று அந்த அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்வதற்கான ஆர்டர் ஐப் பெற்று வேலையை  ஆரம்பிக்க என்னை வேலூருக்கு மாற்றியது நிர்வாகம். 

மிகவும் படபடப்புடனும் டெண்ஷனுடனும் வேலூருக்கு பஸ்  ஏறிய நான் மனமுருக ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கினேன். நீதான் என்னுடனே இருந்து இந்த ப்ராஜெக்ட் ஐ  நல்லவித மாக முடித்துத் தரவேண்டும் என வேண்டினேன். 

நான் வேலூரில் உள்ள அந்த அரசாங்க அலுவலகம் செல்ல காந்திநகரில் இறங்கியபோது என்னை வரவேற்றது ஸ்ரீ ராகவேந்திரா பேக்கரி & டீ ஸ்டால் ! பெரிய போர்டில்  ஸ்ரீராகவேந்திரர் காட்சி அளித்துக் கொண்டு புன்னகையுடன் முதன் முதலாக வேலூரில் அடி எடுத்து வைக்கும் என்னை   வரவேற்றார்!!

அற்புதங்கள் தொடரும்...!



















திங்கள், நவம்பர் 21, 2011

மனம்.....6 !

                     வினோதமான மனம் ! எண்ணிப் பாருங்கள், இந்த மனம் எண்ணுகின்ற எண்ணங்களில், அதன் மூலம் செய்யப் படும் செயல்களில் அதிகம் பாதிக்கப் படுவது மற்றவர்களாகத்தான் இருப்பார்கள் ! தங்களுக்குத் தாங்களே பாதிக்கப் படும் படியாக ஒருவரும் நடந்து கொள்ளமாட்டார்கள்! அப்படி நடந்துகொண்டால் அவர்கள் நிச்சயம் மன நலம் பாதிக்கப் பட்டவர்களாகவோ அல்லது பாதிக்கப் படப் போகிரவர்களாகவோ தான் இருப்பார்கள். ஏன் என்றால் யாரும் தங்களுக்கு பாதிப்பு உண்டாக்கும் எதையும்  நினைக்கவோ செய்யவோ மாட்டார்கள்.!

        ஏன் இம்மாதிரி எண்ணங்கள் மனதில் உண்டாகிறது?   எல்லாம் முற்காலத்தில் நடந்ததையோ  அல்லது யாரோ அவர்கள் மனதில் விதைத்து விட்டதையோ  மனதில் நிரப்பிக் கொண்டு  விட்டதால் ஏற்ப பட்டது.
   
அம்பிகாபதி படம் நேற்று பார்த்தேன். அம்பிகாபதி, அமராவதி  இருவரையும்  பிரிக்க நினைத்து,அமராவதியின் தந்தையான மன்னனும் மற்றவர்களும்  கடவுளின் மீது 100 பாடல்களை சிற்றின்பம்  சேர்க்காமல் அம்பிகாபதி பாடவேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்கள்.  கடைசியில்  அமராவதியைப் பார்த்த அம்பிகாபதி 99 பாடல்கள் முடிந்த நிலையிலேயே சிற்றின்பப் பாடலை பாடி விட, அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதிக்கப் படுகிறது.அவனுடன் கூடவே அமராவதியும் இறக்கிறாள்.

இதில் என்ன கண்டுவிட்டார்கள் மன்னனும் மற்றவர்களும் ? ஏன் இந்தக் கொடூர எண்ணம்? இருவரையும் வாழவிட்டு அவர்கள் சந்தோஷமாக வாழ்வதைப் பார்ப்பதில் கிடைக்கும் இன்பம் அவர்களை இறக்க வைத்து
பார்த்ததில் கிடைத்திருக்குமா?
  
லைலா,,மஜ்னு காதலும் ,சலீம் அனார்கலி காதலும்  கூட இப்படித்தான். மற்றவர்களை துன்பப் படுத்தி காணும் இன்பம் என்ன ஒரு கொடூரமான இன்பம்? ஏன் இவை எல்லாம்? 

இன்று இக் கதைகளைக் கேட்கும் யாரும்" பாவம்  இருவரையும் இணைத்து வைத்திருக்கலாம்" என்றே கூறுவார்கள்! ஆனால் யாரும் தங்கள் வீட்டில் இப்படி ஒரு காதல் கதை உண்டானால் ஏற்க மாட்டார்கள்! ஏன்? மனதில் நிரப்பிக் கொண்ட குப்பை எண்ணங்களே காரணம்!

வாழ்க்கையை ஒரு ஏரியல் பார்வையில் பார்க்கக் கற்றுக்  கொள்ளுங்கள்.
ஒரு ஏரோ பிலேனிளிருந்து கீழே பார்த்தால் எப்படி இருக்கும்? அதே போல நமது வாழ்க்கையில் நடந்ததையும்  மற்றவர் வாழ்க்கையில் நடந்ததையும்  பாருங்கள் !உங்களுக்கே சில நடந்தவை களையும் உங்கள் நடத்தைகளையும் ,  எண்ணங்களையும் பார்க்கும் போது சிரிப்பாகவும் வெட்கமாகவும்,வருத்தமாகவும் ஏன் தான் இப்படி நடந்து கொண்டோமோ என்றும் இருக்கும்! 

மனதில் நிரப்பிக் கொண்டதை கீழே கொட்டுங்கள்.மனதை காலியான கோப்பை ஆக்குங்கள். சிறிது  காலம் கழித்து அந்தக் கோப்பையையும் உடைத்து எறியுங்கள் ! 

மனதை மாற்றுங்கள்..நீங்களும் மகிழ்ச்சியாய் இருங்கள் .மற்றவர்களையும்  மகிழ்ச்சியாய் வைத்திருங்கள்.
 இன்பம் பொங்கும்....என்றும் தங்கும்......!

இன்னும் அலசுவேன் !