இந்த வலைப்பதிவில் தேடு

புதன், ஆகஸ்ட் 01, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....17 !

மகான் ஸ்ரீ ராகவேந்திரரின்  அருள் பார்வை உண்மையான பக்தியுடன் அவரை பணிந்து வேண்டி நிற்கும்  அனைவருக்கும் உண்டு என்பதை  பல ஊடகங்களிலும் பலர் கூறும் அனுபவங்களில் இருந்தும்  அறிய முடிகிறது.    தன்னை  மனமுருக வேண்டி நிற்கும் பக்தர்களுக்கு எதோ ஒரு வடிவத்தில் எதோ ஒரு வழியில் வந்து உதவி  செய்கிறார் என்பதும் தெரிகிறது.!

 மதுரையம்பதி என்ற Blogger இல் குரு பக்தியினைப் பற்றியும் ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமை பற்றியும் வெளியான ஒரு விவாதத்தைப் பார்ப்போமா?

தி. ரா. ச.(T.R.C.) said...
குருபக்தியால் அப்படிப்பட்ட சுகமான மோக்ஷத்தை யார் வேண்டுமானாலும் அடையக் கூடும்

உண்மைதான் மௌளி.மஹான் ராகவேந்திரரை முதல் முறையாக நான் 1978இல் பம்பாயில் வங்கி ஆடிட்டிங் போயிருந்தபோது அறிந்தேன். உடனே மந்திராலயம் செல்ல வேண்டும் என அவா மிகுந்தது. ஆனால் அப்போது 5 மாதம் தொடர்ச்சியாக ஆடிட்டிங்கில் இருந்ததால் சென்னை திரும்ப அழைத்து சென்னையில் வேறு கிளைக்கு ஆர்டர் போட்டு விட்டார்கள். நானும் சென்னை போவதற்கு ரயில் டிக்கெட் எடுத்து விட்டென். நமப முடியாததுதான் ஆனால் உண்மையாக நடந்தது. இரவு கனவில் ஸ்வாமிகள் தரிசன்ம் துங்கபத்ராவில் ஸ்நானம் செய்வது போல். மறுநாள் கடைசிநாளாக ரிபோர்ட் ரெடி செய்வதற்கு சென்று முடித்து எல்லோரிடமும் விடை பெற்றேன். இரவு 10 மணிக்கு வண்டி.
மாலை 3.00 மணிக்கு தலைமை அலுவகத்திலிருந்து ஒரு தந்தி வந்தது.அதில் ஆந்திராவில் அதோனி கிளையில் எதோ தில்லு முல்லு நடந்ததாகவும் அதனால் சென்னைக்கு வராமல் அதோனி சென்று துப்புத்துலாக்கி அறிக்கை அளித்துவிட்டு சென்னை வர வேண்டும் என்று இருந்தது. என்ன ஆச்சர்யம் அதோனியிலிருந்து 30 KM தான் ஸ்வாமிகளுடைய பிருந்தாவனம்
அதோனிக்கு சென்று பின் பிருந்தாவனும் 2 முறை தரிசனம்பெற்றேன்.என்னை அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்தவர் அந்த கருணாமூர்த்தியான ஸ்வாமிகள்தான்.
என்னஒரு  பெரும் தவம் நான் செய்தது அறியேன் என்னயும் குரு ஸ்ரீராகவேந்திரர் ஆட்கொண்டது என் சொல்வேன்

February 14, 2008 7:25 AM
குமரன் (Kumaran) said...
குருராஜரின் திவ்ய பிருந்தாவனத்தை ஒரே ஒரு முறை பள்ளி காலத்தில் தரிசித்தேன் மௌலி. இன்றும் அந்த மந்த்ராலய நதிக்கரையில் நடந்ததை நினைத்தால் புல்லரிக்கிறது. நாங்கள் பள்ளிச் சிறுவர்கள் எல்லாம் நதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது என் நண்பன் ஒருவனை வெள்ளம் இழுத்துச் செல்லத் தொடங்கியது. எல்லோரும் கத்தத் தொடங்கினார்கள். நான் மந்திராலய கோவில் இருக்கும் திசையை நோக்கி 'ஸ்வாமி ஸ்வாமி' என்று குரலெடுத்துக் கூவத் தொடங்கினேன். மறு நிமிடம் கோவிலின் திசையிலிருந்து ஒருவர் ஓடி வந்தார். ஆற்றில் குதித்து என் நண்பரைக் காப்பாற்றினார். பின்னர் அவர் சென்ற திசை தெரியவில்லை. அந்த நிலையில் இராகவேந்திரரே வந்து காப்பாற்றியதாகத் தான் அப்போது உணர்ந்தேன். இப்போது நினைத்தால் அங்கே எல்லோரும் கூவுவதைக் கேட்டு யாராவது தற்செயலாக வந்து காப்பாற்றியிருக்கலாம்; எல்லோரும் பிழைத்து வந்தவனைக் கவனிக்கும் போது அவர் தன் வழியே சென்றிருக்கலாம் என்று தோன்றினாலும் அன்று அந்த நதிக்கரையில் பெற்ற உணர்வு இன்னும் மாறாமல் தான் இருக்கிறது.

நன்றி :
http://maduraiyampathi.blogspot.in/2008/02/blog-post_13.html

இன்னும் வரும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக