இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஆகஸ்ட் 23, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை 19....ஸ்ரீரங்கம்..! 7

எனக்கு அவர்கள் கொடுத்த பிரஷர் காரணமாக அரை மனதுடன் நான் அந்த வேலையைத் துவங்கினேன்.கிட்டத்தட்ட 125 அடி நீளத்திற்கு  சுவர் எழுப்ப வேண்டும். ரிஸ்க் நிறைந்த வேலை ஆதலால் 15 அடிகளாகப் பிரித்து செய்ய முடிவு செய்தேன்.முதலில் 15 அடிகளுக்கு நிலத்தின் மட்டம் வரை பள்ளம் தோண்டி சுவரையும் எழுப்பிய பின் அதை மூடி விட்டு அடுத்த 15 அடி செல்லலாம் என தீர்மானம் செய்தேன்.பெங்களூரில் மழை எப்போது வரும் என்று கூற முடியாத நிலையால் இவ்வாறு முடிவு செய்தேன்.

ஒரே நாளில் 15 அடிக்கு பள்ளம் எடுத்து அஸ்திவார concrete போட்டு கம்பி வேலைகளையும் முடித்து நிலத்தின் மேல் மட்டம் வரை concrete போடவும்,   அன்றே இரவோடு இரவாக ஏற்ப்பாடு செய்து விட்டேன்.ஆனால் சுமார் 9 மணி அளவில் மழை பிடித்துக் கொண்டது.!பாதி concrete போட்ட நிலையில் வேலை நிறுத்தப் பட்டது. பெரிய மழையாக இருந்ததால் நாங்கள் எல்லோரும் guest house திரும்பி விட்டோம்.

சுமார் 1 மணி அளவில் பக்கத்து பாக்டரி இலிருந்து போன்! அந்த அஸ்திவாரத்தின் மீது பக்கத்து compound wall சரிந்து விழுந்து விட்டது என்று. நான் பயந்த படியே நடந்து விட்டது. என்ன செய்வது அந்த பேய் மழையில்? நாளை காலையில் பார்த்துக்  கொள்ளலாம் என நினைத்து படுக்கச் சென்றேன். ஆனால் எனது client மேலாளர் என்னைத்தூங்க விடவில்லை. உடனே site சென்று ஏதாவது செய்ய வேண்டும் என்று தொந்தரவு செய்தார். நான் மசியவில்லை .என்  பேச்சைக் கேட்காமல் நீங்கள் தானே பிரஷர் தந்தீர்கள்?இந்த மழையில் நான் என்ன செய்ய முடியும்? நான் சென்றாலும்  labours வரவேண்டுமே?இந்த மழையில் நடு இரவில் யார் வருவார்கள்? 
 என்று கூறிவிட்டு, நாம் தான் சுவர் விழுந்தால் எங்கள் நிர்வாகம் பொறுப் 
பேற்காது  என்று மெயில்   அனுப்பச் சொல்லி விட்டோமே.எனவே இது நமது ரிஸ்க் இல்லை என்று   இருந்து விட்டேன்.

மறு நாள் ஞாயிற்றுக் கிழமை. காலை 6 மணிக்கெல்லாம் சைட் சென்று விட்டேன். இடிபாடுகளை அகற்றி கம்பிகளை சரி செய்ய ஆட்களை ஏற்பாடு செய்தேன். 8 மணி வாக்கில் எங்களது client மேலாளர் வந்து விட அவருக்கும் எனக்கும் வாக்கு வாதம் முற்றியது.எங்களது site in-charge  ஞாயிறு ஆதலால் ஊருக்குச் சென்று விட்டார்..அவருக்கு விஷயத்தைக் கூறிய போது  நீயே சமாளித்துக் கொள் என்று கூறி விட்டார்.

நான் கூறியதை கேட்காமல் எனக்கு பிரஷர் தந்து செய்ய வைத்ததாலும் நாங்கள்  ரிஸ்க் பொறுப்பு ஏற்க மாட்டோம் என மெயில் தந்திருப்பார்கள் என்ற தைரியததிலும் மிகவும் கோபத்துடன் பேசினேன்." உங்களுக்கு வேலையின்  ரிஸ்க் தெரிய வேண்டும்.அல்லது தெரிந்தவார்கள் கூறினால்  ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து உங்கள் போக்கில் செய்ய வைத்து விட்டு பிறகு ஏதாவது நடந்தால் எங்கள் தலையில் போடுவது  சரிதானா?"என சத்தம் போட்டேன். மிகவும் வாக்கு வாதம் அதிகமானதால் நாங்கள் அவர்களின் மேலிடம் வரை அனுப்பியிருந்த மெயில் லின் கோப்பி பிரிண்ட் எடுத்து அவரிடம் தரலாம் என்று சைட் ஆபீஸ் வந்து விசாரித்த  போது  அந்த மெயில் ஐ type  மட்டும் செய்து விட்டு அனுப்பாமல் விட்டு விட்டது தெரிந்தது!

இன்னும் வரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக