இந்த வலைப்பதிவில் தேடு

புதன், அக்டோபர் 19, 2011

அபார்ட்மென்ட்ஸ் உஷார் ...!

சமீபத்தில் ஒரு அபார்ட்மென்ட் இல் வீடு வாங்கச் சென்றேன்..எல்லோரும் ஒரு வரை முறை இல்லாமல் கண்டபடிக்கு விலை சொல்கிறார்கள்.! 

சிவில் என்ஜினீயர் என்ற முறையில் ஒரு அபார்ட்மென்ட் இல் எப்படி விலை நிர்ணயம் செய்யலாம் என ஒரு கைட் லைன் தந்தால் நடுத்தர மக்களுக்கு உபயோகமாக இருக்குமே என்பதற்காக   இந்த வலைப் பதிவு.

1 .U D S எனப் படும் அன் டிவைடெட் ஷேர்  லேன்ட் இன் மதிப்பு. அதாவது ஒரு அபார்ட்மென்ட் உருவாகும் நிலத்தில் கட்டப் படும் வீடுகளுக்கு,மொத்த நிலத்தை தனித்தனியாகப்  பங்கிடாமல்(not separated) மொத்தமாகப் பிரித்து ஒரு வீட்டிற்கு இவ்வளவு நிலம் என(Random ) பகிர்ந்து அளிபபது.

2 . கட்டப் படும் வீட்டின் கட்டுமான செலவு.ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என.

3 .பொது இடங்களின் ( நடை பாதை,ஓவர் ஹெட் டேன்க் , செப்டிக் டேன்க்,காம்பௌன்ட் வால்,டூ  வீலர் பார்கிங்  இன்னபிற )கட்டுமான விலை.(லேன்ட் scape )

4 Approval cost 

5 Architect ,structural எஞ்சினியர் cost .

இப்போது உள்ளே போவோம்.

 1 . UDS லேன்ட் .நீங்கள் வாங்கப் போகும் ஏரியாவில் நிலத்தின் இன்றைய மார்க்கெட்  மதிப்பை விசாரித்து அறியுங்கள்.உதாரணமாக நீங்கள் வாங்கப் போகும் ஏரியாவில் அன்றைய நில மதிப்பு ரூ.1000 ./சதுர அடி  

இப்போது உங்களின்  UDS (கட்டாயம் உங்களின்  பில்டர் கூறுவார்.இல்லை எனில் கேட்டு  அறியுங்கள்.இது உங்களின் பத்திரப் பதிவிலும் குறிப்பிடப் பட வேண்டும்)500  சதுர அடி எனில் 500 x1000 = ரூ.500000 .00 ----(1 )

( பின்னாளில் அபார்ட்மென்ட் கட்டிடம் ஏதாவது ஆனால் இந்த 500 சதுர அடிக்கான மனை விலை தான் உங்களின் சொத்து மதிப்பு... ! )

2 .கட்டுமான மதிப்பு .உங்களின் வீடு 900 சதுர அடி எனில் இன்றைய கட்டுமான விலை ரூ 1400 /சதுர அடி.(லோக்கல் கட்டிட contrator களிடம் விசாரித்து சரியான ரேட் ஐத் தெரிந்து கொள்ளலாம்) ஆக 900x 1400 =ரூ 1260000 .00 ----(2 )

நிற்க.இந்த 900 சதுர அடி என்பதிலும் கோல் மால் உண்டு.! அதைக் கணக்கிட உங்களின் வீட்டின் கார் பெட் ஏரியா வைக் கணகிடுங்கள்.அதாவது உங்கள் வீட்டின் ரூம் களின் அளவை ,பால் கனி உட்பட-சதுர அடியாக நீள,  அகலத்தைப்  பெருக்கி கணக் கிடுங்கள்

.பிறகு சுவர்களுக் காக அத்துடன் பனிரெண்டு பெர்சென்ட் சேருங்கள்.

மீண்டும் நடை பாதை (passage) மற்றும் படிக் கட்டிற்காக 15% சேருங்கள்.இதுதான் உங்கள் வீட்டின் அளவு.இது தோராய மானது. 

விவரமானவர்கள் சுவர்களையும்(உங்கள் வீட்டினுள் அமைந்த சுவர் உங்கள் கணக்கிற்கு மட்டும் )

படி மற்றும் நடைபாதைகளை துல்லியமாக ஒரு floor க்கானதை கணக்கிட்டு அந்த குறிப்பிட்ட floor இல் உள்ள வீடுகளின் எண்ணிக்கையால் வகுத்து உங்களின் பொது ஏரியாவை  கணகிடுங்கள்.

இப்போது வீட்டின் ஏரியா,சுவர்களின் ஏரியா,பொது ஏரியா மூன்றையும் சேருங்கள்.


இது தான் உங்கள் வீட்டின் (வியாபாரத்திற்காண)  ஏரியா.

3 பொது இடங்களின் கட்டுமான விலை.அதாவது லேன்ட் scape ,compound wall  etc 
இது உங்களின் UDS ஏரியா.அதற்கு கட்டுமான விலை (வீட்டின் கட்டுமான விலையில்  மூன்றில் ஒரு பங்கு தோராயமாக .அதாவது 1400 /3 =ரூ 466 
இப்போது 500x 466 = ரூ 233000 ---------(3 ) 

4 அப்ரூவல் cost ரூ 30 முதல் ரூ 50 ஆயிரம் வரை. average ரூ 40000 .00 ------(4 )

5 .Architect ,structural என்ஜினீயர் 5 % construction cost ( 1260000 x 5 %) =ரூ 63000 .00 ---(5)

ஆக மொத்தம் total cost = 1 +2 +3 +4 +5 = ரூ.20 ,96,000 .00 

பொதுவாக இதர வசதிகள் ஏற ஏற விலையும் ஏறிக் கொண்டே போகும்.! எல்லா செலவுகளும் கஸ்டமர் தலையின் மீதே விழும் என்பதனை அறிக.

இது தவிர கோவில் ,children பார்க் இருந்தால்  இவற்றிற்கு மேலே கூறிய படி கணக்கிட்டுக் கொள்ளலாம்.(அனைத்து வீடுகளுக்கும் ஷேர் )

Lift இருந்தால் ஒரு சதுர அடிக்கு ஒரு மாடிக்கு ரூ.10 தோராயமாக.

மற்றும் கார் பார்கிங் (தாராளமாக பார்கைனிங் பண்ணுங்க ! ), கார்பஸ் fund (Flats-Association form செய்ததும் அதன் கணக்கில் டெபொசிட் செய்துவிடவேண்டும்.) etc தகுந்த படி கூட்டிக் கொள்ளுங்கள்.

ஸ்விம்மிங் பூல்,Gym இவற்றிற்கு உறுப்பினர் கட்டணம் உண்டு என்றால்  உஷாராகிக்  கொள்ளுங்கள்! 

வெள்ளி, அக்டோபர் 14, 2011

மனம் 3 ..!

இவ்வாறு மனதை காலிக் கோப்பையாக வைத்திருப்பது சுலபமானது அல்ல தான். ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கின்ற, கேட்கின்ற, பழகுகின்ற விதங்கள் நம்மை விடுவதில்லை.ஒவ்வொன்றும்  ஒவ்வொரு விதமாக நம்மை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.அவற்றிற்கு ஏற்றார்போல நாமும் நமது எண்ணங்களையும் செயல்களையும் மாற்றிக் கொண்டே இருக்கிறோம்.சுருக்கமாகச் சொன்னால் வெளி உலகம் நம்மை ஆட்சி செலுத்துகிறது.

துன்பமும் ,இன்பமும் நம் மனதில்  தான் இருக்கிறது என சில ஞானிகள் சொல்வதுண்டு. அது எப்போது உண்மை என பிறகு பார்க்கலாம்.ஆனால் பொதுவாகப் பார்த்தால் அப்படி இருக்க முடியாது தான்.ஏனென்றால் புற உலகின் ஆதிக்கம் நம்மை கட்டுப் படுத்து கிறது.அதனால் தான் இந்தப் புற உலகிலிருந்து தப்பிக்க  பல ஞானிகளும் முனிவர்களும் காடு மலைகளையோ, இமயமலைகளையோ நாடிச் சென்று தவம் இருந்தர்கள்!
முல்லா கதை ஒன்று உண்டு.முல்லா ஒரு நாள் தன் மனைவி ,கழுதை,மற்றும் தன் உடமைகளை ஒரு மூட்டையாக  எடுத்துக் கொண்டு வேறு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது வழியில் பார்த்தவர்கள் ,ஏனைய்யா,கழுதை தான் இருக்கிறதே மூட்டையை கழுதை மேல் வைத்துக் கொண்டு செல்லலாம் அல்லவா?நீ ஏன் சுமக்கிறாய் என்று சொல்ல ,முல்லாவும் மூட்டையை கழுதை மேல் வைத்துக் கொண்டு செல்கிறார்.இன்னும் சிறிது தூரம் சென்றதும் வேறு சிலர் முல்லாவிடம் ,ஏனய்யா கழுதை மேல் தான் இன்னும் இடம் இருக்கிறதே ஏன் உன் மனைவியை நடக்க வைக்கிறாய் ?அவளையும் கழுதை மேல் ஏற்றி விடய்யா என்று  கூற முல்லாவும் அவ்வாறே செய்கிறார்.இன்னும் சிறிது  தூரம் சென்றதும் வேறு சிலர் ஏனய்யா கழுதையை வைத்துக் கொண்டு நடந்து செல்கிறாய்?நீயும் கழுதை மேல் ஏறி உட்கார வேண்டியது தானே என்று கேட்க முல்லாவும் ஏறி உட்கார்ந்து கொள்கிறார்.இப்போது முல்லா ,அவர் மனைவி ,மூட்டை என அனைத்தையும் கழுதை சுமக்க இன்னும் சிறிது தூரம் செல்ல ,வேறு சிலர் முல்லாவிடம் ஏனய்யா இந்த நோஞ்சான் கழுதை மேலே இவ்வளவு சுமையை  ஏற்றிச் செல்கிறாயே என வினவ இப்போது மீண்டும் பழைய படி முல்லாவும் கீழே இறங்கி மூட்டை மற்றும் மனைவியுடன் நடந்தே செல்ல ஆரம்பித்தார்!  இன்னும் சிறிது தூரம் சென்றதும் வழியில் பார்த்தவர்கள் ஏனய்யா இந்த நோஞ்சான் கழுதை யை இப்படி இவ்வளவு தூரம் நடத்தியே கூட்டி வருகிறாயே இது பாவம் இல்லையா?என்று கேட்க கடைசியில் முல்லாவும் அவர் மனைவியும்  சேர்ந்து ஒரு மூங்கிலில் அந்தக் கழுதையைக் கட்டித் தொங்கவிட்டு இருவரும் சேர்ந்து அதை தூக்கிக் கொண்டு செல்கிறார் கள்! இப்படிப் போகிறது அந்தக் கதை.
வெளி உலகம் சொல்வதெற்கெல்லாம் செவிசாய்த்தால் முடிவு இப்படித்தான் போகும் என்பதற்காகத் தான் இந்தக் கதை.  

 அப்படி யானால் புற உலகை சார்ந்து,மற்றவர்கள் கூறுவதை நாம் ஏற்றுக் கொண்டு வாழக் கூடாதா?என்றால் ,நமக்கு அமைதியும்,நிம்மதியும்,சந்தோஷமும் வேண்டும் என்றால் கண்டிப்பாக செவி சாய்க்கக்  கூடாது...ஒரு சில விதி விலக்குகளைத் தவிர.....!      

 இன்னும் அலசுவேன்......

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

கவியரசர் கண்ணதாசன்...!

..இது வரை நாம் எல்லோரும் கவியரசர் கண்ணதாசனின் கடைசிப் பாடல்  மூன்றாம் பிறை படத்தில் வந்த "கண்ணே கலைமானே "என்ற பாடல் தான் என்றே நினைத்து வந்தோம்.திரை உலகினர் கூட அந்தப் பாடலையே பிரதானமாக கூறிவருகின்றனர். ஆனால் கவியரசர் கண்ணதாசனால் எழுதப் பட்டு வெளியான கடைசிப் பாடல்  மதர் லேன்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பியின் தயாரிப்பில் வெளியான " உன்னை நான் சந்தித்தேன் "என்ற படத்தில் வரும் "தேவன் தந்த வீணை" என்ற பாடல் தான் என்பது  யாருக்கும் தெரியவில்லை!  அதில் கடைசி கடைசி யாக அவர் எழுதியிருக்கும் வரிகளைப் பாருங்கள்...
                
                    வானம் எந்தன் மாளிகை -வையம் எந்தன் மேடையே..        
                  வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள் ....
                   எங்கிருந்தேன் இங்கு வந்தேன்
                    இசையினிலே எனை மறந்தேன்...
                     இறைவன் சபையில்  கலை(வி)ஞன் நான்..!

 எப்படிப் பட்ட வைர வரிகள்.?இதுதான் கடைசிப்பாடலாக இருக்க வேண்டும் என நினைத்தே எழுதி இருப்பாரோ ?
         
கூடுதல் தகவல் ....மூன்றாம் பிறை( சாத்மா) வெளியானது 28 .08 .1983 
                                     உன்னை நான் சந்தித்தேன்  வெளியானது 17 .10 .1984 
(சென்சார் certificate இன் படி ) ----நன்றி  you tube !

வியாழன், அக்டோபர் 06, 2011

ஒரு அன்பான வேண்டுகோள் !

வலைப்  பதிவு நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.என்னுடைய இந்த  "நினைத்தாலே இனிக்கும் " வலைப் பதிவை பின் தொடர விரும்பும் அன்பர்கள் தற்போதைக்கு எனது மற்றொரு வலைப் பதிவான  " ragavmurali .blogspot .com " followers இல் இணையுமாறு வேண்டுகிறேன். google இன் folowers இப்போது பரிசோதனையில் இருப்பதால் , பிறகு" நினைத்தாலே இனிக்கும் " ப்ளாக் இல்  followers சேர்க்கப் படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செவ்வாய், அக்டோபர் 04, 2011

மனம்.....2 !

 மனதை  அடக்க வழி உண்டா...?                        

முதலில் மனதைப் பற்றி புரிந்துகொண்டால் அதனை அடக்கும் வழியினைக் கண்டு கொள்ளலாம்!

ஜென் என்ன சொல்கிறது மனதைப் பற்றி? 

ஜென் சொல்கிறது மனதினை ஒரு கோப்பை என்று. அதாவது ஒரு கோப்பையில் நாம் எதை வேண்டுமானாலும் போட்டு நிறைத்துக் கொள்ளலாம். அதே போல நாமும் நமது மனம் என்னும் கோப்பையில் பலவற்றை பலவாறாகப் போட்டு நிரப்பி வைத்து விடுகிறோம்!  

 இன்னும் விளக்கமாகச் சொல்ல  வேண்டுமானால்  நாம் முன் பின் அறிந்திராத ஒரு நபர். அவரை நமக்கு- நமது நண்பர் அறிமுகம் செய்து வைக்கிறார் என்று கொள்வோம். அப்போது முதல் நமது மனம் என்னும் கோப்பையில் அவரைப் பற்றிய நினைவுகளை நிரப்பி விடுகிறோம்.எப்படி?நமது நண்பர் அந்த புதியவரைப் பற்றி என்னவெல்லாம் சொன்னாரோ அப்படியே.

நமது நண்பர் அவரைப் பற்றி நல்ல விதமாகச் சொன்னால் அவரை நல்லவராகவும் வேறு ஏதாவது கெட்ட விதமாகச் சொன்னால் அவரை கெட்டவராகவும் நாம் நம் மனதில் உருவகம் செய்து விடுகிறோம். அது முதல் அவரை அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.  

எப்படி ஒரு கோப்பையில் டீயை ஊற்றி விட்டால் பிறகு அதில் காப்பியை யோ தண்ணீரையோ  ஊற்றமுடியாதோ அதே போல.

மீண்டும் அந்தக் கோப்பையில் காப்பி யையோ தண்ணீரையோ ஊற்ற வேண்டுமானால்  முதலில் அந்தக் கோப்பையை காலி செய்ய வேண்டும்.! 

அதே போல அந்த புதிய நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிய வேண்டுமானால் நமது நண்பர் ,அந்தப் புதியவரைப் பற்றிக் கூறியதை முதலில் தள்ளி வைக்க வேண்டும்.அதன் பிறகு நாம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயல வேண்டும்.

 இப்படி நாம் அவருடன் பழகிய பின்பு அவரைப் பற்றி எடை போட்டு அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு முடிவிற்கு வரவேண்டும்.சரி அவரைப் பற்றிய ஒரு முடிவிற்கு வந்துவிடோம். அவர் மிகவும் நல்லவர் என முடிவு செய்து விட்டோம்.
 இப்போது நமது மனம் என்னும் கோப்பையில் அவருக்கென்று உள்ள இடத்தில் அவரை நல்ல மனிதராக நிரப்பி விட்டோம்.இனி அவரை காணும் போதெல்லாம்  அவருடன் பேசும் போதெல்லாம்,அவருடன் பழகும் போதெல்லாம் அவரை மிகவும் நல்ல மனிதராகவே பார்க்கிறோம். 


 ஒரு நாள் அவர் நம் எதிர் பார்ப்புகளை மீறி நடந்து கொள்கிறார்..! ஐயோ அவரா இப்படி? நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவே இல்லை.இவருக்குப் பின் இப்படி ஒரு மனிதரா? என்று பலவாறாகப் புலம்புகிறோம்.அவரிடம் ஏமாந்து விட்டோமே என அழுகிறோம். ஏன் இப்படி நடக்கிறது?

இதற்குக் காரணம் நமது மனம் தான்! நமது மனதில் அவரை நல்லவராக உருவகம் செய்து விட்டோம். நாம் உருவகம் செய்ததற்கு மாறாக அவர் நடந்து கொள்ளும் போது நமது மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எப்படி காப்பி ஊற்றப் பட்டக் கோப்பையில் டீ யை ஊற்ற முடியாதோ அதே போல..!
  
எனவே ஏமாற்றம் அடைந்த மனம் பலவாறாகப் புலம்பு கிறது.

அப்படி என்றால் மனம் தரும் இம்மாதிரியான  துன்பங்களிலிருந்து  மீள வழியே இல்லையா?  உண்டு......!

ஓஷோ சொல்கிறார்...மனம் ஒரு கோப்பை என்றால் அதில் கண்டதையும்  போட்டு நீ நிரப்பி விடுகிறாய். பின்பு அதற்கு மாறாக நடக்கும் போது ஏமாற்றத்தினால் புலம்புகிறாய்.எனவே அந்தக் கோப்பையை நீ உடைத்து எரிந்து விடு.இப்போது உன்னிடம் மனம் என்ற ஒன்று இல்லை.அதில் எதையும் போட்டு உன்னால் நிரப்பவும் முடியாது............! !
  

 இன்னும் அலசுவேன்..........