இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஜூன் 25, 2012

ஒரு காதல் என்பது...!

             காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு.உண்மையான காதல் இருந்தால் வாழ்க்கையில் அதன் சுகமே வேறு.வெறும் இனக் கவர்ச்சியாக இல்லாமல் " எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பதனாலே இனி என்ன வேண்டும்" என்பதாக அமைந்து விட்டால் அதைவிட ஒரு இன்பமான வாழ்க்கை கிடையாது.

வலைப் பக்கத்தில் என்னைக் கவர்ந்த காதல் பற்றிய இந்தக் கவிதைகளை உங்களுக்கும் தருகிறேன்.

உண்மையிலேயே ஹாசன் கமல் யாரையாவது காதலித்து தோற்ற வேதனையில் தான்  இதை எழுதினாரா தெரியவில்லை.

ஒன்று நிச்சயம் .அது உண்மையானால் இவ்வளவு உருகும் ஒருவரைக் கை நழுவ விட்டது அந்தப் பெண்ணிற்குத்தான் மிகப் பெரிய  இழப்பே தவிர அவருக்கல்ல.!




1) உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன்

2) நாம் ஒன்றாய் கழித்த அந்த நினைவுகளை என் இதயத்தில் செதுக்கி விட்டேன்.. என் கனவுகளை கவிதைகளாக வரைந்து கண்ணீரில் கரைக்கிறேன். யாருக்கும் தெரியாமல் என்னுயிரில் கலந்த உன்னை மட்டும் பிரிந்து செல்ல நினைக்காதே…… நானில்லாமல்நீயிருப்பாய்……… ஆனால்….. நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….



  3) நீ..!!! எனக்கு வேண்டும்.. நான் வேண்டும் வரம் இது ஒன்று தான்....


 4) வானவில்லின் அழகு சிறிது நேரம் தான் 
ஆனால் உந்தன் நினைவுகள் என் காலம் முழுவதும்..!

  5) நீ பிறக்காமல் இருந்திருந்தால் 
நான் உன்னை நினைக்காமல் இருந்திருப்பேன் 
நீ பிறந்து விட்டதால் நான் இறந்து கொண்டிருக்கிறேன் 

 6) எங்கே என் தேவதை? உன்னை தேடி கலைத்து விட்டேன் 
தண்ணிர் குடிக்க சென்றால் நீராக என்னுள் செல்கிறாய் 
உறங்க நினைத்தால்  கனவாக என்னுடன் நிலைக்கிறாய் 
 
உன்னைப் பற்றி கவி எழுத நினைத்தால்  வார்த்தையாக விழுகிறாய் 
வெளிச்சம் தேடினால் ஒளியாக மிளிர்கிறாய் 
நான் எங்கு சென்றாலும் என்னுடன் நீ  இருக்கும் போது உன்னை ஏன் தேட வேண்டும்
உன் நினைவோடு உன் வருகை வரை காத்திருப்பேன் என்றும் உன் நினைவாக நான்!!!

 7) வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன் ,, கண்டேன்  உன்னை இன்னொருவனுடன் ,, வடியுதடி என் கண்களில் கண்ணீர் அல்ல இரத்தம்!

 

 8) உனக்காவே பிறந்த நான் இறைவனிடம் வரம் கேட்டால் உன்னோடு வாழ்ந்து உன்னில் இறந்துபோக வேண்டுமெனக் கேட்பேன் 


 9) மனதுக்கு பிடித்தவர்களை பார்க்காமல் -கூட
இருந்து விடலாம் .......! - ஆனால்
நினைக்காமல் ஒரு போதும்
இருக்க முடியாது ......!
என்றும் உன் நினைவில் நான்.

பிரிந்து போன உன் நினைவுகள் ஒவ்வொரு நாளும் என் கண்களுக்குள் வந்து கொண்டு தான் இருக்கின்றன ... ??? ... கனவாக அல்ல ... ??? ... கண்ணீராக ..!.

 

 10) என் உயிரை எடுத்துக்கொண்டு என்னை விட்டு போனவளே என் இதயத்தை கிழித்துவிட்டு நிம்மதியாய் சென்றுவிட்டாய்... உன்னையே உலகம் என நம்பும் நான் உனக்காக சாவதா? என்னையே உலகம் என நம்பும் என் குடும்பத்துக்காக வாழ்வதா?

 

 11) நான் உன்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம்
என் உயிரையும் தாண்டி சென்று விட்டது உன் நினைவுகள்
உன்னை மறப்பதா என்னையே மறப்பதா முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறேன்
உன்னை மறக்க நினைத்தால் என்னையே மறக்க செய்கிறது உன் நினைவுகள்

 

 12) நீ வேறு, நான் வேறல்ல என்பதாய் வளர்ந்தது நம் நட்பு நினைத்துக் கூட பார்க்கவில்லை நீ என்னை பிரிவாய்யென்று என்னை நீ மறந்ததை நினைத்து துடித்துப் போகிறேன்!

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             


http://hassnkamal.blogspot.in


 

 

சனி, ஜூன் 16, 2012

பெண்கள்...!




 நல்ல குணவதியான பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?ஒரு பெண்ணை, மனைவியை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்...?
அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

எதிர்காலக்குடும்ப நிம்மதியையும் ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.

கார்யேஷூதாசி
கரணேஷூ மந்திரி
ரூபேஷூ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷூ மாதா
சயனேஸூ வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம்பத்தினி

-சேவை செய்வதில் தாசியைப் போலவும்,
யோசனை சொல்லுவதில் மந்திரியைப்போலவும்,
அழகில் லட்சுமியைப் போலவும்,
மன்னிப்பதில் பூமாதேவியைப்போலவும்,
அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,
மஞ்சத்தில் கணிகையைப் போலவும்,
நடந்து கொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்று பழமொழிக்கேபக்கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுகு வந்த சில நாள்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும். (வடமொழியில் தாசி என்றால் அடிமை)

அவள் கல்வியறிவுளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.

‘பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்.’ என்கிறார்களே, அந்தமகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.

அழகு, என்றால் முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகுபின்னால் வருவோருக்குத் தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும்பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல;

காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிகை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துகு மஞ்சள் பூசி, குங்கும்ப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழைகையே, ‘மாகலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.

அவள் பார்க்கும்போதுகூட நேருக்குநேர் பார்க்கமாட்டாள்.

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்”

- என்றான் வள்ளுவன்.

ஒரு கண் சிற்க்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவளே.

எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்ற அதிர்ச்சியைத் தருமென்றால் மகாலட்சுமி மோற் குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.

இடி தாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டுவிடுவது போல் அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.

ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்ட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுஇயின் இதயமாகவே காட்டுகிறது.

பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.

கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.

அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

நல்ல குலப் பெண்களால் அது முடியும். அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்க வேண்டும்.

‘தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.

பள்ளி அறையில் அவள் கணிகையைப் போலவே நடந்துகொள்ள வேண்டும். கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்க வேண்டும்.

மீண்டும் அவளையே பார்க்க வேண்டும். என்ற ஆசை கணவனுக்கு எழ வேண்டும்.
-அப்படிப்ட்ட ஒருபெண்ணைத் தன்பத்தினியாக ஏற்றுக்கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை. வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.

நல்ல பெண்ணை மணந்தவன்,முட்டாளாய் இருந்தாலும், அறிஞனாகிவிடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது !

தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும் முட்டாளாகி விடுகிறான். அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது ! !.


நன்றி:கவியரசர் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்" 

மேலும் பார்ப்போம்....

திங்கள், ஜூன் 11, 2012

வெறுப்பின் வெளிப் பாடல்ல...இது ஒரு மந்திரம்!

        " எல்லாம் ஒரு நாள் முடிந்து போகும்" பதிவினைப் படித்துவிட்டு எனது நண்பர் நாராயணன் அமெரிக்கா விலிருந்து எனக்கு எழுதிய இடுகையில் இவை எல்லாம் வாழ்க்கையில் வெறுப்புற்றதன் வெளிப்பாடு என்பதுபோல் எழுதியிருந்தார்.

      எனக்கு என்னவோ அது வெறுப்பின் வெளிப்பாடாகத் தோன்றவில்லை. வாழ்க்கையில் நாம் ஒரு வகையில் பக்குவப் படத் தேவையானது என்றே எண்ணுகிறேன். 

     இது போன்ற தத்துவங்கள் நமது தலைக் கனத்தைப்  போக்கி நம்மை பக்குவப் பட வைக்கும். பல அறிஞர்களும் , ஞானிகளும் பலமுறை சொல்லிவிட்டதைப் போல வாழ்க்கையின் நிலையாமையை நமக்கு நினைவு படுத்தி நம் தலையில் ஒரு கொட்டு வைத்து நம்மை எத்தனை உயரத்தில் இருந்தாலும் கர்வம் கொள்ளாமல் இருக்கவைக்கும்.

     மயான வைராக்கியம் போல மயானத்தில் மட்டும் நம்மை யோசிக்க வைத்து விட்டு அங்கிருந்து வெளியே வந்தவுடன் மனம் மீண்டும் பழைய முருங்கை மரத்திலேயே ஏறிக்  கொள்வது போல் அல்லாமல் நம்மை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவே இது போன்ற தத்துவங்களை நாம்  நினைவில் கொள்ளவேண்டும்.

    மற்றவர்கள் துன்பப் படும் படியோ ,வருத்தப் படும் படியோ செயல்களை செய்துவிட்டு  அவர்கள் நம்மை திட்டும் படியோ அல்லது சபிக்கும் படியோ வாழும் வாழ்க்கை நமக்கு  சந்தோஷத்தைத் தருமா? அல்லது மற்றவர்கள்  மகிழ்ச்சியுடன் ,மனநிறைவுடன் வாழும்படியான செயல்களை செய்து அவர்கள் நம்மை வாழ்த்தும்  வண்ணம்  வாழும் வாழ்க்கை நமக்கு சந்தோஷத்தைத்  தருமா? 
     
     நாம் எத்தகைய வாழ்க்கை வாழ   வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நம்மிடமே உள்ளது அல்லவா?

     எப்போதெல்லாம் நம்மில் அகங்காரம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம்    "எல்லாம் ஒரு நாள் முடிந்து போகும்" என்ற மந்திரத்தை நம்முள் சொல்லிக்கொள்வோம்! அகங்காரம் நீங்கி அன்புடன் வாழ்வோம்..!!
 
மீண்டும் சந்திப்போம் .... 

வெள்ளி, ஜூன் 08, 2012

எல்லாம் ஒரு நாள் முடிந்துபோகும்....!

                                நினைத்துப் பார்க்கிறேன். வியப்பாக இருக்கிறது.பணம்,வேலை,பதவி,இன்பம்,துன்பம்,அந்தஸ்து,காதல்,உறவுகள்,  நட்புகள் எல்லாம் எதோ ஒரு நாள் எதோ ஒரு புள்ளியில் முடிந்துபோய்விடுகிறது. ஆனால் எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் நிலையாய் இருக்கும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. தமக்கு வேண்டியவை என்றும்,வேண்டாதவை என்றும் பிரித்து எல்லைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் செய்யும் கூத்து என்ன ?
ஆட்டம் என்ன?மற்றவர்களுக்கு செய்யும் தீங்குகள் என்ன?

கடந்த காலங்களில் மற்றவர்களை  மட்ட ரகமாக நடத்தியவர்களும்,
பேசியவர்களும், அவமானப் படுத்தியவர்களும்  இன்று இவ்வுலகில்  இல்லை. நினைத்தால் சிரிப்பு கூட வருகிறது!நான் எந்த தவறும்  செய்யாத போதும் என்னை வீட்டிற்குள் வரக்கூடாது என்றவர்களும் என்னைக் கெட்டவன் போல சித்தரித்தவர்களையும் இன்று காணவில்லை. ஏன் என் வாழ்க்கையில் ?உங்கள் வாழ்க்கையில் கூட அவ்வாறு கண்டிப்பாக நடந்திருக்கும்.இவ்வாறு அவமானப் படுத்தி அவர்கள் என்ன சாதித்து விட்டார்கள்?

போகும் வழியில் உள்ள ஒரு பழைய வீட்டினைப் பார்க்கிறேன்.இதில் எத்தனை தலைமுறையைச் சேர்ந்த எத்தனை பேர் வாழ்ந்திருப்பார்கள்?அவர்களெல்லாம் இன்று எங்கே? அவர்களில் எத்தனை பேர் நல்லவர்களாக இருந்திருப்பார்கள்.எத்தனை பேர் கொடுமைக் காரர்களாக இருந்திருப் பார்கள்?
நல்லவர்களை நிச்சயம் யாராவது இன்றும் பாராட்டிக் கொண்டிருப்பார்கள்.கெட்டவர்களை  தூற்றிக் கொண்டிருப்பார்கள்,அல்லது மறந்துவிட்டிருப்பார்கள்.!

நடிகர் அஜித் ஒரு பேட்டியில் கூறும் போது "என்னை எத்தனையோ பேர் திட்டி இருக்கிறார்கள்  ,எனக்கு கெடுதல் செய்து இருக்கிறார்கள்.ஆனால்  நான் யாருக்கும் தீங்கு நினைப் பதில்லை.அவர்களுக்கும் நான் நல்லதையே நினைக்கிறேன்.அவர்கள் என்றோ ஒரு நாள் என்னைப் பற்றி புரிந்து கொள்வார்கள்.அட்லீஸ்ட் நான் இறந்த பிறகாவது என்னைப் புரிந்து கொண்டு இத்தனை நல்லவரை நாம் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என நினைத்து எனக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டால்  அதுவே எனக்கு போதும்" என்று சொல்லியிருந்தார்.எத்தனை பக்குவப் பட்ட வார்த்தைகள்?நானும் அதுபோலவே இருக்க ஆசைப் படுகிறேன். என்னைப் போற்றுபவர்கள் போற்றட்டும் .தூற்றுபவர்கள் தூற்றட்டும். எல்லோரும் நலமாக வாழவே நான்  வணங்கும் அந்த மகான் ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டுகின்றேன். 

"எல்லாம் ஒரு நாள்  முடிந்து போகும் " எத்தனை  சத்தியமான வார்த்தைகள்? அதை  எப்போதும் எல்லோரும் நினைவில் கொள்வோம்.அகங்காரங்கள் நீங்கி அன்புடன் வாழ்வோம்! 

இன்னும் வரும்...

திங்கள், ஜூன் 04, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை..14 !

 
எனக்கு எப்படி ஸ்ரீ ராகவேந்திரர் மீது அசைக்கமுடியாத பக்தி இருக்கிறதோ அதே போல டெலிவிஷன் நட்சத்திரம் லதா ராவிற்கும் இருக்கிறது என்பது  தினகரன் இதழுக்கு அவர் அளித்த பேட்டியின் மூலம் தெரிகிறது.அவரின் அனுபவம் என்ன பார்ப்போமா?




என் (லதாராவ்) குல தெய்வம் தர்மபுரியில் உள்ள பென்னேஸ்வரர்; இஷ்ட தெய்வம் ராகவேந்திரர்.  என்னோட மேக்-அப் பெட்டி, கைப்பை எல்லாம் அவருடைய புகைப்படத்தையும் சுமந்திருக்கும். ஷூட்டிங் போகும் அவசரத்தில், பூஜையறையில் இருக்கும் அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் போனாலும், ஏறிப் போகும் ஆட்டோவில் ராகவேந்திரர் படம் இருக்கும்! நானும் ராஜ்கமலும் ஒரு முறை மந்த்ராலயம் சென்றிருந்த போது மூலக்கருவறைக்கு மிக அருகில் எங்களை அமரவைத்து ஆலயம் சார்பில் எங்களுக்கு அளித்த சால்வையை, அந்த மகானின் திவ்ய பிரசாதமாகவே கருதி பொக்கிஷமாகப் பாதுகாக்கிறோம். என் அக்காவின் திருமணத்திற்கு ராகவேந்திரரிடம் வேண்டிக் கொள்ள, ஆச்சரியமான முறையில் ஒரு முஸ்லிம் பெரியவர் தானே தேடிவந்து திருமணத்திற்கான உதவிகளைச் செய்ததை என்னால் மறக்கவே முடியாது. கேரளாவில் விமானத்தைப் பிடிக்க விரைந்தபோது, போக்குவரத்து சிக்கலில் மாட்டிக் கொண்டோம். எதிரே ‘ராகவேந்திரா மெக்கானிக்கல் ஷாப்’ என்ற பெயர் பலகை என் கண்ணில் பட, உடல் சிலிர்த்தது. ஆனாலும் நேரத்தைத் தவறவிட்டு விமான நிலையம் சென்றால், அந்த விமானம் ஒரு மணிநேரம் கழித்துதான் புறப்படும் என்ற தகவல், ‘என்ன பயந்துட்டியா, கவலைப்படாதே, நான் இருக்கேன்’ என்ற ராகவேந்திரர் வாக்காகவே பட்டது. என் பெண் பிறந்ததும் ஒரு வியாழக் கிழமைதான். வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டாலும் இன்று இந்த உயரத்தில் இருக்கிறேன் என்றால் அது ராகவேந்திரரின் அருள்தான்.’’ பூஜையறையில் இதை ஆமோதிப்பதுபோல மகான் ராகவேந்திரர் புன்முறுவலுடன் ஆசி வழங்குகிறார்.

இன்னும் வரும்...!
 நன்றி: http://htwww.dinakaran.com/Aanmeegam_