இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, டிசம்பர் 28, 2012

ஒரு ஜோக் .....

சமீபத்தில் நான் படித்து ரசித்து சிரித்த சர்தார்ஜி ஜோக் ஒன்று...

ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் பயங்கர விபத்து.கிட்டத் தட்ட ஐம்பது சர்தார்ஜிக்களுக்கு மேல் ரயில் மோதி இறந்து விட்டனர். எல்லா மீடியாக்காரர்களும்  ஸ்டேஷனில் குவிந்து விட்டனர்.

ஒரே ஒரு சர்தார்ஜி மட்டும் விபத்தில் இருந்து தப்பி பிளாட் பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அனைவருக்கும் மிகவும் ஆச்சரியம்.அவரிடம் விசாரித்தனர்.

"விபத்து எப்படி நடந்தது?"

"எல்லாம் ஸ்டேஷன் அறிவிப்பாளரால் வந்தது"

"அறிவிப்பாளரால் வந்ததா? எப்படி?"

"அவர் தான் train  மூன்றாவது பிளாட் பாரத்தில் வருகிறது என்று கூறினார்"

"சரி அதற்கு?"

"உடனே பிளாட் பாரத்தில் இருந்தவர்கள் எல்லாம் பயந்து போய் 

தண்டவாளத்தில் இறங்கி நின்றார்கள்  அதனால்  தான் train மோதி 

அனைவரும் இறந்து விட்டார்கள்....!"

"ச்.... ச்... ச் ..... அது சரி நீங்கள் எப்படி தப்பித்தீர்கள்?"

"அடப் போங்க சார்,நான் தற்கொலை செய்து கொள்ள தண்ட வாளத்தில் 

தலை வைத்துப் படுத்திருந்தேன். அறிவிப்பைக் கேட்டதும் மேலே ஏறி 

பிளாட் பாரத்தில் படுத்துக் கொண்டேன்!"

நன்றி:அரசு பதில்கள் -குமுதம் 

வெள்ளி, டிசம்பர் 21, 2012

ஸ்ரீரங்கம்..

ஸ்ரீரங்கத்தில்  ஸ்ரீரங்க நாதருக்கு வருடம் முழுவதும் ஏதாவது திருநாள் நடந்து கொண்டே இருக்கும்.இதனாலேயே வயதான காலத்தில் ஆன்மீகப் பற்றுள்ள முதியவர்கள் எல்லாம் ஸ்ரீரங்கத்திலேயே வசிக்க ஆசைப் படுவார்கள்.அதுவும் ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் என்றால் அந்த விருப்பம் பல மடங்கு இருக்கும்.

பங்குனித் தேர் திருவிழா பத்து நாட்கள் நடக்கும்.இந்தப் பங்குனித் தேர் திருவிழாவிற்கு தான் ஸ்ரீ ரங்கநாதர் அதிகமாக ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே செல்வார். உறையூர் ஒரு நாள்,ஜீயபுரம் ஒரு நாள் ,மற்றும் கொள்ளிடக் கரையை ஒட்டிய  எல்லக் கரை மண்டபம் ஒரு நாள் என வெளியே செல்வார்.

இந்த எல்லக் கரை மண்டபத்தில் பெருமாள் தங்கும் போது  ஒரு நாள் உபயம் . தவிர பெருமாளை சுமந்து வரும் அனைவருக்கும் தடபுடலாக  விருந்தும்  அளிப்பார்கள் இடத்து உரிமையாளர்கள்.ஏனென்றால் பெருமாள் ஒரு நாள் முழுவதும் அங்கேயே இருந்து விட்டு மாலையில் தான் ஸ்ரீரங்கம் திரும்புவார் .

.அந்தக் கொள்ளிடக் கரையிலிருந்து சற்று தள்ளி இருந்த ஒரு  வீட்டில் மேல் உள்ள ரூம் ஒன்றில் என்னுடன் படித்த  நண்பன் ஒருவன தங்கியிருந்தான்.

கீழ் வீட்டிலிருந்த ஒரு பெண், அவனுடன் சாதாரணமாகப் பழகத் துவங்கி பிறகு காதல் வரை  இருவரும் சென்று விட்டார்கள்.அந்தப் பெண்ணை ஓரிரு முறை நானும் பார்த்திருக்கிறேன், ஒருவரை ஒருவர் இனி பிரிய முடியாது  என்பது வரை சென்று விட்டார்கள்.இதை அவன் என்னிடம் பலமுறை சந்தோஷத்துடன் கூறியதுண்டு. சில நாட்கள் நானும் அந்த நண்பனும் அப்படியே காலார கொள்ளிடம் பாலம் சென்று அங்குள்ள நடை பாதையில்  நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்போம்.

அவன் அந்தப் பெண் மீது வைத்துள்ள ஆசையைப் பற்றிக் கூறும் போது  அப்படியே வியப்புடன் கேட்டுக் கொண்டிருப்பேன். சில நாட்களில் படிப்பு முடிந்து அவன் சொந்த ஊருக்குச் சென்றான். 

 பிறகு சில வருடங்கள் அவனைப் பார்க்க முடியவில்லை. சமீபத்தில் எங்கள் இருவருக்கும் தெரிந்த   நண்பன் ஒருவனை பெங்களூரில் பார்க்க நேரிட்டது. எதை எதையோ பேசி கடைசியில் அந்த ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்த நண்பனைப் பற்றிய  பேச்சு வந்தது.

"உனக்குத் தெரியாதா? நம்ம ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டான்"
என்றான்.எனக்கு ஒரு கணம் பகீர் என்றது.

"யாருடா?அந்தக் கொள்ளிடத்தின் அருகில் உள்ள வீட்டில் தங்கியிருந்து நம்முடன் படித்தானே அவனா?"

"ஆமாம்டா  அவனே தான் .எனக்கே போன மாதம் தான் விஷயம் தெரியும் .
அவன் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டதாம் "என்றான்.

"ஏண்டா?மடையன் ஏன் இப்படி செய்தான்?"

"எல்லாம் காதல் தோல்வி தான்.ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தானாம். "

"சரி .அதற்க்கு என்ன?"

"அந்தப் பெண் வீட்டிற்குத் தெரிந்து விட்டதாம்.அவர்கள் அந்தப் பெண்ணிடம் நீ அந்தப் பையனை  மறக்கா  விட்டால் நாங்கள்  எல்லோரும் செத்து விடுவோம் என்று  மிரட்டி இருக்கிறார்கள்.பயந்து போன அந்தப் பெண் இதை அவனிடம் கூறி ,தன்னை மறந்து விடு என்று கூறி சென்று விட்டாள் .பிறகு அவனைப் பார்ப்பதையும் அவனுடன் பேசுவதையும் தவிர்த்து வந்திருக்கிறாள். இந்த வேதனையை மறக்க முடியாமல் அவன் விஷம்  குடித்துத்  தற்கொலை செய்து கொண்டானாம்."என்றான்.

அவன் இதைக் கூறி விட்டுச் சென்று வெகு நேரமாகியும் என்னால் நிகழ் காலத்திற்கு வரமுடியவில்லை.அவனுடன் மாலை நேரங்களில் சுற்றியதும் ,கொள்ளிடம் பாலத்தில் நின்று கொண்டு அவன் காதலியைப் பற்றி உருகி உருகி பேசியதும்  நினைவில் சுழன்று கொண்டே இருந்தது.

சில நாட்கள் சென்று நான் ஸ்ரீரங்கம் வந்த போது அவன் நினைவுகள் வந்தது. என்னாலேயே அவன் நினைவுகளை  மறக்க முடியவில்லை.பாவம் அந்தப் பெண்ணிற்கு எப்படி இருக்கும்?என மனம் நினைத்தது.  

கொள்ளிடக் கரைக்கு   அவள் வீட்டுப் பக்கம் சென்றேன். வீட்டின் அருகில் செல்லலாமா அல்லது வேண்டாமா என மனம் போராடியது. அருகில் உள்ள டீ கடையில் ஒரு டீ  சொல்லி விட்டு உட்கார்ந்தேன். 

அப்போது  பைக் கில் ஒரு பையனும் ஒரு பெண்ணும் கட்டிப் பிடித்த படி  சிரித்து சந்தோஷமாக உட் புறமாக சென்றதைப் பார்த்தேன். நன்றாகப் பார்த்தபின் தான் தெரிந்தது,அது என் நண்பனின் முன்னாள் காதலியே தான்.

மெல்ல அந்த டீ  கடைக் காரரிடம்  விசாரித்தேன்."சந்தோஷமா போறாங்களே ரெண்டு பேரும் யாருங்க அது?"

"அதுங்களா அவுங்க  கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க.இரண்டு பேரும் உறவுக் காரங்களாம்"என்றார்.

டீ குடிக்க மனம் இல்லாமல் கீழே கொட்டிவிட்டு கடையை விட்டு வெளியே வந்த என்னை  கடையில் நின்றவர்களும் கடைக் காரரும் ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.

அதன் பிறகு அந்தப் பக்கமோ அந்தக் கொள்ளிடம் பாலம் பக்கமோ போகவே எனக்குப் பிடிக்கவில்லை.  

திங்கள், நவம்பர் 26, 2012

ஸ்ரீரங்கம் ....பீட்சா... அமானுஷ்யம்...!

பீட்சா திரைப் படத்தை சமீபத்தில் பார்த்தேன்.அமானுஷ்யமாக நடப்பவைகளை    வைத்து அருமையாகப் படம் பண்ணியிருந்தார் கார்த்திக் சுப்பையா .இவருக்கு முதல் படமாம் ..வெரி குட்!பீட்சா கொடுக்கப் போகும் ஒரு வீட்டில் இரவில் நடந்ததாக ஒரு திகிலான பேய் த்ரில்லர் கதையை திக் திக் என நெஞ்சம் பதைக்கும்  வண்ணம் சொல்லியிருக்கிறார். அது வைரங்களுக்கு ஆசைப் பட்டு ஹீரோ புனையும் கட்டுக் கதை என்று சொல்லியிருந்தாலும் - கடைசியில் ஹீரோ கூறியவற்றைப் போலவே ஒரு வீட்டில் பேய் வருவதைப் போல படத்தை  முடித்திருப்பது நல்ல ட்விஸ்ட்.!

அது கிடக்கட்டும் இதைப் போலவே என் வாழ்க்கையிலும் நிஜமாக நடந்தது ஒன்றைக் கூறுகிறேன்.கேளுங்கள்.      

ஒரு இருபது  வருடங்களுக்கு முன் நாங்கள் குடியிருந்த ஸ்ரீரங்கத்து வீடு ஒரு பெரிய வீடு.முன் பக்கம் வீட்டுக் காரர் குடியிருக்க பின் பக்கம் நாங்கள் இருந்தோம். மீதி பாதி வீடு தோட்டத்துடன் கூடியது. அந்தக் கால வீடுகள் போலவே toilet எல்லாம் தோட்டம் தாண்டி புழக் கடையில் தான் மதிலை ஒட்டி இருக்கும். ஒரு நாள் எனது சித்தப்பா மகனுடன் நாங்கள் ஒரு கல்யாண விருந்துக்கு சென்று வந்தோம்.அப்போது மணி கிட்டத் தட்ட  இரவு 12 ஆகி விட்டது  பின் புறம் எங்கள் வீட்டிற்கு வர ஒரு சந்து இருக்கும். அது வழியாக நாங்கள் எங்கள் வீட்டிற்கு தோட்டத்தைத தாண்டி வரவேண்டும். இரவு நல்ல இருட்டு  நாங்கள் பட படப்புடன் இருட்டில் வந்த போது ஒரு மரத்தின் அடியில்   வெள்ளை உருவம்  ஒன்று மரத்தில் தொங்குவது போல இருந்தது. எங்களது சித்தப்பா  மகன் "ஐயோ பேய்!" என்று அலறியபடி ஓடினான்.நாங்களும் பார்த்தோம். வெள்ளையாக ஒரு உருவம் மரத்தில் தொங்கிய படி இருந்தது. கீழே பார்த்தால் கால்களைக் காணோம்..! எங்களுக்கும் பயம் வந்து அலறி அடித்து ஓடிவிட்டோம். எங்கள் சித்தப்பா பையனுக்கு பயத்தில் ஜுரமே வந்துவிட்டது !

காலை விடிந்த உடன் முதல் வேலையாக அவன்  ஊருக்கு கிளம்ப தயாராகி விட்டான்.   எங்கள்  அப்பாவிடம் நான் விஷயத்தைக்  கூறினேன். அவர்
 " அட பயந்தாங் கொள்ளிகளா,  நான் தான் அந்த மரத்தடியில் என் பனியனைக் காயப் போடிருந்தேன். அதைப் பார்த்து பயந்து விட்டீர்களா? எல்லோரும் போய் வேலையப் பாருங்கடா..!பேயாவது பிசாசாவது " என்றார்.அப்போது தான் எங்கள் பயம் நீங்கியது.!

ஆனால் சில நாட்கள் கழித்து தான் எனக்கு ஒரு உண்மை  உறைத்தது.   

எனது அப்பா என்றுமே பனியன் உபயோகித்தது  கிடையாது....!

சனி, நவம்பர் 03, 2012

அன்பே உன்னை மறக்கவேண்டும்....!

அன்பே ,
உன்னை நான் மறக்க வேண்டும்
அதற்கு 
என்னை நான் மறக்க வேண்டும்.

என் மூளையில் செதுக்கிய சிற்பமாய் இருக்கும்
உன்னை நான் 
அப்போது தான் மறக்க முடியும்...

அன்பே
உன்னை நான் மறக்க வேண்டும்..
அதற்கு  
நான் இறக்க வேண்டும்..

என் நாடி நரம்பு இரத்தம் சதை
எல்லாவற்றிலும் கலந்து விட்ட
 உன்னை  நான் 
அப்போது தான்  மறக்க முடியும்...

பள்ளியில் படித்த பாடங்கள் மறந்தேன் -- வளர் 
 பருவத்தில்  கிடைத்த  நண்பர்கள் மறந்தேன்...
சொந்த பந்தங்கள்  இழப்பையும் மறந்தேன்...
சுமந்து பெற்ற தாயையும்  மறந்தேன்...

வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் மறந்தேன்.
வளர்த்து  ஆளாக்கிய தந்தையையும் மறந்தேன்....
நாவினால் சுட்ட வடுக்களை மறந்தேன் ..
 நாளதில் செய்த நன்றி   கூட மறந்தேன்...!

ஆனால்
உன்னை என்னால் மறக்க முடியவில்லை..!

அன்பே ..
உன்னை நான் மறக்க வேண்டும்..
அதற்கு
 என்னை  நான் மறக்கவேண்டும் 
இல்லை என்றால்  நான் இறக்க வேண்டும்..!

என்னையே நான் மறந்தாலும்
என் உயிரை நான் இழந்தாலும்
எப்போதும் நீ
நலம் வாழ  வேண்டும்
அந்த இறைவன் 
உன்னைக்  காக்க வேண்டும்...!

புதன், அக்டோபர் 31, 2012

நீலம் ,சாண்டி- புயல்..!.

இரண்டு மூன்று நாட்களாக புயல் புயல் என்று ஒரே பேச்சு.அதற்கு ஒரு பெயர் வேறு! இந்தப் புயல் என்பது என்ன அது எப்படி உருவாகிறது? படித்த பலருக்கும் கூட இது தெரியாமல் இருக்கும் .
 
அவர்களுக்காக புயல் என்பது என்ன ?அது எப்படி உருவாகிறது? அது பற்றிய ஒரு தகவல் பதிவு..

நம் புவியில் வீசும் மிக கடுமையான, ஆ... என நம்மை வியக்க வைக்கும் சூறாவளி காற்றே புயல்கள். புயல்களை அவை வழங்கும் இடம் பொறுத்து  பல பெயர்களில் மக்கள் அழைக்கிறார்கள். சூறாவளிகளின் அறிவியல் பெயர் “வெப்பமண்டல புயல்கள்”. புவிநடுக்கோட்டை ஒட்டி, மகர கடக கோடுகளுக்கு இடையே உள்ள வெப்பமும் புழுக்கமும் உள்ள பகுதிகளை “வெப்பமண்டலம்” என்கிறார்கள். அட்லாண்டிக் கடலிலும் கிழக்கு பசிபிக் கடலிலும் தோன்றும் புயல்களை “ஹரிகேன்” என்கின்றனர். இந்து மாக்கடலில் தோன்றும் புயல்களை சைக்ளோன் என்றும் ஜப்பானிய கடலில் தோன்றும் புயல்களை டைஃபூன் என்றும் அழைக்கிறார்கள்.

புயல்கள் என்ன பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை உருவாகும் முறை ஒன்றேதான்.

வெப்பமண்ட்ல புயல்கள் ஈரமும் வெதுவெதுப்புமான் காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் பெரிய இயந்திரங்கள் எனலாம். எனவே தான் அவை, புவிநடுகோட்டு பகுதிகளில்  வெதுவெதுப்பான நீர் உள்ள கடலின் பரப்பில் உருவாகின்றன. 

கடல் மட்டத்தில் இருந்து ஈரமும் வெதுவெதுப்புமான காற்று மேல் நோக்கி எழுகின்றது. அப்படி கடல் மட்டத்தை விட்டு மேல் எழுகையில் கடல் பரப்பை ஒட்டி உள்ள  காற்று குறைகிறது. அதாவது சூடான காற்று மேல் எழுகையில் அங்கு காற்றின் அழுத்தம் குறைகிறது.


அதனால், சுற்றுப்பகுதிகளில் உள்ள உயர் அழுத்த காற்று, அழுத்தம் குறைந்த பகுதிக்குள் முட்டிக்கொண்டு நுழையும். அப்படி நுழையும்  காற்றும் சூடாகிறது. சூடான  காற்று தொடர்ந்து மேல் எழ, சுற்றிலும் உள்ள காற்று சுழன்று அதன் இடத்தை பிடிக்கிறது.இவ்வாறு மீண்டும் மீண்டும் நடக்கிறது.இதனால் அங்கு ஒரு குவியல் போல காற்று மண்டலம் உருவாகிறது. இந்த நிகழ்வை (1) என கொள்க.

 இந்த சூடான, ஈரமான காற்று மேல் உயர்ந்து குளிரும்போது அதில் உள்ள ஈரம் மேகம் ஆக மாற்றம் பெறுகிறது. இவ்வாறு  கடலின் சூட்டாலும் அதன் பரப்பில் ஆவியாகும் நீராலும் மேகத்திரளும் காற்றின் சுழற்சியும் பெருகுகிறது


புவிநடுக்கோட்டின் வடபுலத்தில் உருவாகும் புயல்கள் வலஞ்சுழியாகவும், தென்புலத்தில் உருவாகும் புயல்கள் இடஞ்சுழியாகவும் சுழலுகின்றன. இந்த வேறுபாட்டுக்கு புவி  தன் அச்சு மேல் சுழல்வதே  காரணம்.

 புயலில் இது போன்ற பல மிகபெரும் வட்டவடிவு கற்றைகளாக உருவாகின்றன

உருமு மேகத்தை குமுலஸ் நிம்பஸ் என்கிறார்கள்.  இது இடியும் மின்னலும் கூடிய ஒரு வகை மேகம். இது  அடர்த்தியான கோபுரங்கள் போல் வானில் 30,000 அடிக்கும் மேலான  உயர்மட்டத்தை எட்டும் தன்மையுடையதாக இருக்கும். அதில் உறைபனி துகள்களால் இழைகள் ஓடிவது போல உச்சி தவிர பிற கூம்பு வடிவில் இருக்கும். இவை  ஒரே மேகமாகவோ அல்லது பல தலைகளுடன் அடிப்பாகம் மட்டும் இணைந்த மேக திரளாகவோ இருக்கும்.

இந்த சூறாவளி அமைப்பு  வேகம் வேகமாக சுழல, அதன் நடுவிலே அதன் சுழிக்கண் உருவாகிறது. அதன் சுழிக்கண் அமைதியாகவும் தெளிவாகவும், குறைந்த காற்றழுத்தம் உள்ளதாகவும் இருக்கும்.  உயர் அழுத்த காற்று அந்த மேலிருந்து சுழிக்கண் வழியாக கீழ் நோக்கி பாயும்.சுழலுகின்ற சூறாவளி காற்றின் வேகம் 39 மைல்/மணிக்கு எட்டும்போது அந்த சூறாவளியை ”வெப்ப மண்டல சூறாவளி” என்று
அழைக்கிறார்கள்.. அதுவே  74 மைல்/மணிக்கு எட்டும்போது அலுவல மொழியாக “ட்ராபிகள் சைக்ளோன்” (தமிழில் வெப்ப மண்டல புயல் எனலாம்) அல்லது ஹரிகேன் என அழைக்கிறார்கள்..

இந்த (வெப்ப மண்டல) புயல்கள்  நிலப்பகுதியை தொடும்போது தன் வலுவை இழக்க தொடங்கும். காரணம், அவற்றுக்கு, இனி மேலும் சூடான கடல்நீரின் ஆற்றல் ஊட்டப்படுவது இல்லை.அதாவது நிகழ்வு (1)நடை பெற வாய்ப்பு இல்லாமல் போகிறது. இருப்பினும், அவை உள்நாட்டில் வெகு தொலைவு நகர்ந்து முற்றிலும் மடிவதற்குள்,  பல சென்டிமீட்டர்  மழையை கொட்டுவதோடு, காற்றினால் விளையும் சேதங்களுக்கும்  காரணமாகிறது.

(வெப்ப மண்டல) புயல்களின் வகைப்பாடுகளை நாசா வடிவமைக்கிறது . 

அமெரிக்க தேசீய கடல் மற்றும் வளிமணடல நிருவாகத்துறைனரால் இயக்கபப்டும் GOES செயற்கஈகோள்கள்  தரைமட்டத்தில் இருந்து 23,000 அடி  உயரத்தில் நிலைகொண்டு இந்த புயல்களை கண்காணித்துக்கொண்டு இருக்கின்றன.. இக்கோள்கள் எடுக்கும் படங்கள் , வானிலை முன்னறிவிப்பாளர்களுக்கு புயல்கள் எங்கு எப்போது தோன்றும் என கணித்து சொல்வதற்கு உதவுகின்றன.இதனால்  பல உயிர்களை காக்க முடிகிறது .மேலும் தகுந்த முன்னேற்பாடுகளையும் எடுக்க முடிகிறது.

சரி இந்தப் புயல்களின் பெயர்கள்?உலகில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையங்கள்  தங்களுக்குள் ஒரு குழு அமைத்துக் கொண்டு கடல்களை பிரித்துக் கொண்டு  ஒவ்வொரு கடலிலும் உருவாகும் அல்லது உருவாகப் போகும் புயல் களுக்கு பெயர்களை  சூட்டுகின்றன.அந்தப் பெயர்கள்  சுழற்சி முறையில்  ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயராக   வைக்கப் படும். (ஒவ்வொரு  முறையும் ஒவ்வொரு  நாடு வைக்கும் பெயர் )ஏனென்றால் பிற்காலத்தில் எந்தப் புயலால்  எவ்வளவு சேதம் விளைந்தது என்பதை அறிய ஏதுவாக இருக்கும் என்பதால்.

செவ்வாய், அக்டோபர் 30, 2012

மனம்...10 !

மனதைப் பற்றி எழுதி நாளாகிவிட்டது.!

கட்டிலில் படுத்துக் கொண்டு மனதை ஓடவிட்டேன்.நமது ஒவ்வொரு செயலையும் நமது மனம் தான் தீர்மானிக்கிறது. கண்ணதாசன் ஒரு பாடலில் எழுதி இருப்பார்."உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை!" 
அருமையான வார்த்தைகள்.
இரவு நேரம் ஒரு சுடுகாட்டின் வழியே செல்லவேண்டும்.சிலர் என்ன சொல்கிறார்கள்?அப்பா சுடுகாட்டுப் பக்கமா,இந்த நேரமா,நான்வரமாட்டேன் என்கிறார்கள்.வேறு சிலரோ அட ,என்ன பயம் வேண்டி கிடக்குது?நான் போறேன் வர்றதா இருந்தா  வா.இல்லைன்னா விடிஞ்சதும் வா.என்று கூறிவிட்டு நடையைக் கட்டுகிறார்கள்.
இரண்டு பேருக்குமே அவர் மனது சொல்வது தானே? ஒருவருக்கு பயம்.மற்றவருக்கு பயம் இல்லை.இரண்டையும் மனது தானே தீர்மானித்தது?
இதே போல ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்க்கலாம்.எல்லோருக்குமே பெரும்பாலும் நாளை என்ன ஆகுமோ என்ற பயம் தான் முன்னே நிற்கிறது.பரீட்சையில் பெயில் ஆனா என்ன பண்ணறது?கல்யாணம் நின்னு போயிட்ட என்ன பண்ணறது?வேலை போய் விட்டா  என்ன பண்ணறது? அவர் தப்பா  நினைப்பாரோ? இவர் திட்டுவாரோ என எல்லாவற்றிலும் மனம் எதிரிடை யாகவே நினைக்கிறது.
இப்படி எதிரிடை யாக நினைக்கும் போது தான் வாழ்க்கையைப் பற்றிய பயம் வருகிறது.
ஆனால் உண்மையில் நடப்பது என்ன? எல்லோரது வாழ்க்கையிலும் அவர்கள் நினைப்பது போல எல்லாவற்றிலும்  எதிரிடை யாக நடப்பது இல்லை.கிட்டத்தட்ட 90% நாம் நினைப்பது போலவே எதிரிடையாக நடப்பதில்லை எனவும் நாம் தான் எதிரிடையாக  நினைத்து வீணாக பயந்து மனது ஒடிந்து போகிறோம் என மன நல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
எண்ணிப் பாருங்கள் .அப்படியே எதிரிடையாக நடந்து விட்டாலும் தான் என்ன செய்யப் போகிறோம்? அதைக் கடந்து தானே வரப் போகிறோம்? பின் எதற்காக  முன்னமே  அதை நினைத்து வருந்த வேண்டும்-பயப் பட வேண்டும்.?
நமது மனது என்ன நினைத்தாலும் இரண்டே இரண்டு சாத்தியக் கூறுகள் தான் உள்ளன. ஒன்று பயப்படுவது போல ஒன்றும் நடக்கப் போவது இல்லை. அல்லது பயந்தது  போலவே நடந்து  விடும்.
 நாம் பயந்தது போல நடக்கவில்லையானால்  முன்பு அதை நினைத்து நாம் மனத்தைக் குழப்பிக் கொண்டது  தான் மிச்சம்.
நினைத்ததுபோலவே நடந்து விட்டால் மட்டும் என்ன செய்யப் போகிறோம்? அதைக் கடந்து வந்து தானே ஆக வேண்டும்?

இன்னும் அலசுவோம்...


ஞாயிறு, அக்டோபர் 21, 2012

பெண்கள்......!

தாயாக பெண்களைப் பார்க்கும் போது அவளின் கருணையும் அன்பும் அளவிடர்க் கரியதாக இருக்கிறது.அதுவே பெண்களை சாதாரணமாகப் பார்க்கும் போது இத்தகைய குணங்கள் இருப்பது தெரியவருகிறது.

எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலான பெண்கள் நமது சாஸ்திரங்களும் புராணங்களும்,இதிகாசங்களும் கூறியதைப் போலவே இருப்பதாக உணருகிறேன் .உண்மையான அன்பினை எந்தப் பெண்ணும் மதிப்பதாகத  தெரியவில்லை.

ஒரு பெண்ணிடம் எவ்வளவுதான் அன்புடன் பழகினாலும் ,அவளிடம் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நன் வேண்டுமா ?அல்லது பணம் தான் முக்கியமா?என்று கேட்டால் பணம் தான் வேண்டும்  என பெரும்பாலான பெண்கள் டக்கென்று  கூறுவார்கள். உண்மையான அன்பிற்கு பெண்கள் தரும் மதிப்பு அவ்வளவு தான்.இவைகள் என் வாழ்வில் நான் உணர்ந்தவை. நமது முன்னோர்கள் மேலும் என்னென்ன கூறி இருக்கிறார்கள் என்று  பார்ப்போமா?


11- பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள். தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும் அவர்கள் நேசிக்கமாட்டார்கள். விரும்பமாட்டார்கள். (மகாபாரதம் அனுஷன் பர்வதம் : 43-23)

12-உயிரைக் கொல்லும் அதர்வண மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். (மேற்படி: 43-24)


13- ஒருவனுடன்  கூடி வாழ ஒத்துக் கொண்டாலும் பின்னர் மற்றவர்களுடன் கூடிக் கொண்டு முன்னவனை விட்டுப் பிரியவும் தயாராகவிருப்பார்கள்.(மேற்படி:43-24)


14- அவர்கள் ஒர் ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள்.(மேற்படி: 43-24)


15- ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக் கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக் கூடிய (நல்லதன்மை) ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களிடம் சம்பந்தத்தை வைத்துக் கொள்ளவேண்டும். அந்தப்படிக்கில்லாமல் வேறு விதமாக ஒருவன் பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்துப் போவான்.(மேற்படி: 43-24) எல்லா மனிதர்களும் கடவுளாக இருந்ததைக் கண்டு தேவர்கள் பயந்து பாட்டனிடம் சென்றார்கள் பாட்டன் இவர்கள் மனதிலுள்ளதை அறிந்து மனிதர்களின் வீழ்ச்சிக்காகப் பெண்களை சிருஷ்டி செய்தார்.


16- ஆகவே பெண்கள் மனித சமூதாயத்தின் வீழ்ச்சிக்காகப் பிறந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.


17- பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால் அவர்கள் நிலையற்ற ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது.


18- இவ்வுலகில் அவர்களை எவ்வளவு பாதுகாப்புடன் வைத்திருந்தாலும் அவர்களுக்கு ஆண்களிடமுள்ள ஆசையினாலும், அவர்களது நிலையற்ற தன்மையாலும், இயற்கையாகவே அவர்களுக்கு உள்ளமில்லாததாலும், தங்கள் கணவர்களிடம் விசுவாசமற்றவர்களாய் இருப்பார்கள்.(மனு:9-15)


19- இராமாயணம் ஆரண்ய காண்டம்: 13-5-6)உலகம் தோன்றியது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள் தாமரை இலைத் தண்ணீர் போலச் சலனப் புத்தியுடையவர்கள். வாள் போல் கூர்மையான கொடுமைத் தன்மையுடையவர்கள்.
20-ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவர் யாருமிருக்க முடியாது.


21- ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொல்லத் தயங்கமாட்டாள்.


22- பாவத ஸ்கந்தம்: (4-14. 42-8. 4-36) பெண்கள் இரக்கமில்லாமல் புலிக்கு ஒப்பிடப் பட்டிருக்கிறார்கள். கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இழிவு படுத்தப்பட்டிருக்கிறார்கள்.


23- பெண்கள் நிலையற்ற சுபாவமுடையவர்கள். அவர்கள் குற்றமுள்ளவர்கள்.


24- சுக்ரா: (3-163) பெண் இனத்திற்கே கீழ்கண்ட 8- குணங்களும் உரிமையானவைகள்:பொய், நிலையில்லாமை, வஞ்சகம், மூடத்தனம், பேராசை, மாசு, கொடுமை, துடுக்குத்தனம்.   
மீண்டும்  சொல்கிறேன் ....இவை யாவும் எனது கருத்துக்கள் அல்ல .புராணங்களிலிருந்தும்  இதிகாசங்களிலிருந்தும்  வேதத்திலிருந்தும்   மேலும் பல  ஞாநிகளும் கூறியவற்றையே தொகுத்து அளித்திருக்கிறேன். இவைகளுக்கு விலக்கான பத்தினிப் பெண்களும் உண்டு என்பதையும்  கூற விரும்புகிறேன். 


                                                                                                          
நன்றி...!


வியாழன், அக்டோபர் 04, 2012

பெண்கள்....!

 இனி நான் எழுதும் பெண்களைப் பற்றிய  தகவல்கள்  கொஞ்சம்  கடுமையானவை. இவைகள் அனைத்தும்  நம் முன்னோர்கள் கூறியவைகள்  தான். இத்தகைய  குணங்களை உடைய சில பெண்களை  நான்  எனது வாழ்க்கையில்    பார்த்ததுண்டு.

 பெண்களைப் பற்றி இந்து மத ஆதாரங்களான வேத சாஸ்திரங்கள் புராண இதிகாசங்கள் ஆகியவைகளிலும், பண்டைய அரசு நீதியிலும் காணப்படுவதைத் தான் நான் இங்கு தொகுத்துக குறிப்பிட்டிருக்கிறேன். இவைகள் எனது  கூற்றுக்கள் அல்ல !இதைப்  படிக்கும் எந்தப் பெண்ணிற்கும் கோபம் வந்தால் நான் பொறுப்பல்ல....!.

1- ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது: (ரிக்வேதம் - 8-3-17) பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள்
 
2- ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது: (ரிக்வேதம் - 10-95-10) பெண்கள் நட்பு நீடித்ததல்ல. அவர்கள் கழுதைப்புலியின் தன்மையுடையவர்கள்.
 
3- யக்ஞய வல்கியர் என்பவரால் வகுக்கப்பட்ட தர்ம நீதி:மூன்று பொருட்களை அதாவது செல்வத்தை, புஸ்தகங்களை, பெண்களை வேறொருவன் ஆதிக்கத்தில் விட்டு வைக்காதே.


4- மனு சொல்லுவதைக் கவனியுங்கள். இந்த உலகில் ஆண்கள் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதனால் தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாகிறார்கள்.
 
5- மேற்படி: 2-24. இந்த விதத்தில் படித்த ஆண்களையும் பெண்கள் வசியப்படுத்தித் தப்பான வழியில் செலுத்தி இச்சைக்கும் போகத்திற்கும் அடிமையாக்கி விடுவார்கள்.
 
6- மனு பெண்களுக்குப் போகத்தில் ஆசை, நகையில் ஆசை, இருப்பில் ஆசை, என்பவைகளைக் கற்பித்ததோடு களங்கமுள்ள சிந்தையையும், சினத்தையும் , அயோக்கியத்தனத்தையும், வஞ்சகத்தையும், துர்நடத்தையும் பெண்களின் இலட்சணமாக வருணித்திருக்கிறார்
 பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. 
 
7- எவ்வளவு விறகினாலும் நெருப்பு திருப்தி அடைவதில்லை. ஆறுகள் கொண்டு வரும் எந்த அளவிலும், நீரினாலும், கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும் கொலைக்காரன் சமாதானம் அடைவதில்லை. இதுப்போலப் பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விட மாட்டார்கள்.
 
8-மகாபாரதம். நாசகாலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக் கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின் கூர்மை, கொடிய விஷம், பாம்பு, நெருப்பு- ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக் கூடியதாமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்.
 
9 - மகாபாரதம் அனுஷன் பர்வதம்: (39-8) பெண்ணின் அறிவு கண்டுபிடிக்க முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது.


10- பெண்ணை விடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்புப் போன்றவள். பெண் மயக்கும் (வஞ்சகி) குணமுள்ளவள். சவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரே பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.

இன்னும் வரும்....!

திங்கள், செப்டம்பர் 24, 2012

பெண்கள் ...!

பெண்களைப் பற்றி எழுதி நாளாகி விட்டது ! சரி இஸ்லாத்தில் பெண்களைப் பற்றி கூறப் பட்டு இருப்பவைகளைப் பார்ப்போமா?


இன்றைய கால கட்டத்தில் பெண்கள்நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம்.
கணவனிடம் நடந்து கொள்ளும் முறை:
1.கணவனுக்கு கட்டுப்படுதல்:
எந்தப் பெண் தன் கணவன் இல்லாத சமயத்தில் எதையெல்லாம் பாதுகாக்க வேண்டுமோ அதையெல்லாம் பாதுகாத்துகணவனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றாளோ அவளே ஸாலிஹான பெண்’ என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 4:34)
ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் எந்த பெண் சிறந்த பெண்?என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்அவன் பார்க்கும் போது அவனை சந்தோஷப்படுத்துகிறாளோ அவளே சிறந்தவள் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: நஸயீ)
2.கஷ்டத்திலும் கணவனுக்கு உதவி செய்தல்:
நபி (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை 600இறக்கைகளை கொண்டவர்களாக வானத்தையும் பூமியையும் நிரப்பியவர்களாக கண்ட பொழுது மிகவும் பயந்தவராய் தன் மனைவி கதீஜா (ரலி) அவர்களிடம் ஓடி வந்து என்னை போர்த்துங்கள்என்னை போர்த்துங்கள்’ என்று கூறினார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை போர்த்தி ஆசுவாசப்படுத்திய பின் நடந்ததை விபரமாக கேட்டு பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உங்களை ஒரு போதும் கேவலப்படுத்த மாட்டான். ஏனென்றால் நீங்கள் சொந்தங்களை அனுசரித்துமக்களின் கஷ்டங்களை சுமந்துஏழை எளியோருக்கு உதவி செய்து விருந்தாளிகளை கண்ணியப்படுத்துகிறீர்கள்’ என்று ஆறுதல் கூறினார்கள். (நூல்: புகாரி)
3.கணவனுக்கு பணிவிடை செய்தல்:
நபி (ஸல்) அவர்கள் சத்தியத்தை தேடி ஹிரா குகை சென்ற பொழுது கதீஜா (ரலி) அவர்களுக்கு வயது 55. அந்த வயதிலும் அவர்கள் பல மைல் தூரம் கரடு முரடான பாதையில் உணவுப் பொருளை சுமந்து நடந்து சென்று தன் கணவனுக்கு பணிவிடை செய்தார்கள். (நூல்: புஹாரி)
4.இல்லறத்தில் கணவனை திருப்திபடுத்துதல்:
நீங்கள் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தாலும் அல்லது போருக்கு செல்வதற்காக குதிரையின் மீது இருந்தாலும் கணவன் இல்லறத்திற்காக அழைத்தால் அவனை சந்தோஷப்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
5.ரகசியம் காத்தல்:
கணவன் ரகசிய உள்பட எல்லாவிதமான ரகசியங்களையும் பாதுகாக்க வேண்டும். 
விருந்தோம்பல்:
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறார்களோ அவர்கள் விருந்தாளியை கண்ணியப்படுத்தட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புஹாரி)
ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு விருந்தாளி வர நபி (ஸல்) அவர்கள் இவருக்கு யார் விருந்தளிப்பது என்று கேட்டார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் தான் அளிப்பதாக கூறி அந்த விருந்தாளியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் மனைவியிடம் நபி (ஸல்) அவர்களின் விருந்தாளியை கண்ணியப்படுத்து’ என்று கூறினார்கள். உடனே மனைவி உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், ‘குழந்தைகள் உண்ணும் உணவைத் தவிர வேறு எதுவும் நம்மிடம் இல்லையே’ என்று சொல்லஅதற்கு கணவர் அபூதல்ஹா (ரலி) அவர்கள்குழந்தைகளை பசியோடு தூங்க வைத்து விட்டு உணவை எங்களுக்கு வைத்து விட்டு விளக்கை ஏற்றுவது போல் அணைத்து விடு. விருந்தாளி நானும் உண்பதாக நினைத்துக் கொண்டு வயிறார உண்ணுவார்நான் உண்ணுவது போல் நடித்துக் கொள்வேன் என்று சொல்லஅதற்கு கட்டுப்பட்டு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மறுநாள் காலை ஸுப்ஹு தொழுகைக்கு சென்ற அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் இருவரின் விருந்தோம்பலை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்பட்டான்மேலும் சந்தோஷத்தில் சிரித்தான் என்றார்கள்.
அப்போது அல்லாஹ் அவர்கள் தங்களுக்கு தேவையிருந்தும் பிறருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்’ (அல்குர்ஆன் 59:9) என்ற வசனத்தை இறக்கியருளினான்.

உண்மை பேசுதல்:
உம்மு ஸலமா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பெண் கேட்டார்கள். அதற்கு அவர்கள் தன்னிடம் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தான் ஒரு முன்கோபக்காரி என்று உண்மையை எடுத்துக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் உன்னுடைய முன்கோபம் போக நான் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்று கூறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
இதிலிருந்து எந்த சூழ்நிலையிலும் உண்மை பேச வேண்டும் என்பதும்,ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்பது தவறு என்பதும் புலனாகிறது.

பணம் வந்தாலும் தன்னடக்கத்தோடு வாழுதல்:
கதீஜா (ரலி)அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) போன்ற சஹாபிய பெண்மணிகள் பணம் இருந்தும் தன்னடக்கமாகஎளிமையாக வாழ்ந்தார்கள். அவர்கள் பணத்தைக் கொண்டு பெருமையடிக்கவில்லை. ஆணவம் கொள்ளவில்லை. ஏனெனில் யாருடைய இதயத்தில் கடுகளவும் பெருமை இருக்கிறதோ அவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குழந்தை வளர்ப்பு:
குழந்தைகளை ஒழுக்கத்தோடும்இஸ்லாமிய பண்பாட்டோடும் வளர்ப்பது பெற்றோர்களது கட்டாய கடமை. குழந்தைகள் தந்தையை விட தாயிடம் நெருக்கமாக இருப்பதால் தாய் மீது இந்த பொறுப்பு அதிகமாக இருக்கிறது என்பதை ஒவ்வொரு பெண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறெல்லாம் எந்தப் பெண் நடந்து கொள்கிறாளோ அவளே உண்மையான  பெண் ஆவாள்.
  ஒவ்வொரு  பெண்ணும் மேற்கண்ட முன்மாதிரி பெண்ணாக வாழவேண்டும்! .
 by ALI AKBAR UMARI
நன்றி :
http://manithaneyaexpress.blogspot.in/2012/02/blog-post_19.html

வியாழன், ஆகஸ்ட் 23, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை 19....ஸ்ரீரங்கம்..! 7

எனக்கு அவர்கள் கொடுத்த பிரஷர் காரணமாக அரை மனதுடன் நான் அந்த வேலையைத் துவங்கினேன்.கிட்டத்தட்ட 125 அடி நீளத்திற்கு  சுவர் எழுப்ப வேண்டும். ரிஸ்க் நிறைந்த வேலை ஆதலால் 15 அடிகளாகப் பிரித்து செய்ய முடிவு செய்தேன்.முதலில் 15 அடிகளுக்கு நிலத்தின் மட்டம் வரை பள்ளம் தோண்டி சுவரையும் எழுப்பிய பின் அதை மூடி விட்டு அடுத்த 15 அடி செல்லலாம் என தீர்மானம் செய்தேன்.பெங்களூரில் மழை எப்போது வரும் என்று கூற முடியாத நிலையால் இவ்வாறு முடிவு செய்தேன்.

ஒரே நாளில் 15 அடிக்கு பள்ளம் எடுத்து அஸ்திவார concrete போட்டு கம்பி வேலைகளையும் முடித்து நிலத்தின் மேல் மட்டம் வரை concrete போடவும்,   அன்றே இரவோடு இரவாக ஏற்ப்பாடு செய்து விட்டேன்.ஆனால் சுமார் 9 மணி அளவில் மழை பிடித்துக் கொண்டது.!பாதி concrete போட்ட நிலையில் வேலை நிறுத்தப் பட்டது. பெரிய மழையாக இருந்ததால் நாங்கள் எல்லோரும் guest house திரும்பி விட்டோம்.

சுமார் 1 மணி அளவில் பக்கத்து பாக்டரி இலிருந்து போன்! அந்த அஸ்திவாரத்தின் மீது பக்கத்து compound wall சரிந்து விழுந்து விட்டது என்று. நான் பயந்த படியே நடந்து விட்டது. என்ன செய்வது அந்த பேய் மழையில்? நாளை காலையில் பார்த்துக்  கொள்ளலாம் என நினைத்து படுக்கச் சென்றேன். ஆனால் எனது client மேலாளர் என்னைத்தூங்க விடவில்லை. உடனே site சென்று ஏதாவது செய்ய வேண்டும் என்று தொந்தரவு செய்தார். நான் மசியவில்லை .என்  பேச்சைக் கேட்காமல் நீங்கள் தானே பிரஷர் தந்தீர்கள்?இந்த மழையில் நான் என்ன செய்ய முடியும்? நான் சென்றாலும்  labours வரவேண்டுமே?இந்த மழையில் நடு இரவில் யார் வருவார்கள்? 
 என்று கூறிவிட்டு, நாம் தான் சுவர் விழுந்தால் எங்கள் நிர்வாகம் பொறுப் 
பேற்காது  என்று மெயில்   அனுப்பச் சொல்லி விட்டோமே.எனவே இது நமது ரிஸ்க் இல்லை என்று   இருந்து விட்டேன்.

மறு நாள் ஞாயிற்றுக் கிழமை. காலை 6 மணிக்கெல்லாம் சைட் சென்று விட்டேன். இடிபாடுகளை அகற்றி கம்பிகளை சரி செய்ய ஆட்களை ஏற்பாடு செய்தேன். 8 மணி வாக்கில் எங்களது client மேலாளர் வந்து விட அவருக்கும் எனக்கும் வாக்கு வாதம் முற்றியது.எங்களது site in-charge  ஞாயிறு ஆதலால் ஊருக்குச் சென்று விட்டார்..அவருக்கு விஷயத்தைக் கூறிய போது  நீயே சமாளித்துக் கொள் என்று கூறி விட்டார்.

நான் கூறியதை கேட்காமல் எனக்கு பிரஷர் தந்து செய்ய வைத்ததாலும் நாங்கள்  ரிஸ்க் பொறுப்பு ஏற்க மாட்டோம் என மெயில் தந்திருப்பார்கள் என்ற தைரியததிலும் மிகவும் கோபத்துடன் பேசினேன்." உங்களுக்கு வேலையின்  ரிஸ்க் தெரிய வேண்டும்.அல்லது தெரிந்தவார்கள் கூறினால்  ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து உங்கள் போக்கில் செய்ய வைத்து விட்டு பிறகு ஏதாவது நடந்தால் எங்கள் தலையில் போடுவது  சரிதானா?"என சத்தம் போட்டேன். மிகவும் வாக்கு வாதம் அதிகமானதால் நாங்கள் அவர்களின் மேலிடம் வரை அனுப்பியிருந்த மெயில் லின் கோப்பி பிரிண்ட் எடுத்து அவரிடம் தரலாம் என்று சைட் ஆபீஸ் வந்து விசாரித்த  போது  அந்த மெயில் ஐ type  மட்டும் செய்து விட்டு அனுப்பாமல் விட்டு விட்டது தெரிந்தது!

இன்னும் வரும்...

புதன், ஆகஸ்ட் 08, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.18 !..ஸ்ரீரங்கம் 6 !

 பிடுதி (BIDADI )யில்  என் வாழ்க்கை பெரும் போராட்டமாக இருந்தது. தினமும் ஸ்ரீ ராகவேந்திரரிடம் பேசுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.மனம் வெறுப்புற்றதால் கோபம் அதிகமாக வர ஆரம்பித்தது.ஏதாவது வேலை முடியவில்லை என்றாலோ தவறு நடந்தாலோ கீழே உள்ள பொறியாளர்களை எரிந்து விழ ஆரம்பித்தேன்.
ஒரு நாள் எங்களது சைட் டிற்கும்   பக்கத்தில்  உள்ள தொழிற்ச்சாலைக்கும் இடையில் காம்பவுண்ட் சுவர் எழுப்புவது தொடர்பான பேச்சு வந்தது.அந்த வேலையினையும் எனது பொறுப்பில் விட முடிவு செய்தனர்.அது முழுவதும் concrete கொண்டு செய்ய  வேண்டும்.முதல் பாதியில் பிரச்சினை இல்லை எனவே அது சுலபமாக முடிந்து விடும்.ஆனால் இரண்டாவது பாதி பெரும் ரிஸ்க் எடுக்கும் படியாக இருந்தது.  (மொத்தம் கிட்டத் தட்ட 200 மீட்டர் நீளம் , 4 மீட்டர் உயரம் இருக்கும்)

இதை நான் விவாதத்தின் பொது கூறி அந்த பகுதியில் foundation னுக்கு பள்ளம் தோண்டுவதை விடுத்து வேறு வழியில் (pile அடித்து ) செய்யலாம் என்று கூறினேன்.ஏனென்றால் பக்கத்து factory யின் காம்பவுண்ட் சுவர் எங்களது  சைட் ஐ விட உயரமாக இருந்தது.அங்குள்ள நில அமைப்புகள் அப்படி இருக்கும்.மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும். எங்களது நிலம் தாழ் வாகவும் அவர்கள் நிலம் உயரமாகவும் இருந்தது..எனவே எங்கள் பக்கம் foundation னுக்கு குழி பறிக்கும் பொது அது அவர்கள் சுவற்றின் foundation னுக்கும் சுமார் இரண்டு மீட்டர் கீழே செல்ல வேண்டி இருக்கும்.அவ்வாறு செல்லும் போது அவர்களது foundation எங்களது சுவர் கட்டி முடிக்கும் வரை அந்த இரண்டு மீட்டர் உயரத்திற்கு  மண்  மீது அமர்ந்து இருப்பது நன்கு expose ஆகும்.இதன் காரணமாக  மழை திடீரென பெய்தால் மன்கரைந்து ஓடி காம்பவுண்ட் சுவர் கீழே உட்கார்ந்து விடக் கூடிய அபாயம்  மிக மிக அதிகம் இருந்தது.அந்த சுவற்றினை ஒட்டியே பக்கத்து factory யின் scrap room மற்றும் genset ரூம் இரண்டும் அமைந்திருந்தது.சுவர் விழுந்தால் அந்த இரண்டு ரூம்  களுக்கும் பாதிப்பு ஏற்படும்  அபாயமுமிருந்தது 

இது பற்றி நான் கூறிய போது எங்களது client திட்ட மேலாளர் நான் கூறியதை நிராகரித்தார். எனவே முதல் பாதியை முடித்த நான் இரண்டாவது பாதியை செய்ய மறுத்தேன்.என்றாலும் எனக்கும் பல வழிகளில் பிரஷர் தந்து நான் தான் செய்ய வேண்டும் என்று கூறி விட்டனர். மிக மிக ரிஸ்க்கான வேலை என்று நான் கூறியபோதும்  வேறு alternate பற்றி விவாதிக்காமல் பள்ளம் வெட்டச்  சொன்னார்கள்.

இதை நான் எனது மேலதிகாரியிடம் மறுத்துக் கூறி ,இதையும் மீறிச் செய்யச் சொன்னார்கள் என்றால்  பக்கத்து சுவர் விழுந்தால் எங்கள் நிர்வாகம் பொறுப்பேற்காது  என்று கூறி ஒரு மெயில் அனுப்பிவிடுங்கள் சார் என்று கூறினேன்....

 இன்னும் வரும் .....

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

மகான் ஸ்ரீராகவேந்திரரை வணங்குவோம் ...
இன்று (4.08.2012) ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஜீவ சமாதி அடைந்த புனிதமான நாள். இன்று அவரின் பிருந்தாவனங்கள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் ஆராதனை விழாவாக கொண்டாடுவார்கள் .இந்த நாளில் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனம் சென்று அவரை வணங்கி நாமும் அவர் அருளைப் பெறுவோம்.

பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதா யச ! பஜதாம் கற்பக விருக்ஷ்யாய நமதாம் காமதேனுவே!

ஸ்ரீ ராகவேந்திரரின அருளை அனைவரும் பெற அவரின் பாதம் பணிந்து வணங்குகிறேன்