இந்த வலைப்பதிவில் தேடு

புதன், அக்டோபர் 31, 2012

நீலம் ,சாண்டி- புயல்..!.

இரண்டு மூன்று நாட்களாக புயல் புயல் என்று ஒரே பேச்சு.அதற்கு ஒரு பெயர் வேறு! இந்தப் புயல் என்பது என்ன அது எப்படி உருவாகிறது? படித்த பலருக்கும் கூட இது தெரியாமல் இருக்கும் .
 
அவர்களுக்காக புயல் என்பது என்ன ?அது எப்படி உருவாகிறது? அது பற்றிய ஒரு தகவல் பதிவு..

நம் புவியில் வீசும் மிக கடுமையான, ஆ... என நம்மை வியக்க வைக்கும் சூறாவளி காற்றே புயல்கள். புயல்களை அவை வழங்கும் இடம் பொறுத்து  பல பெயர்களில் மக்கள் அழைக்கிறார்கள். சூறாவளிகளின் அறிவியல் பெயர் “வெப்பமண்டல புயல்கள்”. புவிநடுக்கோட்டை ஒட்டி, மகர கடக கோடுகளுக்கு இடையே உள்ள வெப்பமும் புழுக்கமும் உள்ள பகுதிகளை “வெப்பமண்டலம்” என்கிறார்கள். அட்லாண்டிக் கடலிலும் கிழக்கு பசிபிக் கடலிலும் தோன்றும் புயல்களை “ஹரிகேன்” என்கின்றனர். இந்து மாக்கடலில் தோன்றும் புயல்களை சைக்ளோன் என்றும் ஜப்பானிய கடலில் தோன்றும் புயல்களை டைஃபூன் என்றும் அழைக்கிறார்கள்.

புயல்கள் என்ன பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை உருவாகும் முறை ஒன்றேதான்.

வெப்பமண்ட்ல புயல்கள் ஈரமும் வெதுவெதுப்புமான் காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் பெரிய இயந்திரங்கள் எனலாம். எனவே தான் அவை, புவிநடுகோட்டு பகுதிகளில்  வெதுவெதுப்பான நீர் உள்ள கடலின் பரப்பில் உருவாகின்றன. 

கடல் மட்டத்தில் இருந்து ஈரமும் வெதுவெதுப்புமான காற்று மேல் நோக்கி எழுகின்றது. அப்படி கடல் மட்டத்தை விட்டு மேல் எழுகையில் கடல் பரப்பை ஒட்டி உள்ள  காற்று குறைகிறது. அதாவது சூடான காற்று மேல் எழுகையில் அங்கு காற்றின் அழுத்தம் குறைகிறது.


அதனால், சுற்றுப்பகுதிகளில் உள்ள உயர் அழுத்த காற்று, அழுத்தம் குறைந்த பகுதிக்குள் முட்டிக்கொண்டு நுழையும். அப்படி நுழையும்  காற்றும் சூடாகிறது. சூடான  காற்று தொடர்ந்து மேல் எழ, சுற்றிலும் உள்ள காற்று சுழன்று அதன் இடத்தை பிடிக்கிறது.இவ்வாறு மீண்டும் மீண்டும் நடக்கிறது.இதனால் அங்கு ஒரு குவியல் போல காற்று மண்டலம் உருவாகிறது. இந்த நிகழ்வை (1) என கொள்க.

 இந்த சூடான, ஈரமான காற்று மேல் உயர்ந்து குளிரும்போது அதில் உள்ள ஈரம் மேகம் ஆக மாற்றம் பெறுகிறது. இவ்வாறு  கடலின் சூட்டாலும் அதன் பரப்பில் ஆவியாகும் நீராலும் மேகத்திரளும் காற்றின் சுழற்சியும் பெருகுகிறது


புவிநடுக்கோட்டின் வடபுலத்தில் உருவாகும் புயல்கள் வலஞ்சுழியாகவும், தென்புலத்தில் உருவாகும் புயல்கள் இடஞ்சுழியாகவும் சுழலுகின்றன. இந்த வேறுபாட்டுக்கு புவி  தன் அச்சு மேல் சுழல்வதே  காரணம்.

 புயலில் இது போன்ற பல மிகபெரும் வட்டவடிவு கற்றைகளாக உருவாகின்றன

உருமு மேகத்தை குமுலஸ் நிம்பஸ் என்கிறார்கள்.  இது இடியும் மின்னலும் கூடிய ஒரு வகை மேகம். இது  அடர்த்தியான கோபுரங்கள் போல் வானில் 30,000 அடிக்கும் மேலான  உயர்மட்டத்தை எட்டும் தன்மையுடையதாக இருக்கும். அதில் உறைபனி துகள்களால் இழைகள் ஓடிவது போல உச்சி தவிர பிற கூம்பு வடிவில் இருக்கும். இவை  ஒரே மேகமாகவோ அல்லது பல தலைகளுடன் அடிப்பாகம் மட்டும் இணைந்த மேக திரளாகவோ இருக்கும்.

இந்த சூறாவளி அமைப்பு  வேகம் வேகமாக சுழல, அதன் நடுவிலே அதன் சுழிக்கண் உருவாகிறது. அதன் சுழிக்கண் அமைதியாகவும் தெளிவாகவும், குறைந்த காற்றழுத்தம் உள்ளதாகவும் இருக்கும்.  உயர் அழுத்த காற்று அந்த மேலிருந்து சுழிக்கண் வழியாக கீழ் நோக்கி பாயும்.சுழலுகின்ற சூறாவளி காற்றின் வேகம் 39 மைல்/மணிக்கு எட்டும்போது அந்த சூறாவளியை ”வெப்ப மண்டல சூறாவளி” என்று
அழைக்கிறார்கள்.. அதுவே  74 மைல்/மணிக்கு எட்டும்போது அலுவல மொழியாக “ட்ராபிகள் சைக்ளோன்” (தமிழில் வெப்ப மண்டல புயல் எனலாம்) அல்லது ஹரிகேன் என அழைக்கிறார்கள்..

இந்த (வெப்ப மண்டல) புயல்கள்  நிலப்பகுதியை தொடும்போது தன் வலுவை இழக்க தொடங்கும். காரணம், அவற்றுக்கு, இனி மேலும் சூடான கடல்நீரின் ஆற்றல் ஊட்டப்படுவது இல்லை.அதாவது நிகழ்வு (1)நடை பெற வாய்ப்பு இல்லாமல் போகிறது. இருப்பினும், அவை உள்நாட்டில் வெகு தொலைவு நகர்ந்து முற்றிலும் மடிவதற்குள்,  பல சென்டிமீட்டர்  மழையை கொட்டுவதோடு, காற்றினால் விளையும் சேதங்களுக்கும்  காரணமாகிறது.

(வெப்ப மண்டல) புயல்களின் வகைப்பாடுகளை நாசா வடிவமைக்கிறது . 

அமெரிக்க தேசீய கடல் மற்றும் வளிமணடல நிருவாகத்துறைனரால் இயக்கபப்டும் GOES செயற்கஈகோள்கள்  தரைமட்டத்தில் இருந்து 23,000 அடி  உயரத்தில் நிலைகொண்டு இந்த புயல்களை கண்காணித்துக்கொண்டு இருக்கின்றன.. இக்கோள்கள் எடுக்கும் படங்கள் , வானிலை முன்னறிவிப்பாளர்களுக்கு புயல்கள் எங்கு எப்போது தோன்றும் என கணித்து சொல்வதற்கு உதவுகின்றன.இதனால்  பல உயிர்களை காக்க முடிகிறது .மேலும் தகுந்த முன்னேற்பாடுகளையும் எடுக்க முடிகிறது.

சரி இந்தப் புயல்களின் பெயர்கள்?உலகில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையங்கள்  தங்களுக்குள் ஒரு குழு அமைத்துக் கொண்டு கடல்களை பிரித்துக் கொண்டு  ஒவ்வொரு கடலிலும் உருவாகும் அல்லது உருவாகப் போகும் புயல் களுக்கு பெயர்களை  சூட்டுகின்றன.அந்தப் பெயர்கள்  சுழற்சி முறையில்  ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயராக   வைக்கப் படும். (ஒவ்வொரு  முறையும் ஒவ்வொரு  நாடு வைக்கும் பெயர் )ஏனென்றால் பிற்காலத்தில் எந்தப் புயலால்  எவ்வளவு சேதம் விளைந்தது என்பதை அறிய ஏதுவாக இருக்கும் என்பதால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக