இந்த வலைப்பதிவில் தேடு

சனி, நவம்பர் 03, 2012

அன்பே உன்னை மறக்கவேண்டும்....!

அன்பே ,
உன்னை நான் மறக்க வேண்டும்
அதற்கு 
என்னை நான் மறக்க வேண்டும்.

என் மூளையில் செதுக்கிய சிற்பமாய் இருக்கும்
உன்னை நான் 
அப்போது தான் மறக்க முடியும்...

அன்பே
உன்னை நான் மறக்க வேண்டும்..
அதற்கு  
நான் இறக்க வேண்டும்..

என் நாடி நரம்பு இரத்தம் சதை
எல்லாவற்றிலும் கலந்து விட்ட
 உன்னை  நான் 
அப்போது தான்  மறக்க முடியும்...

பள்ளியில் படித்த பாடங்கள் மறந்தேன் -- வளர் 
 பருவத்தில்  கிடைத்த  நண்பர்கள் மறந்தேன்...
சொந்த பந்தங்கள்  இழப்பையும் மறந்தேன்...
சுமந்து பெற்ற தாயையும்  மறந்தேன்...

வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் மறந்தேன்.
வளர்த்து  ஆளாக்கிய தந்தையையும் மறந்தேன்....
நாவினால் சுட்ட வடுக்களை மறந்தேன் ..
 நாளதில் செய்த நன்றி   கூட மறந்தேன்...!

ஆனால்
உன்னை என்னால் மறக்க முடியவில்லை..!

அன்பே ..
உன்னை நான் மறக்க வேண்டும்..
அதற்கு
 என்னை  நான் மறக்கவேண்டும் 
இல்லை என்றால்  நான் இறக்க வேண்டும்..!

என்னையே நான் மறந்தாலும்
என் உயிரை நான் இழந்தாலும்
எப்போதும் நீ
நலம் வாழ  வேண்டும்
அந்த இறைவன் 
உன்னைக்  காக்க வேண்டும்...!

2 கருத்துகள்:

Srirangam Nana சொன்னது…

Very Nice one!

அந்த இறைவன்
உன்னைக் காக்க வேண்டும்...!

Ragavmurali சொன்னது…

பாராட்டிற்கு நன்றி....!

கருத்துரையிடுக