இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஜூன் 16, 2012

பெண்கள்...!




 நல்ல குணவதியான பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?ஒரு பெண்ணை, மனைவியை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்...?
அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

எதிர்காலக்குடும்ப நிம்மதியையும் ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.

கார்யேஷூதாசி
கரணேஷூ மந்திரி
ரூபேஷூ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷூ மாதா
சயனேஸூ வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம்பத்தினி

-சேவை செய்வதில் தாசியைப் போலவும்,
யோசனை சொல்லுவதில் மந்திரியைப்போலவும்,
அழகில் லட்சுமியைப் போலவும்,
மன்னிப்பதில் பூமாதேவியைப்போலவும்,
அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,
மஞ்சத்தில் கணிகையைப் போலவும்,
நடந்து கொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்று பழமொழிக்கேபக்கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுகு வந்த சில நாள்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும். (வடமொழியில் தாசி என்றால் அடிமை)

அவள் கல்வியறிவுளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.

‘பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்.’ என்கிறார்களே, அந்தமகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.

அழகு, என்றால் முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகுபின்னால் வருவோருக்குத் தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும்பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல;

காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிகை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துகு மஞ்சள் பூசி, குங்கும்ப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழைகையே, ‘மாகலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.

அவள் பார்க்கும்போதுகூட நேருக்குநேர் பார்க்கமாட்டாள்.

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்”

- என்றான் வள்ளுவன்.

ஒரு கண் சிற்க்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவளே.

எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்ற அதிர்ச்சியைத் தருமென்றால் மகாலட்சுமி மோற் குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.

இடி தாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டுவிடுவது போல் அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.

ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்ட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுஇயின் இதயமாகவே காட்டுகிறது.

பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.

கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.

அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

நல்ல குலப் பெண்களால் அது முடியும். அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்க வேண்டும்.

‘தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.

பள்ளி அறையில் அவள் கணிகையைப் போலவே நடந்துகொள்ள வேண்டும். கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்க வேண்டும்.

மீண்டும் அவளையே பார்க்க வேண்டும். என்ற ஆசை கணவனுக்கு எழ வேண்டும்.
-அப்படிப்ட்ட ஒருபெண்ணைத் தன்பத்தினியாக ஏற்றுக்கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை. வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.

நல்ல பெண்ணை மணந்தவன்,முட்டாளாய் இருந்தாலும், அறிஞனாகிவிடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது !

தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும் முட்டாளாகி விடுகிறான். அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது ! !.


நன்றி:கவியரசர் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்" 

மேலும் பார்ப்போம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக