இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, ஜூன் 08, 2012

எல்லாம் ஒரு நாள் முடிந்துபோகும்....!

                                நினைத்துப் பார்க்கிறேன். வியப்பாக இருக்கிறது.பணம்,வேலை,பதவி,இன்பம்,துன்பம்,அந்தஸ்து,காதல்,உறவுகள்,  நட்புகள் எல்லாம் எதோ ஒரு நாள் எதோ ஒரு புள்ளியில் முடிந்துபோய்விடுகிறது. ஆனால் எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் நிலையாய் இருக்கும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. தமக்கு வேண்டியவை என்றும்,வேண்டாதவை என்றும் பிரித்து எல்லைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் செய்யும் கூத்து என்ன ?
ஆட்டம் என்ன?மற்றவர்களுக்கு செய்யும் தீங்குகள் என்ன?

கடந்த காலங்களில் மற்றவர்களை  மட்ட ரகமாக நடத்தியவர்களும்,
பேசியவர்களும், அவமானப் படுத்தியவர்களும்  இன்று இவ்வுலகில்  இல்லை. நினைத்தால் சிரிப்பு கூட வருகிறது!நான் எந்த தவறும்  செய்யாத போதும் என்னை வீட்டிற்குள் வரக்கூடாது என்றவர்களும் என்னைக் கெட்டவன் போல சித்தரித்தவர்களையும் இன்று காணவில்லை. ஏன் என் வாழ்க்கையில் ?உங்கள் வாழ்க்கையில் கூட அவ்வாறு கண்டிப்பாக நடந்திருக்கும்.இவ்வாறு அவமானப் படுத்தி அவர்கள் என்ன சாதித்து விட்டார்கள்?

போகும் வழியில் உள்ள ஒரு பழைய வீட்டினைப் பார்க்கிறேன்.இதில் எத்தனை தலைமுறையைச் சேர்ந்த எத்தனை பேர் வாழ்ந்திருப்பார்கள்?அவர்களெல்லாம் இன்று எங்கே? அவர்களில் எத்தனை பேர் நல்லவர்களாக இருந்திருப்பார்கள்.எத்தனை பேர் கொடுமைக் காரர்களாக இருந்திருப் பார்கள்?
நல்லவர்களை நிச்சயம் யாராவது இன்றும் பாராட்டிக் கொண்டிருப்பார்கள்.கெட்டவர்களை  தூற்றிக் கொண்டிருப்பார்கள்,அல்லது மறந்துவிட்டிருப்பார்கள்.!

நடிகர் அஜித் ஒரு பேட்டியில் கூறும் போது "என்னை எத்தனையோ பேர் திட்டி இருக்கிறார்கள்  ,எனக்கு கெடுதல் செய்து இருக்கிறார்கள்.ஆனால்  நான் யாருக்கும் தீங்கு நினைப் பதில்லை.அவர்களுக்கும் நான் நல்லதையே நினைக்கிறேன்.அவர்கள் என்றோ ஒரு நாள் என்னைப் பற்றி புரிந்து கொள்வார்கள்.அட்லீஸ்ட் நான் இறந்த பிறகாவது என்னைப் புரிந்து கொண்டு இத்தனை நல்லவரை நாம் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என நினைத்து எனக்காக ஒரு சொட்டு கண்ணீர் விட்டால்  அதுவே எனக்கு போதும்" என்று சொல்லியிருந்தார்.எத்தனை பக்குவப் பட்ட வார்த்தைகள்?நானும் அதுபோலவே இருக்க ஆசைப் படுகிறேன். என்னைப் போற்றுபவர்கள் போற்றட்டும் .தூற்றுபவர்கள் தூற்றட்டும். எல்லோரும் நலமாக வாழவே நான்  வணங்கும் அந்த மகான் ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டுகின்றேன். 

"எல்லாம் ஒரு நாள்  முடிந்து போகும் " எத்தனை  சத்தியமான வார்த்தைகள்? அதை  எப்போதும் எல்லோரும் நினைவில் கொள்வோம்.அகங்காரங்கள் நீங்கி அன்புடன் வாழ்வோம்! 

இன்னும் வரும்...

2 கருத்துகள்:

Srirangam Nana சொன்னது…

எல்லாம் ஒரு நாள் முடிந்துபோகும்... .என்று நினைத்தால் இனிக்கவில்லை ..இது விரக்தியின் வெளிப்பாடு என்றே சொல்லுவேன் ..பதிவை படித்துவிட்டு என்னமா..தெளிவாய் எழுதி இருக்கான்னு சில கணம் சிந்தனையில் இருந்தேன் .ஒரு நண்பரின் ஈமெயில் வந்தது .அதை படித்த பிறகு சிந்தனையில் இருந்து விடுபட்டு விட்டேன் ..அதை இப்படியே இங்கே கொடுதுவுள்ளேன்...இதை படித்துவிட்டு ..எண்ணங்களை பதப்படித்தி கொண்டால் ..நினைவுகள் என்றுமே நினைத்தாலே இனிக்கும் ...


Law of the Garbage Truck
One day I hopped in a taxi and we took off for the airport
We were driving in the right lane when suddenly a black car jumped out of a parking space right in front of us.
My taxi driver slammed on his brakes, skidded, and missed the other car by just inches! The driver of the other car whipped his head around and started yelling at us.
My taxi driver just smiled and waved at the guy. And I mean, he was really friendly.
So I asked, 'Why did you just do that? This guy almost ruined your car and sent us to the hospital!'
This is when my taxi driver taught me what I now call, 'The Law of the Garbage Truck.'

He explained that many people are like garbage trucks. They run around full of garbage, full of frustration, full of anger, and full of disappointment.
As their garbage piles up, they need a place to dump it and sometimes they'll dump it on you.. Don't take it personally.

Just smile, wave, wish them well, and move on. Don't take their garbage and spread it to other people at work, at home, or on the streets.
The bottom line is that successful people do not let garbage trucks take over their day.
Life's too short to wake up in the morning with regrets,
so .... Love the people who treat you right. Pray for the ones who don't.

Life is ten percent what you make it and ninety percent how you take it!

Have a garbage-free day!

Ragavmurali சொன்னது…

நன்றி நாராயணன் .இது விரக்தியல்ல .வாழ்கையில் ஒரு பக்குவம்.மீண்டும் இது பற்றி நான் எழுதுகிறேன்.

கருத்துரையிடுக