இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஜூலை 05, 2012

ஸ்ரீரங்கம்...3 !

             சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் வரும் அந்த கீழச் சித்திரை வீதியின் மதிலுக்கு பின்புறம் வெளிப்பக்கம் அமைந்தது எனது அடயவளஞ்சான் வீதி!கிழக்குப் பகுதியில் இருப்பதால் கீழ அடயவளஞ்சான்.ரயில்வே ஸ்டேஷன் ,தேவிடாகீஸ் பஸ் ஸ்டாப் ,பூச்சந்தை காய்கறி மார்க்கெட் போன்று எங்கு செல்ல வேண்டுமானாலும் உள்  பக்கம் சித்திரைவீதி உத்திரை வீதிகளில் உள்ளவர்கள் எங்கள் தெருவின் வழியாகத்தான் செல்ல வேண்டும்!சுஜாதா உட்பட!மேலும் பாய்ஸ் ஹை ஸ்கூல் ,கேள்ஸ் ஹை ஸ்கூல் செல்பவர்களும் எங்கள் வீதி வழியே தான் செல்ல வேண்டும்.போஸ்ட் ஆபீஸ்  கூட எங்கள் தெருவில் தான் இருந்தது!

எனவே ஸ்ரீரங்கத்தில் எங்கள் தெரு ஒரு vip  அந்தஸ்து பெற்ற வீதி.ஸ்ரீரங்கத்தின்  எந்தப் பகுதியில் இருப்பவர்கள் என்றாலும் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக எங்கள் தெருவிற்கு வந்தே ஆக வேண்டும்!இதனால் எங்கள் தெருவில் குட்டிச் சுவரின் மேல் உட்கார்ந்து கதை பேசும் எங்கள் வட்டம் பிரபலமானது.வெள்ளித்திருமுத்தம்  பெரிய  வீட்டில் தான் அத்தனை பசங்களும் விளையாடுவோம்.அந்த  வீடு பெரிய கிளப் போல காட்சி அளிக்கும்.அங்கே விளையாடாத விளையாட்டுக்களே கிடையாது.கிரிகெட்,வாலிபால்,சீட்டுக் கட்டு,கேரம் ,செஸ் போன்ற எல்லா விளை யாட்டுகளுக்கும் அங்கே இடம் உண்டு. டெலிவிஷன் வந்த புதிதில் அங்கே அதுவும் வந்து விட்டது.சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் எங்கள் தெரு முழுக்க அங்கே தான் இருக்கும்.

இப்போது அது ஒரு அழகிய நவீன திருமண மண்டபமாக மாறிவிட்டது.அதனைக்  கட்டிய engineer அடியேன் தான்! அந்தப் பழயவீட்டினை இடித்து  தரை மட்டமாக்கிய போது இரண்டு நாட்கள்   எனக்கு சாப்பாடு  தண்ணீர் இறங்க வில்லை. இப்போதும்  சில சமயம்  அந்த திருமண மண்டபத்தின் முன் நின்று  பழைய  நினைவுகளை அசை போடுவதுண்டு....

அந்தப் பழைய நினைவுகளை .....

நினைத்தாலே இனிக்கும்....!


இன்னும் வரும்....          கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக