இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், அக்டோபர் 30, 2012

மனம்...10 !

மனதைப் பற்றி எழுதி நாளாகிவிட்டது.!

கட்டிலில் படுத்துக் கொண்டு மனதை ஓடவிட்டேன்.நமது ஒவ்வொரு செயலையும் நமது மனம் தான் தீர்மானிக்கிறது. கண்ணதாசன் ஒரு பாடலில் எழுதி இருப்பார்."உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை!" 
அருமையான வார்த்தைகள்.
இரவு நேரம் ஒரு சுடுகாட்டின் வழியே செல்லவேண்டும்.சிலர் என்ன சொல்கிறார்கள்?அப்பா சுடுகாட்டுப் பக்கமா,இந்த நேரமா,நான்வரமாட்டேன் என்கிறார்கள்.வேறு சிலரோ அட ,என்ன பயம் வேண்டி கிடக்குது?நான் போறேன் வர்றதா இருந்தா  வா.இல்லைன்னா விடிஞ்சதும் வா.என்று கூறிவிட்டு நடையைக் கட்டுகிறார்கள்.
இரண்டு பேருக்குமே அவர் மனது சொல்வது தானே? ஒருவருக்கு பயம்.மற்றவருக்கு பயம் இல்லை.இரண்டையும் மனது தானே தீர்மானித்தது?
இதே போல ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்க்கலாம்.எல்லோருக்குமே பெரும்பாலும் நாளை என்ன ஆகுமோ என்ற பயம் தான் முன்னே நிற்கிறது.பரீட்சையில் பெயில் ஆனா என்ன பண்ணறது?கல்யாணம் நின்னு போயிட்ட என்ன பண்ணறது?வேலை போய் விட்டா  என்ன பண்ணறது? அவர் தப்பா  நினைப்பாரோ? இவர் திட்டுவாரோ என எல்லாவற்றிலும் மனம் எதிரிடை யாகவே நினைக்கிறது.
இப்படி எதிரிடை யாக நினைக்கும் போது தான் வாழ்க்கையைப் பற்றிய பயம் வருகிறது.
ஆனால் உண்மையில் நடப்பது என்ன? எல்லோரது வாழ்க்கையிலும் அவர்கள் நினைப்பது போல எல்லாவற்றிலும்  எதிரிடை யாக நடப்பது இல்லை.கிட்டத்தட்ட 90% நாம் நினைப்பது போலவே எதிரிடையாக நடப்பதில்லை எனவும் நாம் தான் எதிரிடையாக  நினைத்து வீணாக பயந்து மனது ஒடிந்து போகிறோம் என மன நல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
எண்ணிப் பாருங்கள் .அப்படியே எதிரிடையாக நடந்து விட்டாலும் தான் என்ன செய்யப் போகிறோம்? அதைக் கடந்து தானே வரப் போகிறோம்? பின் எதற்காக  முன்னமே  அதை நினைத்து வருந்த வேண்டும்-பயப் பட வேண்டும்.?
நமது மனது என்ன நினைத்தாலும் இரண்டே இரண்டு சாத்தியக் கூறுகள் தான் உள்ளன. ஒன்று பயப்படுவது போல ஒன்றும் நடக்கப் போவது இல்லை. அல்லது பயந்தது  போலவே நடந்து  விடும்.
 நாம் பயந்தது போல நடக்கவில்லையானால்  முன்பு அதை நினைத்து நாம் மனத்தைக் குழப்பிக் கொண்டது  தான் மிச்சம்.
நினைத்ததுபோலவே நடந்து விட்டால் மட்டும் என்ன செய்யப் போகிறோம்? அதைக் கடந்து வந்து தானே ஆக வேண்டும்?

இன்னும் அலசுவோம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக