இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஏப்ரல் 20, 2013

உண்மைக் காதல் மாறிப் போகுமா...?

 
 
கோடையில் நதிகள் வற்றிவிடும்
நதியே அழிந்து போகுமா என்ன ...
மழையினில் மீண்டும் வெள்ளம் வரும்
நதியும் வளைந்து நெளிந்து ஓடும்  ..
நாணலும் கரையினில் வளைந்து ஆடும்...!

மேகங்கள் நிலவினை மறைக்கக்  கூடும்..
நிலவே அழிந்து போகுமா என்ன..
மேகங்கள் விலகி கரைந்து போகும்
மீண்டும் நிலவு வெளியில் வரும்....
வெள்ளிபோல் குளிர்ச்சியான வெளிச்சமும் தரும்...!

இலையுதிர் காலத்தில் மரம் கிளைகளாய்த்  தேயும்...
மரமே அழிந்து போகுமா என்ன
வசந்தத்தில் மீண்டும் இலைகள் வளரும்
மரமும் பசுமையாய் மீண்டும் தளிரும் ...
பூக்களும் பூத்து புன்னகையும் புரியும்....!

வாழ்வினில் துன்பங்கள் வரக் கூடும்...
வாழ்வே முடிந்து போகுமா என்ன...
இன்பங்கள் மீண்டும் திரும்ப வரும்
இனிய வாழ்க்கை அதைத் தொடர்ந்து வரும் 
உறவும் நட்பும்  உன்னைத் தேடிவரும் .!
 
உண்மைக் காதலும் அதுபோல -
உலகிற்காக மறைத்து விட்டாலும்
இதயத்தில் சுவடாய்ப் பதிந்திருக்கும் 
இறக்கும் வரையினில் நிலைத்திருக்கும்..
எங்கோ ஒரு மூலையில் வாழ்வின் நெருடலாய்.....!



 

2 கருத்துகள்:

Srividhya சொன்னது…

Unakku Unmayaagave oru Kaadhali irukkiraal endru vaithuukol. Nee avalai evvaaru eppodhume un kannin karu vizhi pola vaithukkolvaai? Sivan Parvathy pol, unnil irandara kalandha avalai, aval udambil oru maatram nigazhndhalum evvaru arivaai? Yaen endral, unadhu idappaagam aval dhane?? Aval illayenil un idappaagam seyal izhandhu vidume!!

ஸ்ரீரங்கம் A.S.Murali சொன்னது…

உனக்கு உண்மையாகவே ஒரு காதலி இருக்கிறாள் என்று வைத்துக்கொள் . நீ அவளை எவ்வாறு எப்போதுமே உன் கண்ணின் கரு விழி போல வைதுக்கொள்வாய்? சிவன் பார்வதி போல் , உன்னில் இரண்டற கலந்த அவளை , அவள் உடம்பில் ஒரு மாற்றம் நிகழ்ந்தாலும் எவ்வாறு அறிவாய் ? ஏன் என்றல் , உனது இடப்பாகம் அவள் தானே ?? அவள் இல்லையெனில் உன் இடப்பாகம் செயல் இழந்து விடுமே ! !- SRVIDHYA

இடப் பாகம் வலப் பாகம் எல்லாம் இருவரும் பாதிப் பாதி என்பதற்காக சொன்னது.ஆனால் நான் முன்பே எழுதியிருந்த படி,

"எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பதனாலே வேறென்ன வேண்டும்..?

என்பதே உண்மையான காதல்.

"உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி.."

என்று வாழ்வதே உண்மையான காதல்.இது இருவரும் சேர்ந்து இல்லறம் நடத்தும் போது தானாகவே உணரப்படும்.முன்பே ப்ளான் செய்து கொண்டு வாழ்வதல்ல காதல் உணர்வுப் பூர்வமாக அனுபவிப்பதே காதல்....

கருத்துரையிடுக