இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், பிப்ரவரி 23, 2017

ஷீரடி தரிசனம்....


எங்கள் குழுவில் அனைவரும் ஏற்கெனவே பலமுறை விமானப் பயணம்  செய்தவர்கள் 

ஆகையால்  எல்லோருக்கும்  அதன் பார்மாலிட்டீஸ்   அத்துப் படி . எல்லாம் முடிந்து விமானத்தில் ஏறினோம்.

காலை சரியாக 5.35 க்கு விமானம் மேலே பறந்ததது. கீழே வேடிக்கை பார்ப்பது எல்லாம் விமானம் மேலே 

செல்லும் வரை தான் .அதன் பிறகு ஒரே போர் ..விமானம் பறப்பது போலவே இருக்காது.எதோ மேலே ஒரு 

இடத்தில் நாம் நின்று கொண்டு இருப்பது போலத்தான் இருக்கும்.


எல்லோரும் பணிப்பெண்களை பார்த்து ஜொள்ளு விட்டபடி பயணித்தோம்.ஏராளமான உதட்டுச் 

சாயத்துடன் சிகப்பான உதடு, சுமாரான அழகுடன் இருந்தார்கள். காலை நேரம் ஆதலால் சிறிய 

சிற்றுண்டி   பேக் தந்தார்கள்.சைவம் அசைவம் இரண்டும் இருந்தது.கோவிலுக்குச் செல்வதால் எங்கள் 

குழுவில் அனைவரும் சைவமே வாங்கினோம்.. மிகவும் மோசமான ஒரு உணவாக அது இருந்தது.

பாவம்,கடமைக்காக  ஒரு சிற்றுண்டியை தருகிறார்கள்.( ஜெட் ஏர் வேஸ் )


எங்கள் குழுவுடன் பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு குடும்பமும் பயணித்தது. அதில் வந்த ஒரு வயதான பாட்டி 

தனது முந்தய விமான பயணங்களின் அனுபவங்களை கூறிய படி வந்தார்.சிங்கப்பூர் ,மலேசியா உள்பட பல 

நாடுகளுக்கு சென்றவாரம்...!  இந்த முறை இரண்டு மருமகள் களைக்  கூட்டி வரவில்லை என்றும் அடுத்த 

முறைக்கு கூட்டி வர வேண்டும் என்றும்  கூறினார்.
  .

சிற்றுண்டியோடு காபி அல்லது டீக்கு என சிறிது சர்க்கரை மற்றும் பால் பவுடர் பாக்கெட் ட்டும் கொடுத்தனர். 

ஆனால் கடைசி வரை  டிகாக்ஷனைக் கண்ணில் காட்டாததால் அது வீணானது.நான் அப்படியும் விடாமல் 

டிகாக்ஷனைக் கேட்டேன்.. விமானம் இறங்கப்  போகிறது சாரி என்றாள்  அந்த பணிப் பெண்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக