இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, அக்டோபர் 09, 2011

கவியரசர் கண்ணதாசன்...!

..இது வரை நாம் எல்லோரும் கவியரசர் கண்ணதாசனின் கடைசிப் பாடல்  மூன்றாம் பிறை படத்தில் வந்த "கண்ணே கலைமானே "என்ற பாடல் தான் என்றே நினைத்து வந்தோம்.திரை உலகினர் கூட அந்தப் பாடலையே பிரதானமாக கூறிவருகின்றனர். ஆனால் கவியரசர் கண்ணதாசனால் எழுதப் பட்டு வெளியான கடைசிப் பாடல்  மதர் லேன்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பியின் தயாரிப்பில் வெளியான " உன்னை நான் சந்தித்தேன் "என்ற படத்தில் வரும் "தேவன் தந்த வீணை" என்ற பாடல் தான் என்பது  யாருக்கும் தெரியவில்லை!  அதில் கடைசி கடைசி யாக அவர் எழுதியிருக்கும் வரிகளைப் பாருங்கள்...
                
                    வானம் எந்தன் மாளிகை -வையம் எந்தன் மேடையே..        
                  வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள் ....
                   எங்கிருந்தேன் இங்கு வந்தேன்
                    இசையினிலே எனை மறந்தேன்...
                     இறைவன் சபையில்  கலை(வி)ஞன் நான்..!

 எப்படிப் பட்ட வைர வரிகள்.?இதுதான் கடைசிப்பாடலாக இருக்க வேண்டும் என நினைத்தே எழுதி இருப்பாரோ ?
         
கூடுதல் தகவல் ....மூன்றாம் பிறை( சாத்மா) வெளியானது 28 .08 .1983 
                                     உன்னை நான் சந்தித்தேன்  வெளியானது 17 .10 .1984 
(சென்சார் certificate இன் படி ) ----நன்றி  you tube !

1 கருத்து:

Srirangam Nana சொன்னது…

ஒரு சின்ன திருத்தம் ..முரளி அது பாடல் வெளி வந்த வரை சரியானதே..அனால்..! தேவன் தந்த வீணை சினிமாவிற்காக எழுதுயது இல்லை...பழைய கவிதை தொகுப்பிலிருந்து எடுத்துகொண்டது. ஸ்டுடியோவில் கண்ணதாசன் கடைசியாக எழுதியதுதான் கண்ணே கலைமானே..இது இளையராஜா நிகழ்ச்சியில் சொன்னது..

கருத்துரையிடுக