இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், அக்டோபர் 04, 2011

மனம்.....2 !

 மனதை  அடக்க வழி உண்டா...?                        

முதலில் மனதைப் பற்றி புரிந்துகொண்டால் அதனை அடக்கும் வழியினைக் கண்டு கொள்ளலாம்!

ஜென் என்ன சொல்கிறது மனதைப் பற்றி? 

ஜென் சொல்கிறது மனதினை ஒரு கோப்பை என்று. அதாவது ஒரு கோப்பையில் நாம் எதை வேண்டுமானாலும் போட்டு நிறைத்துக் கொள்ளலாம். அதே போல நாமும் நமது மனம் என்னும் கோப்பையில் பலவற்றை பலவாறாகப் போட்டு நிரப்பி வைத்து விடுகிறோம்!  

 இன்னும் விளக்கமாகச் சொல்ல  வேண்டுமானால்  நாம் முன் பின் அறிந்திராத ஒரு நபர். அவரை நமக்கு- நமது நண்பர் அறிமுகம் செய்து வைக்கிறார் என்று கொள்வோம். அப்போது முதல் நமது மனம் என்னும் கோப்பையில் அவரைப் பற்றிய நினைவுகளை நிரப்பி விடுகிறோம்.எப்படி?நமது நண்பர் அந்த புதியவரைப் பற்றி என்னவெல்லாம் சொன்னாரோ அப்படியே.

நமது நண்பர் அவரைப் பற்றி நல்ல விதமாகச் சொன்னால் அவரை நல்லவராகவும் வேறு ஏதாவது கெட்ட விதமாகச் சொன்னால் அவரை கெட்டவராகவும் நாம் நம் மனதில் உருவகம் செய்து விடுகிறோம். அது முதல் அவரை அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.  

எப்படி ஒரு கோப்பையில் டீயை ஊற்றி விட்டால் பிறகு அதில் காப்பியை யோ தண்ணீரையோ  ஊற்றமுடியாதோ அதே போல.

மீண்டும் அந்தக் கோப்பையில் காப்பி யையோ தண்ணீரையோ ஊற்ற வேண்டுமானால்  முதலில் அந்தக் கோப்பையை காலி செய்ய வேண்டும்.! 

அதே போல அந்த புதிய நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிய வேண்டுமானால் நமது நண்பர் ,அந்தப் புதியவரைப் பற்றிக் கூறியதை முதலில் தள்ளி வைக்க வேண்டும்.அதன் பிறகு நாம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயல வேண்டும்.

 இப்படி நாம் அவருடன் பழகிய பின்பு அவரைப் பற்றி எடை போட்டு அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு முடிவிற்கு வரவேண்டும்.சரி அவரைப் பற்றிய ஒரு முடிவிற்கு வந்துவிடோம். அவர் மிகவும் நல்லவர் என முடிவு செய்து விட்டோம்.
 இப்போது நமது மனம் என்னும் கோப்பையில் அவருக்கென்று உள்ள இடத்தில் அவரை நல்ல மனிதராக நிரப்பி விட்டோம்.இனி அவரை காணும் போதெல்லாம்  அவருடன் பேசும் போதெல்லாம்,அவருடன் பழகும் போதெல்லாம் அவரை மிகவும் நல்ல மனிதராகவே பார்க்கிறோம். 


 ஒரு நாள் அவர் நம் எதிர் பார்ப்புகளை மீறி நடந்து கொள்கிறார்..! ஐயோ அவரா இப்படி? நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவே இல்லை.இவருக்குப் பின் இப்படி ஒரு மனிதரா? என்று பலவாறாகப் புலம்புகிறோம்.அவரிடம் ஏமாந்து விட்டோமே என அழுகிறோம். ஏன் இப்படி நடக்கிறது?

இதற்குக் காரணம் நமது மனம் தான்! நமது மனதில் அவரை நல்லவராக உருவகம் செய்து விட்டோம். நாம் உருவகம் செய்ததற்கு மாறாக அவர் நடந்து கொள்ளும் போது நமது மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எப்படி காப்பி ஊற்றப் பட்டக் கோப்பையில் டீ யை ஊற்ற முடியாதோ அதே போல..!
  
எனவே ஏமாற்றம் அடைந்த மனம் பலவாறாகப் புலம்பு கிறது.

அப்படி என்றால் மனம் தரும் இம்மாதிரியான  துன்பங்களிலிருந்து  மீள வழியே இல்லையா?  உண்டு......!

ஓஷோ சொல்கிறார்...மனம் ஒரு கோப்பை என்றால் அதில் கண்டதையும்  போட்டு நீ நிரப்பி விடுகிறாய். பின்பு அதற்கு மாறாக நடக்கும் போது ஏமாற்றத்தினால் புலம்புகிறாய்.எனவே அந்தக் கோப்பையை நீ உடைத்து எரிந்து விடு.இப்போது உன்னிடம் மனம் என்ற ஒன்று இல்லை.அதில் எதையும் போட்டு உன்னால் நிரப்பவும் முடியாது............! !
  

 இன்னும் அலசுவேன்..........

 

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனம் ஒரு கோப்பை என்றால் அதில் கண்டதையும் போட்டு நீ நிரப்பி விடுகிறாய். பின்பு அதற்கு மாறாக நடக்கும் போது ஏமாற்றத்தினால் புலம்புகிறாய்.எனவே அந்தக் கோப்பையை நீ உடைத்து எரிந்து விடு.இப்போது உன்னிடம் மனம் என்ற ஒன்று இல்லை.அதில் எதையும் போட்டு உன்னால் நிரப்பவும் முடியாது............! !/

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

ஸ்ரீரங்கம் A.S.Murali சொன்னது…

நன்றி இராஜேஸ்வரி அவர்களே! தொடர்ந்து படித்து உங்களது ஆக்கப் பூர்வமான கருத்துக்களை எழுதுங்கள்.

கருத்துரையிடுக