(அருள் பார்வை 1 ஐ ப்படித்து விட்டு மேலே வரவும் )
மகான் ஸ்ரீ ராகவேந்திரரை சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் ராயர் என்றே அழைப்பார்களாம் .
மகான் ஸ்ரீ ராகவேந்திரரை சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் ராயர் என்றே அழைப்பார்களாம் .
ஸ்ரீ ராகவேந்திரருக்கு மிகவும் உகந்த வியாழக் கிழமை ,அவரின் கோவில் சென்று வணங்கிவிட்டு வந்த என்னிடம் ,தபால் காரர் அந்த கடிதத்தைத் தந்தார்.ஆர்வம் ஏதுமின்றி அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன்.
ஆச்சர்யம்..! திருச்சி R .E .C .இலிருந்து B .E .Admission கடிதம்!!
என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.கண்களில் ஆனந்தக் கண்ணீர்!எல்லோரிடமும் அந்தக் கடிதத்தைக் காட்டி மிகவும் சந்தோஷப் பட்டேன்.ஏனென்றால் இப்போது போல முன்பு தனியார் கல்லூரிகளெல்லாம் அவ்வளவாக கிடையாது.B.E.சீட் கிடைப்பதும், படிப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல. அதுவும் திருச்சி ஆர்.ஈ.சி! இந்தியாவிலேயே மிகச்சிறந்த இன்ஜினியரிங் காலேஜ் வரிசையில் மூன்றாவது இடம் அன்று.(இப்போது எப்படி?இபோதைய பெயர்-- N I T .?)
காலேஜ் திறக்கும் நாளில், அன்றே காலையில் சேரச்சொல்லி இருந்தது.
காலேஜ் திறக்கும் அந்த நாளில் மிகவும் ஆர்வத்துடன் காலேஜ் சென்றேன்..Administrative பிளாக் இன் பின்புறம் இருந்த ஆடிடோரியம் சென்று காத்திருக்கச் சொன்னார்கள்..அன்று காலேஜ்- ல் புதிதாக சேர்ந்த அனைத்துப் பிரிவு மாணவர்களும் வந்திருந்தார்கள்.நான் சிவில் இன்ஜினியரிங் பிரிவு.என்னுடன் கூட மற்ற பிரிவுகளிலும் கடைசி யாக சேர ஒரு இருபது மாணவர்கள் போல வந்திருந்தனர்
.புதியவர்கள் admission முடிந்ததும் காலேஜ் முதல்வர் வருவார் என்றும்,அனைவருக்கும் முதல் நாள் அறிமுக உரை நிகழ்த்துவார் என்றும்,மறுநாள் முதல் வகுப்புகள் ஆரம்பம் என்றும் கூறினார்கள்.
முன்பே சேர்ந்தவர்கள் எல்லோரும் ஆங்காங்கே குழுமி பேசிக் கொண்டிருக்க கடைசியாக admission லெட்டர் வந்தவர்கள் ஒவ்வொருவராக admission ஆனார்கள்.என்முறை வந்த போது admission பட்டியலைப் பார்த்தவர்கள் பணம் வாங்காமல் என்னை ஒரு ஓரமாக நிற்கச் சொன்னார்கள்
காரணம்... அவர்கள் கையிலிருந்த கடைசிப் பட்டியலில் என் பெயர் இல்லை... !
அற்புதங்கள் தொடரும்.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக