இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், செப்டம்பர் 29, 2011

மனம்..!

மனம்..!
ஒரு வினோதம் .அதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் குழம்பிப் போவோம்!எவ்வளவுவிதமானஉணர்ச்சிகள்.? அன்பு, பாசம் உறவு,பகை,நட்பு,கோபம்,காதல்,காமம்,பழிவாங்கும்உணர்வு,பணிந்துபோகும்
நெளிவு,எதிர்த்துப்பேசும்துணிவு,ஆஸ்திகம்,நாத்திகம்,நயவஞ்சகம்,சூழ்ச்சி,
சண்டை,சமாதானம்,ஆசை,என வளர்ந்து கொண்டே போகும் அனைத்து எண்ணங்களுக்கும்,உணர்வுகளுக்கும்  ஆரம்பப் புள்ளி இந்த மனது தான் அல்லவா?
  
அதனால் தான் அனைத்து யோகிகளும், ஞானிகளும், ரிஷிகளும் மனதைக் கட்டுப் படுத்த வேண்டும் என்று கூறினார்கள். அவர்களாவது  கட்டுப் பாட்டிற்குள் மனதை வைத்திருந்தார்களா என்றால் இல்லை என்றுதான்கூறவேண்டும்!அவர்களுக்குவராதகோபமா,கொடுக்காதசாபமா?ஏன் அவர்களாலேயே கட்டுப் படுத்த முடியவில்லை?  ஒவ்வொரு உணர்சிகளுக்கும்,எண்ணங்களுக்கும் என்ன காரணம்?      

 ஒரு அழகான பெண்ணைப் பார்த்தால் மீண்டும் பார்க்கத்தூண்டுகிறது!சிலரைப் பார்த்தால் நட்பு கொள்ளத்தோன்றுகிறது. சிலரைப் பார்த்தால் எரிச்சல் (காரணமே இல்லாமல்) வருகிறது. எனக்கு அழகாகத் தோன்றும் பெண் என் நண்பனுக்கு அழகாகத் தோன்றுவதில்லை.யார் கண்களில் கோளாறு? 

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். ஆனால் அந்த ஆசைக்கே காரணம் இந்த மனம் தானே? 
ஆக,இந்த மனதினை அடக்கி நமது வழிக்குக் கொண்டு வந்து விட்டால் ....எல்லாதுன்பங்களில்இருந்தும்விடுதலை கிடைத்துவிடுமா?அப்படியென்றால் அதற்கு என்ன வழி?

இன்னும் அலசுவோம் ...!


3 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அன்பு, பாசம் உறவு,பகை,நட்பு,கோபம்,காதல்,காமம்,பழிவாங்கும்உணர்வு,பணிந்துபோகும்
நெளிவு,எதிர்த்துப்பேசும்துணிவு,ஆஸ்திகம்,நாத்திகம்,நயவஞ்சகம்,சூழ்ச்சி,
சண்டை,சமாதானம்,ஆசை,என வளர்ந்து கொண்டே போகும் அனைத்து எண்ணங்களுக்கும்,உணர்வுகளுக்கும் ஆரம்பப் புள்ளி இந்த மனது தான் அல்லவா?

மனம் பற்றிய சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

RAMA RAVI (RAMVI) சொன்னது…

ராகவ் முரளி,தங்களது பதிவு பற்றி வலைச்சரத்தில்(http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_20.html)குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

ஸ்ரீரங்கம் A.S.Murali சொன்னது…

உங்களுக்கு மிகவும் நன்றி ராமா ரவி அவர்களே.ஏராளமான வலைப் பதிவுகளில் என்னுடையதையும் சிறந்த ஒன்றாக -- வலைப் பதிவர்கள் மற்றும் படிப்பவர்கள் மத்தியில் அறிமுகப் படுத்தியமைக்கு .

கருத்துரையிடுக